கறம்பக்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

கறம்பக்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடபெற்றது நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
கறம்பக்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
Published on

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா மாங்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் சந்தன காப்பு திருவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் 4ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 11 மஞ்சுவிரட்டு காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையையும் அடக்க ஒன்பது மாடுபிடி வீரர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டனர்.

இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் செய்திருந்தனர். இப்போட்டியை மாங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பார்த்து மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com