என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர்கள் சாட்டையடி வாங்கி வினோத வழிபாடு
    X

    பக்தர்கள் சாட்டையடி வாங்கி வினோத வழிபாடு

    • காமாட்சி அம்மன் கோவிலில்
    • பக்தர்கள் சாட்டையடி வாங்கி வினோத வழிபாடு நடத்தினர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கீழக்காவனூர் கிராமம் ஸ்ரீகாமாட்சி அம்மன் ே காவிலில் ஆண்டு தோறும் சிவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். சிவராத்திரி அன்று காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி 3 நாட்களுக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாரதனை போன்றவைகள் நடைபெறும். 3ம் நாள் விழாவில் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோதநிகழ்வும் நடைபெறும். சாட்டை அடியின்போது காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தால் அந்த பக்தரிடம் குறை இருப்பதாகவும், காயம் ஏற்படாத பக்தர்களுக்கு அம்மன் அருள் கிட்டுவதாகவும் ஐதீகம் உள்ளது. இந்தாண்டு நடைபெற்ற விழாவில் கடந்த சிவராத்திரி அன்று காப்புக்கட்டி நேற்று 3ம் நாள் திருவிழா நடைபெற்றது.விழாவினையொட்டி பக்தர்கள் காலை முதலே பால்குடம், மயில்காவடி, அலகுகாவடி போன்றவைகள் எடுத்து பூ மிதித்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள், ஆலய வாசலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலில் நீராடி பின்பு கோவிலை அடைந்தனர். அப்போது அம்மன் சாமி ஆடுபவர் சாமி ஆடிக்கொண்டே அவர்களை மண்டியிட வைத்து சாட்டையால் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.சாட்டையடியின்போது பக்தர்கள் அடியிலிருந்து தப்பிப்பதும், இறுதியில் அனைத்து பக்தர்களும் சாட்டையடி வாங்கிய சுவாரஸ்ய நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆலய வாசலில் பெரிய மண்பானையில் பொங்கல் வைத்தும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.விழாவில் அப்பகுதியை சுற்றியுள்ள பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 80க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


    Next Story
    ×