என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்ய கோரிக்கை விடுத்தனர்
    • ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் பேசும் பொழுது உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைக்கு ஏற்ப நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது. ஆணையர்கள் திலகவதி, நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கந்தர்வகோட்டை பேருந்து நிலைய பணிகளை உடனடியாக தொடங்கிடவும், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள விளக்குகளை பழுது பார்த்து ஒளிரச் செய்யவும், சாலையின் நடுவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும், காவேரி கூட்டு குடிநீர் விநியோகம் முறையாக விநியோகிக்க கூறியும் உறுப்பினர்கள் பேசினார்கள்.

    கந்தர்வகோட்டை தலைமை மருத்துவர் ராதிகா பேசும் போது, கந்தர்வகோட்டைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து தரக் கூறி கோரிக்கை விடுத்தார்.கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியன். ராஜேந்திரன் கலியபெருமாள், பாரதிபிரியா அய்யாத்துரை, திருப்பதி, முருகேசன்மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.நிறைவாக ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் பேசும் பொழுது உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைக்கு ஏற்ப நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


    • ஆலங்குடி அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே செம்பட்டி விடுதி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றுக்கொண்டிருந்த கறம்பக்குடி திருமணஞ்சேரி பட்டத்திக்காட்டை சேர்ந்த செல்லையா மகன் முத்துசாமி (வயது 30) மற்றும் செம்பட்டிவிடுதி கந்தசாமி மகன் சங்கர் (34)ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஆலங்குடி மதுவிலக்கு காவல் நிலைய த்திற்கு அழைத்து வந்தனர் .பின்னர் இருவர் மீது ஆலங்குடி மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் புக ழேந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • இருதரப்பினர் மோதலில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
    • இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த பட்டவையனார் கோவில் அமைந்துள்ளது.இந்த நிலையில் இக்கோவில் வளாகத்தில் கல்வெட்டு வைப்பதென் ஒரு தரப்பினர் முடிவெடுத்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இதனை அறிந்த மற்றொரு தரப்பினர் அதனை தடுத்து நிறுத்தினர்.இதனால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு தரப்பில் இருந்தும் இருவர் காயமடைந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 8 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




    • சுகன்யாவின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மனுவை பெற்றுக்கொண்ட ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மை இருவீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆலங்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடசேரிரோடு பகுதியைச் சேர்ந்தவர் பால்சேகர் மகன் ரோஷ்னேஷ் (வயது 24). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பல்லவராயன்பத்தை ஊராட்சி கொண்டையன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சுகன்யா (24). பி.எஸ்சி. நர்சிங் படித்துள்ள இவரும் ரோஷ்னேசும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இதற்கிடையே சுகன்யாவின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி முடிவெடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டது. ஆனாலும் சுகன்யாவின் பெற்றோர் காதல் கணவரிடம் இருந்து பிரித்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில் ரோஷ்னேஷ் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தானும், சுகன்யாவும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், சுகன்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் சுகன்யாவையும், அவரது பெற்றோரையும் அழைத்து பேசி சுகன்யாவை தன்னுடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மை இருவீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சுகன்யாவின் பெற்றோர் எங்களுக்கு மகள் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இதையடுத்து சுகன்யாவை அவரது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆலங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • சமையல் செய்த போது விபரீதம்
    • மருத்துமனையில சிகிச்சை பலனின்றி சாவு

    ஆலங்குடி, 

    ஆலங்குடி அருகே உள்ள மேலக்கோட்டை தெற்கு பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி பெட்சி (வயது 35). இவர் தனது வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பிடித்து உள்ளது. தீ வேகமாக பரவியதால் அவர் அலறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து காப்பாற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • எதிர்ப்பை மீறி காதலர்கள் பதிவு திருமணம்
    • மகள் வேண்டாம் என்று பெற்றோர் கூறியதால் காதல் கணவருடன் அனுப்பி வைத்த போலீசார்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட் டம் கறம்பக்குடி தாலுகா பல்லவ–ராயன்பத்தை ஊராட்சி கொண்டையன்தெரு பகுதி–யைச் சேர்ந்தவர் சுப்பிர–மணியன் மகள் சுகன்யா (24). பி.எஸ்சி. நர்சிங் படித் துள்ள இவரும் ரோஷ்னே–சும் கடந்த 5 ஆண்டு–களாக காதலித்து வந்துள்ளனர்.இதற்கிடையே சுகன்யா–வின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரி–வித்தனர். இதனால் காதல் ஜோடி முடிவெடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் பதிவு திருமணம் செய்து–கொண்டது. ஆனாலும் சுகன்யாவின் பெற்றோர் காதல் கணவரிடம் இருந்து பிரித்து தங்களுடன் அழைத் துச்சென்றனர்.இந்நிலையில் ரோஷ் னேஷ் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தானும், சுகன்யாவும் 5 ஆண்டு–களாக காதலித்து வந்த–தா–கவும், சுகன்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரி–வித்ததால் பதிவு திருமணம் செய்து கொண்ட–தாகவும் குறிப்பிட்டு இருந்தார்.மேலும் சுகன்யாவையும், அவரது பெற்றோரையும் அழைத்து பேசி சுகன்யாவை தன்னுடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரி–வித்து இருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மை இருவீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சுகன்யாவின் பெற்றோர் எங்களுக்கு மகள் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இதையடுத்து சுகன்யாவை அவரது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர். 

    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள முக்கூட்டுகொல்லையைச் சேர்ந்த பூமி என்பவரின் மனைவி ராஜகுமாரி(வயது 60 ). இவர் தனது காதில் மருந்து ஊற்றி உள்ளார். இதனால் மயக்கம் ஏற்படவே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரைபுதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். வடகாடு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • சி.பி.எம். போராட்டம் எதிரொலி
    • புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் உறுதி

    புதுக்கோ ட்டை.

    புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வீடு, வணிக நிறுவனங்கள், அ லுவலகங்கள் உள்ளிட்ட சொத்துவரிகளை நகராட்சி நிர்வாகம் வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளது. உயர்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், உடனடியாக வரி உயர்வைத் திரும்பப்பெறக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் நகரக்குழு உறுப்பினர்கள் அடைக்கலசாமி, ஜெயபாலன், ரகுமான், பாண்டியன், கணேஷ், நிரஞ்சானதேவி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மகாதீர் மற்றும் வசந்தகுமார், காலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.போராட்டத்தைத் தொடர்ந்து நகராட்சி பொறியாளர் சேகரன், கணேஷ்நகர் காவல் ஆய்வாளர் அப்துல் ஆகியோர் கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவரத்தையில் உயர்த்தப்பட்டுள்ள வரிவிதிப்பை பரிசீலனை செய்வதாகவும், அதிகமாக வரி விதிக்கப்பட்ட பயனாளிகள் புகார் மனு அளித்தால் பரிசீலனை செய்வதாகவும் அதிகாரிகள் உறுயளித்தனர். வரிவிதி ப்புக்கு எதிரான பொது மக்களின் கோரிக்கையை மாநில அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரி வித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது

    • ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்
    • அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு நடைபெற்றது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி பல்லவராயன் பத்தையில் உள்ள அங்காளம்மன் மற்றும்வலம்புரி விநாயகர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுப்பட்டி பல்லவராயன் பத்தை மற்றும் சுற்றுவட் டார பகுதிகளில் உள்ள கோட்டைக்காடு கன்னியான்கொல்லை, கடு க்காக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் விநாயகர் கோயிலி ல் இருந்து முளைப்பாரியை தலையில் சுமந்து வந்தனர். மேள தாள இசை முழக்கத்தோடு வந்த இந்த ஊர்வம்அங்காளம்மன் கோயில் வந்தடைந்தது. அங்கு குதிரை நடனத்துடன் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • ஒரு தரப்புக்கு தெரியாமல் ஒரு தரப்பினர் விழா எதுவும் கொண்டாடக்கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.
    • கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பட்டுக்கோட்டை, அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த பட்டவையா மற்றும் கொம்புக்கார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற்றது.

    அப்போது முதலே கோவிலில் வழிபாடு மற்றும் திருவிழா நடத்துவதில் கோவில் உரிமைக்காரர்களான ஒரே சமூகத்தைச்சேர்ந்த தானான், சின்னத்தானான் வகையறாக்களுக்கும் சிவந்தான், ஏகான் வகையறாக்களுக்கும் பிரச்சினை நிலவி வந்தது.

    பின்னர் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சமாதான கூட்டத்தில் இனிமேல் அக்கோவிலின் திருவிழாவை இருதரப்பினரும் சேர்ந்து நடத்த வேண்டும் எனவும், ஒரு தரப்புக்கு தெரியாமல் ஒரு தரப்பினர் விழா எதுவும் கொண்டாடக்கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    இதனிடையே இன்று ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கோவிலில் பால்குடம் மற்றும் அன்னதான விழா நடத்த திட்டமிட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் நேற்று நள்ளிரவு முதல் அங்கு ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒருதரப்பினர் மட்டும் பால் குடம் எடுப்பு திருவிழா நடத்த முடியாத என்று கூறி அனுமதி மறுத்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பை சேர்ந்தவர் இன்று கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே பட்டுக்கோட்டை, அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இன்று அன்னதானத்திற்காக வெட்டி வைத்திருந்த காய்கறிகள், பால்குடம் எடுப்பதற்காக கொண்டு வந்த பால் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் போலீசார் ஈடுபட்டும் ஏற்காததால் சாலையில் மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கீரமங்கலம் பட்டவையா கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆலங்குடியில் ஆட்டோ சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்
    • ஆன்லைன் அபராதம், எப்சி உரிமையை தனியாருக்கு தாரை வார்ப்பது உள்ளிட்டவற்றை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது

    ஆலங்குடி:

    ஆலங்குடியில் ஆட்டோ சங்கத்தினர் மற்றும் அனைத்து மோட்டார் வாகனங்கள் சார்பில் 15 நிமிடம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்டிஓ அலுவலங்களில் லஞ்சம் வாங்குபதை தடுத்த வேண்டும், ஆன்லைன் அபராதம், எப்சி உரிமையை தனியாருக்கு தாரை வார்ப்பது. கார்ப்பரேட் ஆதரவாக மோட்டார் வாகன சட்டம் திருத்தம் உள்ளிட்டவற்றை கண்டித்து ஆலங்குடியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஆலங்குடி அரசமரம் பஸ்ஸ்டாப் ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையிலும், சந்தப்பேட்டையில் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், வடகாடு முக்கத்தில் பெரியகுமாரவேல் சார்பிலும் ஆட்டோ சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் வம்பன் திருவரங்குளம் ஆகிய இடங்களிலும் ஆட்டோ சங்கத்தினர் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்தில் ஆட்டோ சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் வைத்தியலிங்கம் மற்றும் சிஐடியு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பேரூராண்டார் கோவில் கும்பாபிஷேக விழா பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்
    • ளத்தை தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், இரண்டாவது குரு ஸ்தலமாக விளங்கும் அறம் வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார்க்கோவில் உள்ளது. பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட 700 ஆண்டுகளுக்கு முந்தைய கோ வில் எனக் கூறப்படும் இந்த ஆலயத்தை சுந்தர பாண்டியன் என்ற பாண்டிய மன்னர் கட்டியதாக வரலாறு, இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இந்த பணிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார் பின்னர் அவர் குளத்தை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், நகர செயலாளர் பழனிகுமார், செயல் அலுவலர் பால சுப்பிரமணியன், கோவில் நிர்வாகி பைரவர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


    ×