என் மலர்
நீலகிரி
- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
- போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
ஊட்டி:
ஊட்டியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், காவல் துறை சாா்பில் ஊட்டி அரசு பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தலைமை தாங்கினார்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் வணிக சங்கங்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான துண்டுப் பிரசுரங்களை அமைச்சா் வழங்கினாா்.
மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் ஆகியோா் முன்னிலையில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் கா.ராமசந்திரன் பேசியதாவது:-
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் மனதில் நிலைநிறுத்திக் கொள்வதோடு, உறவினா்கள், நண்பா்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
அதனை தொடா்ந்து, போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான கலைநிகழ்ச்சிகளை பாா்வையிட்டாா்.பின்னா் ஊட்டி அசெம்பிளி திரையரங்கில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு குறும்படத்தினை கல்லூரி மாணவ, மாணவிகளுடன் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, சேரிங்கிராஸ் பகுதியில் போதைப் பொருள் விழிப்புணா்வு பேரணியை தொடக்கிவைத்தாா்
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிகா ராணா, குன்னூா் சப்- கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ், ஊட்டி நகா்மன்றத் தலைவா் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாள ர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.
- சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்துபிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் தேனாடு கம்பை அறக்காடு பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாள ர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் பணியாற்றி வரும் நிஷாந்த் என்பவரது 4 வயது மகளை புதர் மறைவில் மறைந்திருந்த சிறுத்தை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வனத்து றையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டிக்கு அனுப் பினர்.தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்துபிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்க அந்த பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். மாவட்ட வன அலுவலர் சச்சின் உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையில், சிறுத்தை தாக்கி குழந்தை இறந்த அரக்காடு பகுதியில் 2 இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
- ஊட்டியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
- ஊட்டியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
ஊட்டி:
ஊட்டி அருகே தடுப்பு சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்த விதிமீறி கட்டப்பட்டிருந்தால் 4 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் ஊட்டி -குன்னூர் சாலையில் வேலி வியூ பகுதியில் நேற்று மதியம் தனியார் பகுதியில் இருந்த, 50 அடி கொண்ட கான்கிரீட் தடுப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த காட்டேஜ் நகராட்சி விதிகளை மீறி செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகமும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
ஆனால் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் காட்டேஜ் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து விடுதிகளில் தங்க வருபவர்களால் அசம்பாவிதத்தை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகம் நேற்று மாலை அங்கிருந்த 4 கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறுகையில், வேலி வியூவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து விதிமீறி கட்டப்பட்டிருந்த சீனிவாச ரெட்டி என்பவருக்கு சொந்தமான நான்கு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. என்றார்
- சாலையோரம் வெட்டி போடப்பட்டு இருந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.
- அனுமதியின்றி சிலர் மரத்தை வெட்டி கடத்த முயற்சிப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே சுங்கம் பகுதியில் நின்றிருந்த ராட்சத மரத்தை சிலர் உரிய அனுமதி பெறாமல் வெட்டி அகற்றியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உத்தரவின்பேரில் பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி ஆகியோர் நேரில் சென்று பார்ைவயிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் சாலையோரம் வெட்டி போடப்பட்டு இருந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று எருமாடு அருகே வெட்டுவாடியில் ராட்சத மரத்தை உரிய அனுமதியின்றி சிலர் வெட்டி கடத்த முயற்சிப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டும், சாலைகள் பழுதடைந்தும் உள்ளது.
- தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவாரண உதவிகளை பா.மு.முபாரக் வழங்கினார்
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டும், சாலைகள் பழுதடைந்தும் உள்ளது. இந்த மழையால் பாதிக்கப்பட்ட இந்திரா நகர், எமரால்டு, தக்கர் பாபாநகர், லாரன்ட்ஸ் ஆகிய பகுதிகளை மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் பார்வையிட்டு, மழை சேதங்களை உடனே சரி செய்திட தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் அங்குள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணபொருட்களையும், வழங்கினார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரசிவன், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமா ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கூடலூா் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கூடலூா்-உதகை சாலையில் நடுவட்டம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
- ஊட்டியில் இருந்து கேரளம் மற்றும் கா்நாடகம் மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனா்.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாகளில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. தொடா் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
நேற்று ஊட்டி-கூடலூா் சாலையில் எச்.பி.எப். பகுதியில் சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் மரத்தின் அடியில் இருசக்கர வாகனம் சிக்கிக் கொண்டது. அதேபோல ஊட்டி-கோத்தகிரி சாலையில் மைனலா என்ற இடத்தில் 4 மரங்கள் சாலையில் விழுந்தன. இதனை தீயணைப்பு நிலைய அலுவலா் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினா், வருவாய்த் துறையுடன் இணைந்து அகற்றினா்.
இன்று காலை மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குந்தா, கல்லக்கொரை உள்பட பல இடங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுவதால் மரங்கள் விழுந்துள்ளன.
இந்த மழைக்கு ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் கல்லக்கொரை என்ற பகுதியில் இன்று காலை 7 மணிக்கு திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூா் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கூடலூா்-உதகை சாலையில் நடுவட்டம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால், ஊட்டியில் இருந்து கேரளம் மற்றும் கா்நாடகம் மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனா். மேலும், சாலையின் பல கிலோ மீட்டா் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் சரிவை சீரமைத்தனா். இதையடுத்து, வாகனங்கள் சென்றன.
- மாவோயிஸ்டு நடமாட்டத்தை கண்காணிக்க பூலக்குன்று பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.
- போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லியில் இருந்து நெல்லிமேடு வழியாக சுல்தான்பத்தேரிக்கு செல்ல இணைப்பு சாலை உள்ளது.
அப்பகுதியில் ரேஷன் அரிசி, அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு கடத்துவதை தடுக்கவும், மாவோயிஸ்டு நடமாட்டத்தை கண்காணிக்கவும் பூலக்குன்று பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. அங்கு போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சோதனைச்சாவடியில் கண்காணிப்பு அறை மிகவும் சிறிதாக உள்ளது. இதனால் போலீசார் பணியாற்ற முடியாத நிலை உள்ளது. மேலும் பணி நேரம் முடிந்த பிறகு ஓய்வெடுக்க இயலாத சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக மழை பெய்யும் போது, அதில் நனைந்து போலீசார் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சோதனைச்சாவடியை சுற்றிலும் அபாயகரமான மரங்கள் உள்ளன.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மரங்கள் பலத்த சத்தத்துடன் அசைந்தாடுகிறது. இதனால் எப்போது வேண்மானாலும் மரங்கள் கீழே விழும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக போலீசார் அச்சத்துடன் பகல், இரவு நேரங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, பூலக்குன்று சோதனைச்சாவடியில் கழிப்பறை மிகவும் சிறிய அறையில் உள்ளது.
போதுமான இடவசதி இல்லாததால் போலீசார் பணிபுரிவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. சோதனைச்சாவடியை சுற்றிலும் வளர்ந்து உள்ள அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. தொடர் மழையால் கடுங்குளிர் நிலவுகிறது. எனவே, மாவட்ட மற்றும் மாநில எல்லையில் பணிபுரியும் போலீசாரை கருத்தில் கொண்டு போதுமான இடவசதியுடன் பூலக்குன்று சோதனைச்சாவடியை புதுப்பிக்க வேண்டும் என்றனர்.
- மதுபான உரிமஸ்தலங்களில் எந்தவித மதுபானங்களும் விற்பனை செய்யப்படாது.
- உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊட்டி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில், வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான (சில்லறை விற்பனை) விதிகள் 1989 ஆகியவற்றின்படி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் எப்.எல்2, எப்.எல்3, எப்.எல்3 ஏ மதுபான உரிமஸ்தலங்களில் எந்தவித மதுபானங்களும் விற்பனை செய்யப்படாது.
மேலும், அன்றைய தினம் கட்டாயமாக டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் எப்.எல்2, எப்.எல்3, எப்.எல்3 ஏ மதுபான உரிமஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஏதும் திறந்திருப்பதாக பொது மக்களுக்கு தகவல் தெரியும்பட்சத்தில் அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிராம மக்களுக்கு ஊட்டச் சத்து உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.
- விழாவில் பங்ேகற்ற அனைவருக்கும் பாரம்பரிய உணவான தினை பாயாசம் வழங்கப்பட்டது.
அரவேணு
கோத்தகிரி அடுத்த கரிக்கையூரில் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக பழங்குடியினர் தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில் சர்வதேச பழங்குடியின தினத்தை பற்றிய சிறப்புகள் மற்றும் பழங்குடியின கலாச்சாரத்தை பாதுகாத்தல் மற்றும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் பற்றி எடுத்துரைக்க பட்டது. மேலும் பாரம்பரிய ஊட்டச்சத்து உணவுமுறை பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
விழாவில் மாணவ, மாணவிகள், ஊர் மக்களின் கலாச்சார நடனம், நாடகம், கலை நிகழ்சிகள் நடைபெற்றது.கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
விழாவில் பங்ேகற்ற அனைவருக்கும் பாரம்பரிய உணவான தினை பாயாசம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கிராம மக்களுக்கு ஊட்டச் சத்து உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.
இதில் யு.என்.சி.எஸ். கள அலுவலர், பொறியாளர், கணக்காளர், கிராம வளர்ச்சி அலுவலர்கள், இருளர் நல சங்க செயலாளர், ஊர் தலைவர்கள், தலைமை ஆசிரியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஓவேலி கெல்லிஸ் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
- மொளப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த 107 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், ஓவேலி கெல்லிஸ் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மரம் விழுந்ததில் தனியாா் எஸ்டேட் பெண் தொழிலாளி சுமதி உயிரிழந்தாா்.
இந்நிலையில் கூடலூா் அரசு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா் ராமசந்திரன், நிவாரண நிதியாக ரூ.4 லட்சம் வழங்கினாா்.
தொடா்ந்து புத்தூா்வயல் பகுதிக்குச் சென்று முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மொளப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த 107 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.
அப்போது, கலெக்டர் அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூா் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், நகா்மன்ற தலைவா் பரிமளா, வட்டாட்சியா் சித்தராஜ் நகர செயலாளர் இளஞ்செழியன் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- காங்கிரஸ் கட்சியின் 75-வது ஆண்டு பொன்விழா பாதயாத்திரை கோத்தகிரியில் நடைபெற்றது
- ஏராளமான கட்சி நிர்வாகிகளும் கலந்து 75 ஆண்டு பாதயாத்திரை நிகழ்வில் கலந்து கொண்டனர்
அரவேணு
தேசிய காங்கிரஸ் கட்சியின் 75-வது ஆண்டு பொன்விழா பாதயாத்திரை கோத்தகிரியில் நடைபெற்றது
கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பாத யாத்திரை புறப்பட்டது. சில்லாபாபு தலைமை தாங்கினார். வர்த்தக பிரிவு தலைவர் லியாகத் அலி, குன்னூர் தொகுதி பொறுப்பாளர் கமலா சீராலன், மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ. கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் கலந்து 75 ஆண்டு பாதயாத்திரை நிகழ்வில் கலந்து கொண்டனர். முருகன் நகரத் தலைவர் வழங்கினார்.
- படுகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
- பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த மாதத்தில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன் தலைமையில் மாவட்ட அளவிலான நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.
அதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், நாக்குபெட்டா தலைவர் முருகன், நீலகிரி ஆதிவாசிகள் சக்தி தலைவர் குள்ளாகவுடர், படுகர் கூட்டமைப்பு தலைவர் பொப்ளி, நாக்குபெட்டா நல சங்க துணை பொதுச்செயலாளர் சண்முகம், படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன், மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, குமார், மணிகண்டன், பரமேஸ்வரன், தருமன் உள்பட 11 பேர் உள்ளனர்.
இந்த குழுவினர் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து, படுகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உடனிருந்தார்.






