என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை அருகே விசாரணைக்கு சென்ற மனைவியை காவல்நிலையத்தில் சரமாரியாக தாக்கிய கணவர்
- புதுக்கோட்டை அருகே விசாரணைக்கு சென்ற மனைவியை காவல்நிலையத்தில் சரமாரியாக கணவர் தாக்கினார்
- வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 3 மாதங்களாக கல்பனா தந்தை வீட்டில் வசித்து வருகிறார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அண்ணாநகர் பகுதியில் சேர்ந்தவர் கல்பனா (வயது 24). இ வரது கணவர் தியாகராஜன் (29). இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 9 மாதங்களுக்கு முன்பு கல்பனா, கணவனிடமிருந்து விவகாரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனிடையே வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 3 மாதங்களாக கல்பனா தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தியாகராஜன் மீது திருமயம் அனைத:து மகளிர் காவல் நிலையத்தில் கல்பனா புகார் செய்தார். புகார் சம்பந்தமாக கல்பனா மற்றும் தியாகராஜனை போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது கல்பனா எனது கொருட்களை திருப்பித் தரும்படி தியாகராஜனிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் முன்னிலையில் வாக்குவாதம் நடந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த தியாகராஜன் தகார வார்த்தையால் பேசி கல்பனாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கல்பனா திருமணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவன் தியாகராஜன் மீது புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவ செய்து தியாகராஜன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்து நீதிமன்ற பிணையில் விடுவித்துள்ளனர். காவல் நிலையத்தில் போலிசார் முன்னிலையில் கணவன் மனைவியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.