என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாமில் சிகிச்சை பெற்றுக்கொண்ட மலைகிராம மக்களை படத்தில் காணலாம்.
உடுமலை அருகே மலை கிராம மக்களுக்கு மருத்துவ முகாம்
- தன்னார்வ அமைப்புகள் சார்பில் காது கேளாமை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- காது பரிசோதனை நிபுணர் டாக்டர் கார்த்திக், காது பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்.
உடுமலை:
உடுமலைப்பேட்டை பொறுப்பாறு மலைக்கிராம மக்களுக்கு திருப்பூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் காது கேளாமை சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமை தாங்கினார். மேலும் காது பரிசோதனை நிபுணர் டாக்டர் கார்த்திக், காது பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்.
முனைவர் நெல்சன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பற்றி சிறப்புரை ஆற்றினார். இதில் தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள், நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொறுப்பாறு மலைக்கிராம மக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர்.
Next Story






