என் மலர்
புதுக்கோட்டை
- அனுமதி இன்றி மின் இணைப்பு கொடுத்தார்
- விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும் நிலையில் மோசடி
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வடிவேலு. இவரது வீட்டிற்கு மின்சார இணைப்பு வசதி கோரி அப்பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் பரிசீலனை நிலையில் இருந்ததால், உரிய அனுமதி வழங்கப்படமல் இருந்து வந்தது. இந்நிலையில் வடிவேலுவின் வீட்டிற்கு மின் வாரிய ஊழியர் முருகேசன் மின்சார இணைப்பு வழங்கியிருக்கிறார்.இதற்காக அவரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வின் போது, அந்த மின்சார இணைப்புக்கு உரிய அனுமதி இல்லாமல் பெறப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- வேலைக்கு சென்றவர் மாயம்
- வழக்கு பதிந்து தேடி வரும் போலீசார்
ஆலங்குடி
ஆலங்குடி அருகே உள்ள மணவிடுதி கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் மகள் மகாலட்சுமி (வயது 22). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். புதுக்கோட்டை உள்ள தனியார் மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல கடைக்கு சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன பெண் குறித்து அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் பலனில்லை.இது குறித்து செம்பட்டி விடுதி போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை முத்துசாமி (வயது 52 ) கொடுத்த புகா ரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை யாரும் கடத்தி விட்டார்களா? அல்லது காதலனுடன் சென்று விட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
- பாராளுமன்ற கூட்டு குழு ஆய்வு செய்ய வலியறுத்தல்
- கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவ ட்டம் கொத்தக்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியா ளர்களிடம், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசும்போது, தி.மு.க. தலைமை மற்றும் கூட்டணி கட்சிகள் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் எதிரொலியாக ஈரோடு இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி எதிர்பார்த்ததுதான் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று முன்பே கூறியிருந்தேன்.2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மு.க.ஸ்டா லின் முதல்-அமைச்சரான பிறகு நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால் அனைத்து அமைச்சர்களும் தங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்க தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கென்று ஒரு இலக்கணம் உள்ளது. அதானியின் பங்கு சரிவினால் பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள் மற்றும் எல்ஐசி நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. எனவே இது குறித்து கூட்டு பாராளுமன்ற குழு அமைத்து அதானியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்து விசாரணை செய்ய வேண்டும் என்றார்.
- கறம்பக்குடி அருகே டாஸ்மாக் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வளங்கொண்டான் விடுதி ஊராட்சி மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 47). இவர் அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக குடும்பத்தில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. மன வேதனை அடைந்த கருப்பையா கடந்த 1ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கில் தொங்கினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கருப்பையா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி மலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள கட்ராம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் கதிரேசன் (வயது 42). இவர் சாலையோரம் பாத சாரியாக நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் கதிரேசன் பலத்த காயமடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதையடுத்து கதிரேசன் வடகாடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்கு பதிவு செய்து செய்து விசாரித்து வருகிறார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்
- வல்லத்திராக்கோட்டை போலீசார் விசாரணை
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள எரிச்சி கருமேனியோடையைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் சொக்கலிங்கம் (வயது 55). இவர் அறந்தாங்கி கத்தக்குறிச்சி பிரதான சாலையில் நடந்து சென்ற போது மயங்கிய நிலையில் கீழே அமர்ந்துள்ளார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சொக்கலிங்கம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து சொக்கலிங்கம் மனைவி கலைச்செல்வி (45) வல்லத்திராக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார்
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சி ஆண்டிக்கோண்பட்டி கிராமத்தை வேர்ந்தவர் மாரிமுத்து மகன் விக்ரம் (வயது 19). இவர் 9ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்து இறந்து விட்டார். இவருக்கு மனைவி கலா (35) மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் விக்ரம் கடந்த 24ம் தேதி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பூஞ்செடிக்கு அடிப்பதற்கு வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருத்து குடித்துவிட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் விக்ரம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இவரது உடல் பிரதே பரிசோதனை செய்த பின்னர் அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து மாரிமுத்து மனைவி கலா ஆலங்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- போதைக்கு எதிராக பொதுமக்களிடம் நடத்தப்பட்டது
- நான்கு இடங்களில் நடைபெற்றது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒவ்வொரு தாலுகாவாக போதைக்கு எதிராக போதை கலாச்சாரத்தால் சீரழியும் சமூகத்தை மீட்டெடுக்க ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கி நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் வல்லத்திராரக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன், ராஜஜெயரஞ்சன், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், வேங்கிடகுளம் மற்றும் திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்ம, மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், ஆலங்குடி மருத்துவர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் நான்கு இடத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரிடமும் மேல தாளங்கள் முழங்க நடன இயக்கத்துடன் அந்தந்த பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் ஒலி பெருக்கி வாகனத்தில் வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்றனர்.
- மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது
- தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அவர் பேசும் போது,பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறவுள்ள அரசு பொதுத் தேர்வுகள் தொடர்பாக தேர்வு ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்வினை 21,031 மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்களும், 18,617 மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களும், 25,081 பத்தாம் வகுப்பு மாணவர்களும் எழுத உள்ளனர். தேர்வு நாளன்று ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தடையில்லா மின்சாரம், குடிநீர்வசதி, சுகாதார வசதிகள், அனைத்து தேர்வு மையங்களுக்கும் பேருந்து வசதி, கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள குறித்து ஆய்வு செய்து முன்னேற்பாட்டு வசதிகள் செய்திட வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் அந்தந்த பகுதியில் உள்ள தேர்வு மையங்களாக செயல்படும், பள்ளிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளர்களை கொண்டு பள்ளி வளாகத்தை தூய்மை செய்திட வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் அவரவர்களுக்கு கூறப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி தேர்வினை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாச்சியர் முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- ஆளுநர் விவகாரத்தில் மற்ற மாநிலத்தில் வரும் தீர்ப்புகள் தமிழகத்திற்கும் பொருந்தும். பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது.
- முதல்வர் ஆளுநர் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவையின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்று மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன கருவிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.
அரசு நிதியிலிருந்து என்னென்ன பெற முடியுமோ, அதை பெற்று மக்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு செய்ய முடியாத திட்டங்களை மாவட்டத்தில் பல்வேறு செல்வாக்கு உள்ள நபர்களை சந்தித்து அவர்கள் மூலமாக நிதி பெற்று மீதமுள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு ஆளுநரோடு மோதல் போக்கு வேண்டாம் என்று தான் நினைக்கிறோம். ஆளுநர் விவகாரத்தில் மற்ற மாநிலத்தில் வரும் தீர்ப்புகள் தமிழகத்திற்கும் பொருந்தும். பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் விரைவில் கூட உள்ளது. அப்பொழுது முதல்வர் ஆளுநர் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அறந்தாங்கியில் வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது
- நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை அலுவலர் அப்துல்ரஹ்மான் கலந்து கொண்டு தீயின் வகைகள், அது பரவும் விதம், அவற்றை எவ்வாறு அணைப்பது குறித்து விளக்கினார்
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் வட்டார வளமைய அலுவலகத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்கு வட்டாரக்கல்வி அலுவலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர்(பொ) செல்வராஜ் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை அலுவலர் அப்துல்ரஹ்மான் கலந்து கொண்டு தீயின் வகைகள், அது பரவும் விதம், அவற்றை எவ்வாறு அணைப்பது குறித்து விளக்கினார்.
அதனை தொடர்ந்து மருத்துவர் பிரியதர்ஷினி ஆரோக்கிய வாழ்வு குறித்தும், வழக்கறிஞர் இளவரசி சட்ட ஆலோசனைகளையும் வழங்கினர். பயிற்ச்சியின் போது ஆசிரியர் பயிற்றுனர்கள் குணசீலன், ஸ்டெல்லா, இல்லம் தேடிக் கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட இயன்முறை மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் ஆறுமுகம் செய்திருந்தார்.
- தைல மரக்காடு எரிந்து நாசமானது
- மீட்பு குழுவினர் தைல மரக்கட்டில் எறிந்த தீயை, அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து அணைத்தனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு பகுதியில் தைல மரகாட்டில் தீப்பற்றி எரிவதாக அப்பகுதி சேர்ந்த மக்கள் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற நிலையை அலுவலர் மற்றும் மீட்பு குழுவினர் தைல மரக்கட்டில் எறிந்த தீயை, அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து அணைத்தனர். தற்போது எரிந்த தைலம் மரக்காட்டில் சுமார் இரண்டு ஏக்கருக்கு மேல் எரிந்துள்ளதால் நஷ்ட ஈடு அரசு வழங்க வேண்டும் என்று உரிமையாளர்கள் கூறுகின்றனர்.






