காங்கயம்-மூலனூரில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் - 24-ந்தேதி நடக்கிறது

தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இம்முகாமில் சிறப்பு கவனம்செலுத்தப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.தகவல் பலகை மற்றும் பதாகைகள் மூலமும் துண்டு பிரசுரங்கள் மூலமும் மக்களை சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் வருகிற 24.6.2023( சனிக்கிழமை) அன்று காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,தாலுகா அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார்மருத்துவமனைகளிலும் தேவையான மேல் சிகிச்சைகள் அளிக்கப்படும். எனவே இம்முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இம்முகாமில் சிறப்பு கவனம்செலுத்தப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.மேலும் இம்முகாமில் கீழ்கண்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய்புற்று நோய் கண்டறியும் பரிசோதனை, முழு ரத்த பரிசோதனைகள், பொது மருத்துவம், பொதுஅறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல்மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பல்நோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி முதல் மாலை 5மணி வரை வழங்கப்பட உள்ளது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

இந்த முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவ பிரிவுகளும், பங்கேற்கும் வகையில் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை-முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் பொறுப்பேற்று இம்முகாமானது சிறப்பாக நடைபெற முடி வெடுக்கப்பட்டுள்ளது. முகாம் குறித்த தகவல்கள் பொதுமக்களை சென்றடைந்து பெருமளவில் பங்குபெறும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்தி தகவல் பலகை மற்றும் பதாகைகள் மூலமும் துண்டு பிரசுரங்கள் மூலமும் மக்களை சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே திருப்பூர் மாவட்டத்தில் இம்மருத்துவ முகாம் சீரிய முறையில் நடைபெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்ககை எடுத்து இது தொடர்பான அனைத்துத்துறை அலுவலகங்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com