என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை அருகே வாகன விபத்தில் வாலிபர் கால் துண்டானது
- கந்தர்வகோட்டை அருகே வாகன விபத்தில் வாலிபர் கால் துண்டாகி விட்டது
- காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதால் போலீஸ் வாகனத்தில் முருகேசனை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வண்ணாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் முருகேசன்(வயது25). இந்நிலையில் முருகேசன் தனது இருசக்கர வாகனத்தில் கந்தர்வகோட்டையில் இருந்து வண்ணாரப்பட்டிக்கு செல்லும் வழியில் காட்டு நாவல் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காய்கறி விற்கும் லோடு ஆட்டோ எதிர்பாராத விதமாக முருகேசன் மீது மோதியதில் வலது கால் முழங்காலுக்கு கீழ் துண்டானது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதால் போலீஸ் வாகனத்தில் முருகேசனை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். பின்னர் முதலுதவி செய்யப்பட்ட முருகேசன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்து நடந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து துரிதமாக செயல்பட்டு காயம் அடைந்த வரை சிகிச்சைக்கு போலீஸ் வாகனத்தில் அனுப்பி வைத்த காவல் ஆய்வாளர் செந்தில் மாறனை பொதுமக்கள் பாராட்டினர்.






