என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • விவசாய தோட்டத்தில் உள்ள 20 அடி ஆழ தொட்டியில் நீச்சல் கற்று கொடுக்க சென்றவர் பலி
    • உடலை கைப்பற்றி அரவக்குறிச்சி போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 43) விவசாயி. இவர், அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள 20 அடி ஆழ, நீர்த்தேக்க தொட்டியில், தம்பி குழந்தைகளுக்கு, நீச்சல் கற்றுக்கொடுக்க அழைத்து சென்றார். அப்போது, நீர்த்தேக்க தொட்டியில் முதலில் இறங்கிய வெங்கடேஷ், திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடன் சென்ற குழந்தைகள் கொடுத்த தகவலின்பேரில், அருகில் இருந்தவர்கள் வெங்கடேஷ் உடலை மீட்டனர். வெங்கடேஷ் மனைவி தீபிகா, கொடுத்த புகாரின்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 12ம் வகுப்பு வரை படித்தவர் தற்கொலை செய்து கொண்டார்
    • வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சு கொல்லி மருந்தை குடித்து தற்கொலை

    ஆலங்குடி.

    ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதியை சேர்ந்த கண்ணுச்சா மி மகள் தீபா (வயது 18 )இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். காதல் தோல்வியால் அ வரது வயல் அருகில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல் லி மருந்து குடித்து மயக்கம் நிலையில் கிடந்தார்.இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தனர் .மருத்துவ மனையில் இருந்த தீபா இறந்து விட்டார் .இவரது உடல் பிரேத பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுபின்னர் இவரது உறவினரிடம் உடலை ஒப்படைத்தனர் இச்சம்பவம் குறித்து வடகாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் தந் தை நடேசன் மகன் கண்ணுச்சாமி (வயது 49) கொடுத்த புகாரின் பே ரில் வழக்குப்பதிவு செய்து தீபா தற்கொலை செய்துகொள்ள காரண ம் என்ன? இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகி றார்.

    • கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள அறந்தாங்கி கோபாலசமுத்திரம் உள்ள சீ னிவாசன் மகள் ஜனனி (வயது 20) இவர் ஆலங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவிய ல் படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி சென்ற பெண் வீடு திரும்பவில்லை தந்தை சண்முகம் மகன் சீனிவாசன் (வயது 49) இவர் உற்றார் உறவினர் அக் கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்து பெண் காணவில்லை என் று வல்லத்திராக்கோட்டை போலீசில் புகார் மனு கொடுத்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெய ஸ்ரீ வழக்கு பதிவு செய்து காணாமல்போன கல்லூரி பெண்ணை தேடி வருகிறார்.

    • பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நேர்த்திகடன்
    • இன்று தெப்பத் திருவிழா நடைபெறுகிறது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது.குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக நாளில் நடைபெறும் திருவிழாவில், கோவில் முன்பு உள்ள ஆசிய அளவில் சிறப்பிடம் பெற்ற 33 அடி உயர குதிரை சிலைக்கு அதன் உரத்திலேயே பக்தர்கள் பூ மற்றும் காகித மாலைகள் அணிவித்து வழிபடுவது வழக்கம்.நடப்பாண்டு திருவிழாவையொட்டி கிராம மக்களின் சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, குதிரை சிலைக்காக தயாரிக்கப்பட்ட நீளமான வேட்டி, துண்டு, பச்சை நிற வஸ்திரம் ஆகியவற்றை கயிறு மூலம் கட்டி குதிரை சிலைக்கு அணிவித்தனர்.தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார், வேன், சுமை ஆட்டோ, லாரி, டிராக்டர்களில் பூ மற்றும் காகித மலைகளை எடுத்து வந்து, கோவிலின் இருபுறச் ச ாலையிலும் பல கி.மீ. தொலைவிற்கு காத்திருந்து குதிரைக்கு மாலை அணிவித்து வழி பாடு மேற்கொண்டனர். கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலை சுறி 50க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு குதிரைக்கு சுமார் 2,500க்கு மேல் மாலை பக்தர்களால் அணிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இன்று மாலை தெப்ப திருவிழா நடைபெற உள்ளதை தொடர்ந்து பக்தர்கள் குதிரைக்கு மாலை அணிவித்து வருகின்றனர்.

    • 8 மாதம் வாழ்ந்த பின் தவிக்கவிட்டதால் ஆத்திரம்
    • கூடுதல் வயதுடைய பெண்ணுடன் காதல் திருமணம்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி (வயது 22). இவருக்கும் தன்னை விட 2 வயது குறைந்த தொண்டைமானேந்தல் பகுதியை சேர்ந்த வல்லரசு (20). என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.அதனைத் தொடர்ந்து இவர்கள் கடந்த 7 மாதத்திற்கு முன்பு மணமேல்குடி கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் பெற்றோருக்கு பயந்து, இருவரும் மதுரையில் 4 மாத காலமும், கோத்தகிரியில் 3 மாதகாலமும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர்.இந்நிலையில் கோத்தகிரியில் இருந்த போது இருவருக்குமிடைேய குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வல்லரசு, வைதேகியை அங்கேயே விட்டு விட்டு தனது தாய் தந்தையோடு வந்து சேர்ந்துள்ளார்.பின்னர் கோத்தகிரியில் தனியாக இருந்த வைதேகி பாதுகாப்பு கருதி அவரும் தனது சொந்த ஊருக்கு திரும்பி தாய் தந்தையை சந்தித்தார். ஆனால் அவர்கள் வீட்டிற்குள் அவரை அனுமதிக்கவில்லை.காதல் கணவன் கைவிட்ட நிலையில் பிறந்த வீட்டிலும் அடைக்கலம் கிடைக்காத நிலையில் மீண்டும் வேறு வழியின்றி கணவர் வீட்டிற்கு சென்று விடலாம் என்று கருதி அங்கு சென்றார். ஆனால் அங்கு மாமனார், மாமியார், கணவர் உள்ளிட்டோர் வைதேகியை தாக்கி அங்கிருந்து துரத்தியுள்ளனர். இதனால் செய்வதறியாமல் திகைத்த வைதேகி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த வைதேகி இறந்து விடலாம் என கருதி விஷம் அருந்தினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு தனது கணவர் வல்லரசு வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே வல்லரசு மற்றும் மாமனார், மாமியார், உள்ளிட்டோர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகிவிட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவுடையார்கோவில் காவல்த்துறையினர் வைதேகியோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி காப்பகம் ஒன்றில் அவரை அனுமதித்தனர்.மேலும் விசாரணையை தொடங்கிய காவல்த்துறையினர் தலைமறைவர்களை தேடி வருகின்றனர். காதலித்து 8 மாதகாலம் இளம் பெண்னோடு இன்பமாக இருந்துவிட்டு உதறித் தள்ளிய இளைஞரால் அப்பகுதியில் பரபரபு ஏற்பட்டது.

    • புதுக்கோட்டை வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது
    • வருகின்ற 11-ந் ேததி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், அவர் தெரிவித்ததாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) காலை 08.00 மணி முதல் நடைபெறவுள்ளது.இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்..எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடும் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்று தனியார்துறை மூலமாக வழங்கப்படும் வேலைவாய்ப்புகளை பெற்று தங்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி க்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன், வேல்முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • வழக்கறிஞர்கள் அணி சார்பில் நடைபெற்றது
    • வங்கி கணக்கு வைத்திருப்போர் எச்சரிக்கையாக இருக்க அமைச்சர் அறிவுறுத்தல்

    புதுக்கோட்டை,

    வழக்கறிஞர்கள் அணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் S ரகுபதி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மேலும் திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பாஜகவினர் தமிழகத்தில் வட மாநில தொழிலாளிகளுடன் மோதல் என வதந்தியை பரப்பி வருவதாகவும், வதந்தியை பரப்புவோர் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து இரும்புக்கரம் கொண்டு அடக்கிய ஒரே முதல்வர் தமிழக முதல்வர் என்று பேசினார்.பின்னர் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆர். எஸ். பாரதியை பார்த்தால் அதிமுகவிற்கு பயம், ஜெயலலிதா இறப்பில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,இரண்டு அறிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதில் ஒருவர் அறிக்கையில் இடைக்கால தடை வாங்கி உள்ளார், இருந்தாலும் தடையை நீக்கி தப்பு செய்தவர்களை குற்றவாளியாக மக்கள் மன்றத்தில் நிறுத்திக் காட்டுவார் தமிழகம் முதல்வர் என்றார். இறுதியாக பேசிய ஆர் எஸ் பாரதி கூறுகையில் இந்தியாவில் 10 லட்சம் கோடியை கொள்ளையடித்து வைத்துள்ளார்கள், அந்த மூன்று நபர்கள் மோடி,அதானி,அம்பானி, பணம் மதிப்பிழப்பு 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் செல்லாது என்று சொன்னது போல் வங்கிகளும் திவாலாகி விட்டது என்று கூறி வங்கியையும் இந்தக் கூட்டம் மூடிவிடும் எனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன், கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, வடக்கு மாவட்டச் செயலாளர் கேகே செல்லபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம்சண்முகம், நகரச் செயலாளர் ராஜேந்திரன், தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன்,மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்து, மாவட்ட வழக்கறிஞர்கள் அணி துணை அமைப்பாளர் நந்தினிகண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 699 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர்
    • மூனிஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது

    ஆலங்குடி,புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபு ரத்தில் 55 ஆம் ஆண்டு முனீஸ்வரர் கோவில் ஆலய மாசிமகத் விழாவை யொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செல்வி மாடுபிடி வீரர்களுக்கான உறுதி மொழி வாசிக்க வீரர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல்துறை அமை ச்சர் மெய்யநாதன், திருவர ங்குளம் ஒன்றி யக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.திருச்சி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை தஞ்சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 699 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களத்தில் விளையாடினர். அவிழ்த்து விடப்பட்ட காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு விழா குழுவினர் சார்பாக கட்டில், சைக்கிள், பீரோ, பிரிட்ஜ் மற்றும் இதர பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அமைச்சர் மெய்யநாதன் சார்பில் ஆட்டுக்குட்டி, சைக்கிள், குத்துவிளக்கு, கட்டில் பீரோ, சில்வர் பாத்திரங்கள், மிக்சி, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.முன்னதாக இதில் கலந்து கொள்ள வைக்கப்பட்ட காளைகளுக்கும், களமிறங்கி ய வீரர்களுக்கும் முன்னதாக உரிய மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மேலும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்க ப்பட்டனர். ஆலங்குடி டிஎஸ்பி தீபக்ரஜினி, காவல் ஆய்வாளர் அழகம் மை உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா கமிட்டி செல்வம் கார்த்திக், இளைஞர்களால் போட்டிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

    • ரூ.12.40 கோடி செலவில் கட்டப்பட உள்ளது
    • அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்

    ஆலங்குடி,

    கடந்த ஆண்டு சட்டசபையில் மானியக் கோரிக் கையின் போது ஆலங்குடி தொகுதிக்கு அரசு இருபாலர் கலை அறி வியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களிலேயே ஆலங்குடி நகரில் உள்ள தனியார் கட்டடத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட தொடங்கியது. அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர இடமா னது ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் ஊராட்சியில் தேர்வு செய்ய ப்பட்டது. புதிய கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு ரூ.12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் புதிய கல்லூரி கட்டிடம் கட்டுவதற்காக அடிக் கல் நாட்டும் விழா இன்று கீழாத்தூர் சமத்துவபுரம் அருகே நடைபெ ற்றது. இந்த விழாவில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நா டு சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான மெய்யநாதன் கலந்துகொ ண்டு புதிய கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி கல்லூரி காண வரைபடத் தையும் பார்வையிட்டார்.

    • பட்டப்பகலில் துணிகரம்
    • மொய்பணம் மொத்தமும் கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் அம்மானிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா ( வயது 40) விவசாயியான இவருக்கு உமாராணி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் கருப்பையா தனது வீட்டை பூட்டி விட்டு வீட்டின் அருகே சாவியை வைத்துவிட்டு அருகில் உள்ள கறம்பக்குடிக்கு சென்று விட்டார். ஆடு மேய்க்க சென்று ஆடுகளை மேய்த்து விட்டு மாலை 5:30 மணி அளவில் உமாராணி வீட்டுக்கு வந்த போது அப்போது வீடு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். பிறகு வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது அங்கு வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 18 பவுன் நகைகள் மேலும் 4.5 லட்சம் பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்ததை கண்டு கதறி அழுதார். கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான் கருப்பையாவின் மகன்களுக்கு காதணி விழா நடைபெற்றது. அதற்கு மொய்ப்பணமாக கிடைத்த பணமும் செய்முறையாக வந்த நகையும் திருடு போனதை நினைத்து குடும்பமே சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி கரம்பக்குடி காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் மற்றும் கரம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து பதிவு செய்தனர். பட்டப் பகலில் வீடு புகுந்து 18 பவுன் நகைகள் மற்றும் நான்கு அரை லட்சம் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • சாம்சங் கீ போர்டு, கால்குலேட்டர் பறிமுதல்
    • கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைப்பு

    ஆலங்குடி,

    ஆலங்குடியில் திருட்டு லாட்டரி சீட்டுகள் விற்பதாக ஆலங்குடி போலீ சார் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆலங்குடி போலீஸ் வடகாடு முக்கத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தோப்புவளவம் செ ல்வராஜ் மகன் சிவனேசன் (வயது 42) இவர் தற்போது ஆலங்குடி பார திதாசன் சாலையில் குடியிருந்து வருகிறார். இவரும் ஆலங்குடி அண்ணா நகரை சேர்ந்த வேம்பையா மகன் ம ணிகண்டன் (வயது 48) ஆகிய இருவரும் மூன்று இலக்கு லாட்டரி சீட் டுகள் வடகாடு முக்கத்தில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் கடையில் வைத்து இருவரையும் கைது செய்தனர் .மேலும் அவர்களிடமிருந்து மொபைல் 2 சாம்சங் கீ ஃபோர்டு ஒன்று கால்குலேட்டர் ஒன்று மூன்று இலக்க எண் எழுதிய சீட்டு கட்டுகள் 15 நோட்டு ஒன்று இவைகளை பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நி லையம் அழைத்து வந்தனர்.ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதி வு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடு வர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட் டை சிறையில் அடைத்தனர்.

    • 5 முறை சமாதான கூட்டம் நடத்தியும் பலனில்லை
    • கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த பட்டவையா மற்றும் கொம்புக்கார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெற்ற நிலையில் அப்போது இருந்தே கோவிலில் வழிபாடு மற்றும் திருவிழா கொண்டாடுவதில் கோயில் உரிமைக்காரர்களான தானான், சின்னத்தானான் வகையறாக்களுக்கும் சிவந்தான், ஏகன் வகையறாக்களுக்கும் பிரச்சனை நிலவி வந்தது.இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு பட்டவையனார் கோவில் வளாகத்தில் கல்வெட்டு வைக்க முயன்ற சிவந்தான் கரைகாரர்களுக்கும், அதைத்தடுக்க முயன்ற தாணான் கரைகாரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளாக மாறியது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டதில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் தாண ன் மற்றும் சிவந்தான் கரைகளைச் சேர்ந்த 8 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி மற்றொரு தரப்பை சேர்ந்த மக்கள் அன்னதானத்திற்காக வெட்டி வைத்திருந்த காய்கறிகளை சாலையில் கொட்டி கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அறந்தாங்கி- பட்டுக்கோட்டை நெடுஞ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.இக்கோயில் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே, ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் 2 சமாதான கூட்டமும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு சமாதான கூட்டமும் நடைபெற்றது, இந்நிலையில் மீண்டும் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. பல்வேறு வகையில் பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன் , ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி மற்றும் கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவ லர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் இருதரப்பு சமாதான கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றதுஇந்த சமாதான கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் கோயில் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

    ×