search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் 15-ந் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது
    X

    நீலகிரியில் 15-ந் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது

    • மதுபான உரிமஸ்தலங்களில் எந்தவித மதுபானங்களும் விற்பனை செய்யப்படாது.
    • உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில், வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான (சில்லறை விற்பனை) விதிகள் 1989 ஆகியவற்றின்படி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் எப்.எல்2, எப்.எல்3, எப்.எல்3 ஏ மதுபான உரிமஸ்தலங்களில் எந்தவித மதுபானங்களும் விற்பனை செய்யப்படாது.

    மேலும், அன்றைய தினம் கட்டாயமாக டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் எப்.எல்2, எப்.எல்3, எப்.எல்3 ஏ மதுபான உரிமஸ்தலங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஏதும் திறந்திருப்பதாக பொது மக்களுக்கு தகவல் தெரியும்பட்சத்தில் அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×