என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.3.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
- மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்
- 345 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 345 மனுக்களை பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்கள்.மேலும் மாற்றுத்தி றனாளிகள் நலத்துறையின் சார்பில், 5 பேருக்கு தலா ரூ.7 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், 5 நபர்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி, 5 நபர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான வங்கிக் கடன், ஒரு நபருக்கு ரூ.25 ஆயிரம் 5 சதவீத முன்வைப்புத் தொகையையும், மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து அறந்தாங்கி வட்டம், களப்பக்காடு முதல்வீதியைச் சேர்ந்த உமாமகேஸ்வரிஎன்பவர் மின்சாரம் தாக்கி இறந்தமை க்காக வழங்கப்பட்ட ரூ.1 இலட்ச த்திற்கான காசோலை என மொத்தம் 17 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாட்சா, உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






