search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medicalcamp"

    • கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் திருப்பூர் வட்டார அளவிலான தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர்.

    மங்கலம்,அக்.2-

    திருப்பூர் மாவட்டம்-மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் திருப்பூர் வட்டார அளவிலான தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமானது சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.முகாமிற்கு திருப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். நித்யா முருகேசன் தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி இலவச சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வகித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திமுக., கட்சியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பணன், திருப்பூர் ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, பெருமாநல்லூர் வட்டார மேற்பார்வையாளர் வரதராசன், மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.சங்கவி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் முகமது இத்ரீஸ், ராதாநந்தகுமார், பால்ராஜ் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் மருத்துவ குழுவினர் இருதய நோய் , சர்க்கரை நோய், தோல் நோய், காசநோய், கண் நோய்,பொது மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர்.

    • மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தாமணி, சபீனா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி வரவேற்றார்.இந்த மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது.

    மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் டாக்டர் அன்வர் அலி, கண் மருத்துவ அலுவலர் பாலமுருகன்,வட்டார சுகாதார ஆய்வாளர் லோகநாதன், பொங்கலூர் வட்டார சுகாதார ஆய்வாளர் வரதராஜன், மற்றும் சுகாதாரத் துறையினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தன்னார்வ அமைப்புகள் சார்பில் காது கேளாமை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • காது பரிசோதனை நிபுணர் டாக்டர் கார்த்திக், காது பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை பொறுப்பாறு மலைக்கிராம மக்களுக்கு திருப்பூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் காது கேளாமை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமை தாங்கினார். மேலும் காது பரிசோதனை நிபுணர் டாக்டர் கார்த்திக், காது பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்.

    முனைவர் நெல்சன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி சிறப்புரை ஆற்றினார். இதில் தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள், நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொறுப்பாறு மலைக்கிராம மக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர்.  

    • கலெக்டர் கிறிஸ்துராஜ் காங்கேயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சியில் கலந்து கொண்டு யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார்.
    • காவல்துறை சார்பில் முகாமிற்கு வரும் வாகனம் நிறுத்துவதை ஒழுங்குபடுத்தவும்,கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குண்டடம்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம், காரப்பாளையம் மற்றும் பொன்னங்காளிவலசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டு, காங்கேயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 24.6.2023 (சனிக்கிழமை) அன்று இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் வருகிற 24.6.2023 (சனிக்கிழமை) அன்று இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் தேவையான குடிநீர் வசதி, சுகாதாரவசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், மருத்துவ துறையின் சார்பில் இம்முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள பதிவு செய்யும் இடத்திலேயே தேவையான உதவிகள் செய்யவும், எந்தெந்த மருத்துவ பரிசோதனை எந்த அறையில் மேற்கொள்ளப்படும் என்பது குறித்த பெயர் பலகை பள்ளியின் முன்புறமாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வைக்கவும், மாற்றுத்தி றனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க தனிஅறை, மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க தனி அறை ஏற்பாடு செய்யவும், காவல்துறை சார்பில் முகாமிற்கு வரும் வாகனம் நிறுத்துவதை ஒழுங்குபடுத்தவும்,கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட கேட்டுக்கொள்ள ப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    முன்னதாக சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் காங்கேயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சியில் கலந்து கொண்டு யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசு, துணைஇயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார் மற்றும் மருத்துவர் அருண் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இம்முகாமில் சிறப்பு கவனம்செலுத்தப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
    • தகவல் பலகை மற்றும் பதாகைகள் மூலமும் துண்டு பிரசுரங்கள் மூலமும் மக்களை சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் வருகிற 24.6.2023( சனிக்கிழமை) அன்று காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,தாலுகா அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார்மருத்துவமனைகளிலும் தேவையான மேல் சிகிச்சைகள் அளிக்கப்படும். எனவே இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இம்முகாமில் சிறப்பு கவனம்செலுத்தப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.மேலும் இம்முகாமில் கீழ்கண்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய்புற்று நோய் கண்டறியும் பரிசோதனை, முழு ரத்த பரிசோதனைகள், பொது மருத்துவம், பொதுஅறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல்மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பல்நோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி முதல் மாலை 5மணி வரை வழங்கப்பட உள்ளது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

    இந்த முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவ பிரிவுகளும், பங்கேற்கும் வகையில் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை-முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் பொறுப்பேற்று இம்முகாமானது சிறப்பாக நடைபெற முடி வெடுக்கப்பட்டுள்ளது. முகாம் குறித்த தகவல்கள் பொதுமக்களை சென்றடைந்து பெருமளவில் பங்குபெறும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்தி தகவல் பலகை மற்றும் பதாகைகள் மூலமும் துண்டு பிரசுரங்கள் மூலமும் மக்களை சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    எனவே திருப்பூர் மாவட்டத்தில் இம்மருத்துவ முகாம் சீரிய முறையில் நடைபெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்ககை எடுத்து இது தொடர்பான அனைத்துத்துறை அலுவலகங்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • அரியலூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெறுகிறது
    • 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், தளவாய் கிராமம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் 24ந்தேதி காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாமினை சிறப்பாக நடத்தும் வகையில் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, மருத்துவ முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி. பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு இரத்த பரிசோதனையும் கட்டணமின்றி செய்து கொள்ளலாம். மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறுப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது. இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயர்வேத மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.

    மேலும், இம்முகாமில் கலந்து கொள்ளும் தகுதியான நபர்களுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும். எனவே, இம்மருத்துவ முகாமினை சிறப்பாக நடத்தும் வகையில் சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவரும் இப்பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் அரிய லூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யின் முதல்வர் முத்து கிரு ஷ்ணன், பொது சுகாதார துணை இயக்குநர் செந்தி ல்குமார், துணை இயக்கு நர்கள்இளவரசன், சுதாகர், வருவாய் கோட்டாட்சி யர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 428 ஆடுகளுக்கு சிகிச்சை
    • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சி மேல புலவன்காடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பசுமை தேசம் சதீஷ்குமார் தலைமையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடை பெற்றது. இந்த சிறப்பு முகாமில் 358 பசுமாடுகள், 428 வெள்ளாடுகள், செம்மறி யாடுகள், நாய் மற்றும் கோழிகளுக்கு பரிசோதனை நடைபெற்றது. சிறந்த கிடேரி கன்று உரிமையாளருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்தோருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இம் முகாமில் மாடுகளுக்கு சினை ஊசி, சினை பரிசோதனை மற்றும் சினை பிடிக்காத மாடுகளுக்கு சிறப் பு சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு கன்று வீச்சு நோய் க்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாடுகளுக்கு தாது உப்பு கல வைகள், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க ம ருந்துகள், சளி மருந்துகள் அளிக்கப்பட்டது. கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய்களுக்கு எதிராக தடுப்பூசி கள் செலுத்தப்பட்டது. இச்சிறப்பு முகாமில் கால்நடை மருத்துவர்கள் விக்னேஷ், கமலா தேவி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் கள் பங்கேற்று கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சைகளை வழங்கினார்கள்.




    ×