என் மலர்
நீலகிரி
- பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன் தலைமையில் மாவட்ட அளவிலான நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.
- படுகர் சமுதாய மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் சமுதாய மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை மாதத்தில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன் தலைமையில் மாவட்ட அளவிலான நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் தொடர்ந்து மத்திய அமைச்சர்களை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஊட்டியில் ரெயில்வே அமைச்சகத்தின் சார்பில் அங்குள்ள தனியார் ஓட்டலில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் ரெயில்வே அமைச்சகத்தின் சார்பில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற ெரயில்வே அமைச்சகத்தின் நிலைகுழு உறுப்பினர்களின் தலைவரும், பா.ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவருமான ராதா மோகன் சிங்கிடம் படுகரின மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு ஒன்று அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக் கொண்ட ராதா மோகன் சிங், படுகரின மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க உரிய அமைச்சகத்திடம் அளித்து ஆவண செய்யப்படும் என்று உறுதி அளித்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- பி. ஐ. எஸ் நடத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம் ஐலேண்ட் அறக்கட்டளைஅரங்கில் நடைபெற்றது.
- பயிற்சி முகாமை கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.
அரவேணு:
இந்திய தர அமைவிடம் கோவை மற்றும் ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பி. ஐ. எஸ் நடத்தும் ஒரு நாள் பயிற்சி முகாம் ஐலேண்ட் அறக்கட்டளைஅரங்கில் நடைபெற்றது.
பயிற்சி முகாமை கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.
செயலாளர் ராஜன் வரவேற்றார். நுகர்வோர் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் சிட்டிசன் வாய்ஸ் ஜெயராமன் உரை நிகழ்த்தினார். பி. ஐ. எஸ்-ன்பொதுவான பணிகள் குறித்து ராஜிவ் பயிற்சி வழங்கினார்.
இதில் உணவு பாதுகாப்பு அதிகாரி சிவராஜ், கோத்தகிரி அணைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் லியாகத்அலி, பொருளாளர் மகாராஜா சந்திரன், சுதாகேஸ் ரமேஷ், அமைப்பின் சார்பில் பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள் செல்வராஜ், ஜெயந்தி, இணை செயலாளர்கள் ஜம்புலிங்கம்,கண்மணி, முகமதுஇஸ்மாயில், கிரேஸி, வினோபா போப், விபின் குமார், ஷாஜகான், லெனின் மார்க்ஸ், ஜார்ஜ் பால், மற்றும் திரைசா,லலிதா,விக்டோரியா, ராதிகா,யசோதா, சங்கீதா, மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் . முடிவில் கூடுதல் செயலாளர் முகமது சலீம் நன்றி கூறினார்
- ஊட்டி நகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியது.
- சாலைகளில் இருந்த குழிகளிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.
குன்னூர்:
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கனமழை கொட்டி தீர்த்தது.
இதை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்ததுடன், இதமான காலநிலையும் நிலவி வந்தது.
இந்த கால நிலையை அனுபவிக்க சமவெளி பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். இதனால் அனைத்து சுற்றுலா தலங்களுமே களைகட்டி இருந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவையில் ஓரிரு நாட்கள் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன்படி நேற்று காலை நன்றாக வெயில் அடித்த நிலையில், மதியத்திற்கு பின்னர் ஊட்டி, அருவங்காடு, குன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் ஊட்டி நகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. சாலைகளில் இருந்த குழிகளிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.
மழையுடன் கடும் பனிமூட்டமும் நிலவியது. பகல் வேளையே இரவு போல காட்சியளித்தது. எதிரே வரும் எந்த வாகனங்களும் தெரியவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். இதன்காரணமாக சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதேபோல் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அருவங்காடு, வண்டிச்சோலை, பர்லியார் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நீலகிரியில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்து இருப்பதால், கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
- கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
- மசினகுடிக்கு செல்லும் சாலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை தொடர் கனமழை பெய்தது. இதேபோல் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. அண்டை மாநிலங்கள் உட்பட பல இடங்களில் மழை அதிகமாக பெய்ததால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. குறிப்பாக கூடலூரில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி முதுமலை வெறிச்சோடியது.
இந்த நிலையில் மழை குறைந்து பரவலாக வெயில் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பி உள்ளது. தொடர்ந்து மாயாற்றில் வெள்ளம் குறைந்து விட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் யானைகளுக்கு வன ஊழியர்கள் உணவு தயார் செய்வதை பார்வையிட்டனர். இதனால் வளர்ப்பு யானைகள் முகாம் களை கட்டி உள்ளது. தொடர்ந்து தனியார் வாகன சவாரி மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்களும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் வாகன சவாரி, வளர்ப்பு யானை முகாமுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர் என்றனர்.
- வித்தியாசமான வடிவத்துடன், பச்சை நிறத்தில் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருந்தது.
- 15 சென்டி மீட்டர் நீளம், 10 சென்டி மீட்டர் அகலம் கொண்டதும், அளவில் பெரிதாகவும் வண்ணத்துப்பூச்சி ஒன்று தென்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பலவித வடிவம் மற்றும் வண்ணங்களால் ஆன வண்ணத்துப்பூச்சிகள் பறந்து திரிந்து வருகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி பகுதியில் நேற்று 15 சென்டி மீட்டர் நீளம், 10 சென்டி மீட்டர் அகலம் கொண்டதும், அளவில் பெரிதாகவும் வண்ணத்துப்பூச்சி ஒன்று தென்பட்டது.
வித்தியாசமான வடிவத்துடன், பச்சை நிறத்தில் மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருந்தது. இந்த வண்ணத்துப்பூச்சி சாதாரண வண்ணத்துப்பூச்சிகளை விட பெரிதாக காணப்பட்டதால், அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து சென்றனர். இதே வகை வண்ணத்துப்பூச்சி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலும் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.
- வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.
தற்போது மழை குறைந்து, பகல் நேரங்களில் மிதமான வெயிலும், இரவில் நீர்ப்பனியும் நிலவி வருகிறது.இந்த இதமான காலநிலையை அனுபவிப்பதற்காகவும், இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா மையங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
இந்த ஆண்டு முதல் கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் சுமார் 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கடந்த 2 மாதங்களாக இடைவிடாது மழை கொட்டியது. மேலும் கடும் குளிரும் காணப்பட்டதால், சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடியது.
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை விடப்பட்டதால் கடந்த 3 தினங்களாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இதனால் லவ்டேல் சந்திப்பு முதல் படகு இல்லம் வரையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதைத் தொடா்ந்து போலீசாா் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனா்.
ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.
கடந்த 3 நாள்களில் மட்டும் தாவரவியல் பூங்காவுக்கு சுமாா் 20,000 சுற்றுலாப் பயணிகளும், ரோஜா பூங்காவுக்கு 8,000 சுற்றுலாப் பயணிகளும், ஊட்டி படகு இல்லத்துக்கு 10,000 சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்த நிலையில், பைக்காரா படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
அதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.
- நீலகிரி மாவட்டம் குன்னூரில் வருகிற 27-ந் தேதி திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடக்கிறது.
- ஆர்வமுள்ள இளைஞர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கினர்.
ஊட்டி
தி.மு.க. இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதிஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் வருகிற 27-ந் தேதி நடக்கவிருக்கும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம், குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதிமுக இளைஞர் அணி சார்பில் குன்னூர் நகர செயலாள ராமசாமி தலைமையில் நடைபெற்றது.
குன்னூர் நகரசபை துணை தலைவர் வாசிம் ராஜா, நகர கழக துணைசெயலாளர் வினோத்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், தலைமை கழக பேச்சாளர் ஜாஹிர் ஹீசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குன்னூர் நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரவீன் , செலின் ராஜா மற்றும் நகர, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். பயிற்சி பாசறையில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குன்னூர் நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபனிடம் வழங்கினர்.
- கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி மோகன் தலைமை தாங்கினார்.
- கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
அரவேனு
நீலகிரி மாவட்ட மரவேலை மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ.) மகாசபை கூட்டம் நடைபெற்றது. கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி மோகன் தலைமை தாங்கினார். கலைமணி வரவேற்றார். மாநில செயலாளர் கோபி குமார் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் அரசின் நலவாரியத்தில் பதிவு செய்து உள்ள உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஏழை மக்களுக்கு மானிய விலையில் சிமெண்ட் வழங்க வேண்டும். வாரிய பதிவை எளிமையாக்க வேண்டும். பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் ரூ.30 கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது போல அனைத்து சலுகைகளும் உடலுழைப்பு மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பச்சை தேயிலைக்கு குறைந்த பட்சம் 30 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்
அரவேணு
கோத்தகிரி அருகே கடைகம்பட்டி கிராமத்தில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி னார். ஊர் நாட்டா மை கண்ணப்பன், ஊர் நிர்வாகிகள் காரியதரிசி ரமேஷ் , போஜ ராஜன், செவன வாத்தியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பச்சை தேயிலைக்கு குறைந்த பட்சம் 30 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும், படுகர் இன மக்களை ஆதிவாசி பட்டியலில் சேர்க்க வேண்டும், கடந்த சில மாதங்களாக, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 8 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது.
இது கூலி, தோட்டங்களை பராமரிக்கவே போதுமானது இல்லை. பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால், விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக தேயிலை விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னூரில் உள்ள தேயிலை வாரியம் முன்பு வருகிற செப்டம்பர் 14-ந் தேதி மலை மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டத்திற்கு கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. கண்ணப்பன் வரவேற்றார். சாலி நன்றி கூறினார்.
- நிா்வாகத்துடன் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
- தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், மேல்கூடலூா் பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் நிா்வாகம் கடந்த 2 ஆண்டுகளாக ஊதியம், போனஸ், வார கூலி உள்ளிட்ட பணப் பலன்களை வழங்கவில்லை. இதுகுறித்து நிா்வாகத்துடன் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஏஐடியூசி நிா்வாகிகள் தலைமையில் கூடலூா்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தொழிலாளா்கள் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த கூடலூா் டி.எஸ்.பி. மகேஷ்குமாா், ஆய்வாளா் அருள் உள்ளிட்டோா் தொழிற்சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இது தொடா்பாக நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவெடுக்கலாம் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொழிலாளா்களின் போராட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- மாவட்ட கலெக்டா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தனா்
ஊட்டி
ஊட்டியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவுப் பணியாளா் சங்கத்தினா் மாவட்ட கலெக்டா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விஜயா தலைமை தாங்கினாா்.
இதில் பங்கேற்றோா் கூறுகையில், ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும், அனைத்து சத்துணவு ஊழியா்களுக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியா்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தால் உடனே பிழைப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும், தமிழக முதல்வா் அறிவித்துள்ள காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை தமிழக அரசே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றதாக தெரிவித்தனா்
- ஒரே ஒரு ஒத்தையடி பாதை தான் உள்ளது.
- நாளுக்கு நாள் வன விலங்குகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
அரவேணு:
கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி ஊராட்சியில் உள்ளது அட்டவளை பாரதி நகர். இங்கு 50க்கும் மேற்பட்ட தாயகம் திரும்பிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வாழும் மக்கள் கல்வி, மருத்துவம், அத்தியா வசிய தேவைகளுக்கு குன்னூர் அல்லது கோத்தகிரிக்கு தான் செல்ல வேண்டும். இதற்கும் ஒரே ஒரு ஒத்தையடி பாதை தான் உள்ளது. அதுவும் பாதி வரை மட்டுமே உள்ளது.
அதன்பின்னர் மலை மீது ஏறி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்க வேண்டும்.
குறிப்பாக பிரசவம், மருத்துவம், இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் போது எண்ணற்ற இடர்பாடுகளை சந்திக்கின்றனர்.
இதுதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சரியான சாலை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகிறோம். அத்தியாவசிய அடிப்படை தேவைகளும் இங்கு இல்லை. இதனால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே வருகிறோம்.
நாளுக்கு நாள் வன விலங்குகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நடந்து செல்லவும் அச்சமாக உள்ளது.
நாங்கள் தினம் தினம் உயிரை கையில் பிடித்து இந்த சாலையில் நடந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. எனவே எங்கள் ஊருக்கு சாலை அமைத்து கொடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






