search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cottage buildings"

    • ஊட்டியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
    • ஊட்டியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஊட்டி:

    ஊட்டி அருகே தடுப்பு சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்த விதிமீறி கட்டப்பட்டிருந்தால் 4 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் ஊட்டி -குன்னூர் சாலையில் வேலி வியூ பகுதியில் நேற்று மதியம் தனியார் பகுதியில் இருந்த, 50 அடி கொண்ட கான்கிரீட் தடுப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    இந்த காட்டேஜ் நகராட்சி விதிகளை மீறி செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகமும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    ஆனால் தொடர்ந்து அந்த கட்டிடத்தில் காட்டேஜ் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தை அடுத்து விடுதிகளில் தங்க வருபவர்களால் அசம்பாவிதத்தை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகம் நேற்று மாலை அங்கிருந்த 4 கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.

    இதுகுறித்து நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறுகையில், வேலி வியூவில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து விதிமீறி கட்டப்பட்டிருந்த சீனிவாச ரெட்டி என்பவருக்கு சொந்தமான நான்கு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. என்றார்

    ×