என் மலர்
பெரம்பலூர்
- மருவத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.
பெரம்பலூர்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான பேரளி, அசூர், சித்தளி, பில்வாடி ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை பெரம்பலூர் நகர்உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
- திறன் மேம்பாட்டு பயிற்சி பெற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்
- தொழிலாளர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் தொழிலா–ளர் நலத்துறை மூலம் நடை–பெறவுள்ள திறன்மேம் பாட்டு பயிற்சி பெற கட்டு மான தொழிலாளர்க–ளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) பாஸ்க–ரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி–ருப்பதாவது:-தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரி–யத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்க–ளுக்கு 3 மாதம் மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத்திறன் மேம்பாட்டு பயிற்சியில் பதிவு செய்து 3 ஆண்டுகள் பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் விண்ணப்பிக்க–லாம்.
தொழிலாளர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் 18 வயதிற்கு மேற்பட்ட–வர்களாகவும், 40 வயதிற்கு உட்பட்ட–வராக–வும் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமி–டம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறும் அனைவ–ருக்கும் எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிறுவனம் 100 சதவீத வேலை வாய்ப்பினை உறுதி செய்துள்ளது.
கட்டுமானத் தொழிலாளர் கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களான கொத் த–னார்,பற்ற வைப்ப–வர், மின்சாரப் பயிற்சி, குழாய் பொருத்துநர், மர–வேலை, கம்பி வளைப்ப–வர், கார் பெண்டர் மற்றும் சாரம் கட்டுபவர் ஆகிய தொழி–லாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 3 மாத பயிற்சியானது முதல் ஒரு மாதம் தையூரில் உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், அடுத்த 2 மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் நீவளுரில் அமைந்துள்ள எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெ–றும். மேலும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊக்க தொகை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது நல வாரிய அட்டை கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணை–யர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூரில் 7 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் போக்குவரத்து விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 53 லட்சம் அபராதம் விதிக்கபட்டது
- 7 நாட்களில் 144 ஆம்னி பஸ்களும், 136 இதர வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.
பெரம்பலூர்:
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்குச் செல்லும் மக்க–ளுக்காக சிறப்பு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அர–சுக்கு வரி செலுத்தாதது, டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் போன்றவை குறித்து கண்காணிக்க உத்த–ரவிடப்பட்டது. இதையடுத்து பெரம்ப–லூர் வட்டார போக்குவ–ரத்து அலுவலர் கணேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பு–சாமி மற்றும் அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பெரம்பலூர் திரு–மாந்துறை டோல்பிளாசா, நான்கு ரோடு, மூன்று ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடந்த வாகன சோதனைகளில் 144 ஆம்னி பஸ்களும், 136 இதர வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன. இதில் ஆம்னி பஸ்க–ளுக்கு 22 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.65 ஆயிரம் அபராதமும், பிற வாகனங்களுக்கு போக்கு–வரத்து விதிமுறைகளை மீறி வகையில் அதிக பாரம், அதிக ஆட்கள், ஒளிரும் பட்டைகள் இல்லாதது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு குறை–பாடுகள் காரணமாக சோதனை அறிக்கைகள் வழங்கபட்டு ரூ.88 ஆயிரம் அபராதமும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன், வாகன டிரை–வர்களிடம் போக்கு–வரத்து விதிமுறைகளை கடை–பிடித்து வாகனங்களை இயக்கி விபத்துகளை தவிர்க்க வேண்டும். போக்கு–வரத்து விதிமு–றைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் அதன் உரிமையாளர், டிரைவர்கள் மீது நடவ–டிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விதிமுறையை மீறி இயக்கப்படும் வாக–னங்களின் உரிமம் மற்றும் டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
- பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
- போட்டிகளில் சிறுவர், சிறுமிகள், பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, தண்ணீர் நிரப்புதல், சைக்கிள் ரேஸ், கபடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டிகளில் சிறுவர், சிறுமிகள், பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்றது. பின்னர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
- பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
- தெரியாத நபர்களிடம் அளவோடு பழகவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் கலா மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் தெற்கு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு மகன் ராமலக்கன் (வயது 23). இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் பாடாலூர் அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் நட்புடன் பழகியபோதும், நாளடைவில் அதுவே காதலாக மாறியது.
செல்போன் எண்களை பகிர்ந்துகொண்ட அவர்கள் மணிக்கணக்கில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராமலக்கன் மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அவரிடம் விரைவில் நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை உல்லாசமும் அனுபவித்து உள்ளார். இதற்கிடையே மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் மகளை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த பள்ளி மாணவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளிடம் கேட்டபோது, அவர் நடந்ததை கூறி அழுதுள்ளார். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.
மாணவயிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கர்ப்பமாக்கிய ராமலக்கனை கைது செய்தார். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும், தெரியாத நபர்களிடம் அளவோடு பழகவேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர் கலா மாணவிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
- விவசாயத்தில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பயிற்சியினை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளாக இருக்க வேண்டும்
பெரம்பலூர்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சியினை அளிக்கப்படவுள்ளது. வளர்ந்த நாடுகளில் டிரோன் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்கள் விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைபடுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது.
விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சிக்கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளிக்க முடியும். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மேலும், விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். இப்பயிற்சியினை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளாக இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாஸ்போர்ட் உரிமம் மற்றும் மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும். இப்பயிற்சியானது கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் 10 நாட்கள் அளிக்கப்படும். பயிற்சிக்கான மொத்த தொகை தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் டி.ஜி.சி.ஏ.ஆல் அங்கீகரிக்கப்பட்ட டிரோன் ரிமோட் பைலட் உரிமத்தினை பெறுவார்கள்.
மேலும், இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும். இப்பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ டிரோன் கருவிகளை வாங்கலாம் மற்றும் உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம். விவசாய டிரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும் அல்லது தாட்கோவின் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கி வழிவகை செய்யப்படும். மேற்கண்ட திட்டத்தில் தகுதியுள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
- டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் அலைமோதினர்.
- விடுமுறை முடிந்து நேற்று மதியம் சரியாக 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் 90 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை கோடிக்கணக்கில் நடந்தது. நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனாலும் அன்றைய தினமும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனையும் படுஜோராக நடந்தது. விடுமுறை முடிந்து நேற்று மதியம் சரியாக 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.
முன்கூட்டியே வந்து காத்திருந்த மது பிரியர்கள் டாஸ்மாக் கடை திறந்தவுடன் முண்டியடித்து ஓடிக்கொண்டு மது பாட்டில்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பின்னர் அவர்களில் சிலர் மதுபான கூடத்துக்கு சென்றும், சிலர் திறந்த வெளியில் அமர்ந்தும் மது அருந்தினர். நேற்று இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நேற்றும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களின் விற்பனை கோடிக்கணக்கில் நடந்திருக்கும் என்று தெரிகிறது.
- கோரையாற்றில் மக்கள் உற்சாக குளியல் போட்டனர்.
- குழந்தைகள் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்
பெரம்பலூர்
காணும் பொங்கலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிலர் தங்களது நண்பர்கள், உறவினர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிறுவர் அறிவியல் பூங்காவில் நேற்று மாலை கூடி பொழுதை கழித்தனர். அதில் குழந்தைகள் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை, சாத்தனூர் கல்மரப்பூங்கா, விசுவக்குடி அணை, கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம், கோரையாறு உள்ளிட்ட இடங்களில் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் சென்று பார்வையிட்டனர்.
விசுவக்குடி அணை, கோரையாற்றில் பொதுமக்கள் உற்சாக குளியலிட்டனர். மேலும் அந்த இடங்களில் தங்களது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அந்த இடங்களில் நேற்று வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் பெரம்பலூரில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் படம் பார்க்க கூட்டம் நிரம்பி வழிந்தது.
- சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- இதனால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
பெரம்பலூர்
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் விடுமுறை முடிந்ததால் நேற்று புறப்பட தொடங்கினர். சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனாலும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதே போல் வெளியூர்களில் தங்கியிருந்து வேலை பார்த்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு வந்தவர்களும் நேற்று புறப்பட்டனர்.
இதனால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் நேற்று கார், ஆம்னி பஸ்கள் உள்ளிட்டவற்றில் சென்னைக்கு ஒரே நேரத்தில் திரும்பி சென்றவாறு இருந்தனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் பகுதியில் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்பட்டது. இதில் சிறுவாச்சூரில் மேம்பால பணி நடப்பதாலும், திருமாந்துறை சுங்கச்சாவடியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது.
- எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு வழக்கில் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- வெட்டு காயமடைந்த கிரியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கிரி (வயது 20). இவர் கோவை கணபதி புதூர் பகுதியில் தனது தந்தையுடன் தங்கியிருந்து எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கிரி பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு களரம்பட்டி மாரியம்மன் கோவிலில் காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி நடத்துவதற்காக கிரி வேலை செய்து வந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டு கைகளாலும், கம்பியாலும் தாக்கி விட்டு, அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் வெட்டு காயமடைந்த கிரியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருண், நவீன், அரவிந்த், கதிரேசன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
- குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல்
- போக்குவரத்து பாதிப்பு
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் குடிக்காடு காலனி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. மேலும் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், குடிநீருக்கும் மற்றும் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் காலை திடீரென்று பெருமத்தூர் குடிக்காடு-வைத்தியநாதபுரம் சாலை வழியாக வந்த ஒரு அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வீட்டை பூட்டி விட்டு மகள் வீட்டிற்கு தூங்க சென்ற போது சம்பவம்
- பாடாலுார் போலீசார் விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் கவுண்டர் தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு அருகே வசிக்கும் மகள் சசி வீட்டிற்கு தூங்க சென்றார். பின்னர் அவர் நள்ளிரவு தனது வீட்டிற்கு திரும்பினார். இதையடுத்து அவர் நேற்று அதிகாலை தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் வீட்டினுள் சென்று பார்த்த போது, பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு பத்திரம், வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் திருட்டு போயிருந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






