பல்லடத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
Published on

பல்லடம்:

பல்லடம் சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தாமணி, சபீனா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி வரவேற்றார்.இந்த மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது.

மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் டாக்டர் அன்வர் அலி, கண் மருத்துவ அலுவலர் பாலமுருகன்,வட்டார சுகாதார ஆய்வாளர் லோகநாதன், பொங்கலூர் வட்டார சுகாதார ஆய்வாளர் வரதராஜன், மற்றும் சுகாதாரத் துறையினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com