என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே உறவினர்களுக்குள் தகராறு-அரிவாள் வெட்டில் துண்டான விரல்கள்
- ஆலங்குடி அருகே உறவினர்களுக்குள் தகராறில் அரிவாள் வெட்டில் துண்டான விரல்கள்
- ஐஸ்பெட்டியில் மதுரைக்கு அனுப்பப்பட்டது
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதியை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் ரெங்கதுரை (வயது 45). இவரின் உறவினரான ரெங்கசாமி மகன் கருப்பையா (வயது 25) என்பவரும் அருகருகே வசித்து வருகின்றனர். கருப்பையாவுக்கும், ரெங்க துரை தந்தை ரெங்சாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதுஇதனை ரெங்கதுரை தட்டி கேட்டதால் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானநிலையில் கருப்பையா அரிவாளை எடுத்து வந்து கருப்பையாவை சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதில் ரெங்கதுரைக்கு வலது கையில் இரண்டு விரல்கள் துண்டாகியுள்ளது. மேலும் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மயங்கிய நிலையல் கிடந்த ரெங்கதுரையை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.அங்கு ரெங்கதுரைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் துண்டான விரல்களை தனி ஐஸ்பெட்டியில் அடைத்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரிவாளால் வெட்டிய கருப்பையாவை ஆலங்குடி போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து, ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்று ம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.






