என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
    • கொடநாடு வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

    இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறுவிசாரணை நடந்து வருகிறது.

    இதுவரை சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி உள்பட 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    கொடநாடு தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று காலை கொடநாடு வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • திருநம்பி ஹரி படிப்பதில் மிகவும் ஆர்வம் உடையவராக இருந்தார்.
    • நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கல்லூரிக்கு செல்லும் திருநம்பி ஹரி ஆவார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்த உண்டி மாயார் பகுதியை சேர்ந்தவர் ஹரி. திருநம்பியான இவரை குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது பெற்றோரால் கவனிக்க முடியவில்லை.

    இதையடுத்து ஹரியை ஊட்டியை சேர்ந்த வக்கீல் சவுமியா சாசு என்பவர் தத்து எடுத்து வளர்த்து வருகிறார். திருநம்பி ஹரி படிப்பதில் மிகவும் ஆர்வம் உடையவராக இருந்தார். படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார்.

    இதையடுத்து அவர் பள்ளியில் சேர்ந்து படித்தார். பள்ளி படிப்பை முடித்த கையோடு ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், படிக்க விண்ணப்பித்தார். தற்போது அவருக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படிக்க இடம் கிடைத்துள்ளது.

    இதையடுத்து அவரும் கல்லூரிக்கு சென்று மற்ற மாணவர்களுடன் இணைந்து படித்து வருகிறார். மற்ற மாணவர்களும் அவருடன் சகஜமாக பழகி வருகின்றனர்.

    இதுகுறித்து திருநம்பி ஹரி கூறுகையில், எனக்கு படிப்பில் ஆர்வம் உள்ளது.

    ஆர்வம் உள்ளதால் படிக்க விரும்பினேன். தற்போது ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்து வருகிறேன். படித்து முடித்ததும் அரசு பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம் என்றார்.

    இதன்மூலம் நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கல்லூரிக்கு செல்லும் திருநம்பி ஹரி ஆவார்.

    • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை பொருளாதார ரீதியாக உயா்த்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
    • தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல மக்களவை குழு உறுப்பினா்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு குழுவின் தலைவா் கிரித் பிரேம்பாய் சோலங்கி தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் இருந்து ஆ.ராசா உள்பட 23 எம்.பி.க்கள் கலந்து கொண்டனா்.

    கூட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மற்றும் ஐ.டி.பி.ஐ. வங்கியில் பணியாற்றும் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் பிரிவினருக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தமிழக அரசு சாா்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை பொருளாதார ரீதியாக உயா்த்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதைத் தொடா்ந்து அவா்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளா் ஜவஹா், வேளாண் துறை சிறப்பு செயலாளா் ஆபிரகாம், தமிழக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அன்வா்தீன், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் ஆசிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    முன்னதாக எம்.பி.க்கள் குழு தலைவரிடம் பழங்குடியின அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் குறவன் மற்றும் மலைக்குறவன் உள்பட பல்வேறு பழங்குடி மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதாகவும், பஞ்சமி நிலங்கள் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் காவல் துறையினரால் பழங்குடியின மக்கள் மீது போடப்படும் பொய் வழக்குகள் உள்பட பல்வேறு அம்சங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின அமைப்புகள் சாா்பில் மனு கொடுக்கப்பட்டது.

    • மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை செயற்குழு கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைைமயில் நடந்தது.
    • தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல் திட்டத்தை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை செயற்குழு கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைைமயில் நடந்தது.

    கூட்டத்தில் நீலகிரியை இயற்கை மாவட்டமாக மாற்றுவதற்கு தயாரிக்கப்பட்ட செயல் திட்ட அறிக்கை விரிவாக எடுத்துரைத்ததை கேட்டறிந்து, செயல் திட்டத்தின் ஆக்க கூறுகளை தனித்தனியாக ஆய்வு செய்தார். மேலும் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல் திட்டத்தை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    மாவட்ட அளவிலான செயற்குழுவை மறுசீரமைக்கவும், துணை குழுக்கள் உருவாக்குமாறும், இயற்கை மாவட்டமாக மாற்றுவதற்கு அதிகளவில் விவசாயிகளுக்கு விழிப்பு ணர்வு பயிற்சிகள் வழங்க வேண்டும்.

    இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் நிலங்க ளை தொடர்ச்சி யாக சம்பந்தப்பட்ட அலு வலர்கள் கண்காணி ப்பதோடு, குழுக்கள் அமைக்குமாறும், இயற்கை வழியில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சந்தைப்ப டுத்த விரிவாக செயல்திட்டம் தயார் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலாமேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வருகையானது 100 சதவீதத்தில் இருந்து 40 குறைந்து வந்தது.
    • பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே உள்ள கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆர். பி. எஸ். கே மருத்துவ குழு, யூ.என்.சி.எஸ் சார்பில் பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

    இதில் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பள்ளியில் மாணவர்கள் உடல்நிலை சரியில்லை எனும் காரணத்தால் தொடர்ந்து வருகையானது 100 சதவீதத்தில் இருந்து 40 குறைந்து வந்தது. எனவே சுகாதார முறையில் ஏதாவது பிரச்சினைகள் எற்பட்டதா எனவும் கண்காணிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று பல்வேறு பள்ளிகளில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரு சில மாணவர்கள் இதயம், கண், நுரையீரல், மூளை போன்ற உறுப்புக்களில் பாதிப்பு எற்பட்டிருந்த குணப்படுத்த உதவ விருப்பமுள்ள ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ள அமைப்பு யு. என். சி .எஸ் அனுகி உதவ கேட்டுகொள்ளப்படுகிறது.

    • தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
    • நோயாளிகளை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்சை நடுவழியில் மறித்தது.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே உள்ள இரும்புபாலம், பாரைக்கல், ரிச்மென்ட் தேவகிரி நீர்மட்டம், மேஞ்கோரேஞ்ச் உள்பட பலபகுதிகளில் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசம் செய்து வருகிறது. மேலும், சாலையில் செல்லும் வாகனங்களையும் வழிமறித்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு பந்தலூர் அருகே இரும்புபாலம் பகுதியில் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அப்போது அந்த யானை பந்தலூர்அரசுஆஸ்பத்திரி அருகே நோயாளிகளை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்சை நடுவழியில் மறித்தது. இதுபற்றி அறிந்ததும் தேவாலா வனசரகர் அய்யனார், வனவர் சிவகுமார், வனகாப்பாளர் தம்பகுமார் மற்றும் வேட்டைதடுப்புகாவலர்கள் அங்கு சென்று, காட்டுயானையை விரட்டி அடித்தனர். இதனால் ஆவேசமடைந்த காட்டுயானை இரும்புபாலம் பொதுமக்கள் குடியிருப்பை முற்றுகையிட்டது. இரும்புபாலம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். தேவாலா வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கூட்டத்திற்கு விவசாய சங்கங்கள் வருத்தம் தெரிவித்தனர்.
    • குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

    கோவை:

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யக்கோரி நாக்குபெட்டா விவசாய சங்கம் மற்றும் மலை மாவட்ட சிறு குறு விவசாய சங்க சார்பில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில் ஊட்டியில் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணய குறித்து கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், மற்றும் தேயிலை வாரியா இயக்குனர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    ஆனால் விவசாய சங்கங்களை அழைக்காமல் இந்த கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு விவசாய சங்கங்கள் வருத்தம் தெரிவித்தனர். இது குறித்து மலை மாவட்ட சிறு குழு விவசாய தலைவர் தும்பூர் போஜன் கூறியதாவது:-

    கடந்த 2, 3 மாதங்களாக நாக்குபெட்டா மற்றும் சிறு குறு விவசாய சங்கம் குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யக்கோரி பலக்கட்ட ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றன.

    இவர்கள் விவசாய சங்கங்களை அழைத்துப் பேசாமல் அவர்களாகவே பேசியதில் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. எனவே அறிவித்தபடி 14-ந் தேதி குன்னூர் தேயிலை வாரியத்திற்கு முன்பாக அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • துர்நாற்றம் வீசிவருவதால் நேய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்து தரபட்டது குறிப்பிடதக்கது.

    ஊட்டி, :

    கூடலூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முடிக்கப்பட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.என்.வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    கூடலூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாவனல்லா பகுதியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பண்ணை குட்டை, ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

    தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர்,

    தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியி குறித்து ஆசிரியர்க–ளிடம் கேட்டறிந்தார்.

    பின்னா் மசினகுடி பகுதியிலுள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் உர கிடங்கினையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தாமோதரன், மசினகுடி ஊராட்சித் தலைவா் மாதேவி மோகன், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் உள்ளனர்.

    • இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
    • வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுபட்டறை அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்து குடியிருப்புகளை நோட்டமிடும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வரவழைக்கப்பட்டது.

    நாள்தோறும் சிறுத்தை வந்து செல்லும் பகுதியில் நேற்று கூண்டு வைக்கப்பட்டது. கூண்டிற்குள் கம்பிகள் சூழ்ந்த தடுப்புக்குள் ஆடுவைக்கப்பட்டுள்ளது. அதே போல் கூண்டை சுற்றி தேயிலை செடிகள் வைக்கப்பட்டுள்ளது.

    சிறுத்தையை பிடிக்க அதே இடத்தில் வனத்துறையினர் இருந்து கண்காணித்து வருகின்றனர்.

    • கோடை காலங்கள் மட்டுமல்லாமல், சாதாரண நாட்களிலும் கூட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.
    • இந்த சாலையில் கடந்தசில நாட்களாக கழிவுநீர் வழிந்ேதாடுகிறது.

    ஊட்டி:

    ஊட்டி நகரின் மிக முக்கிய சாலைகளில் ஒன்று எட்டின் சாலை. இந்த சாலையில் கனரக வாகனங்களும், சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் செல்லும் முக்கியமான சாலையாக உள்ளது.

    இந்த சாலையில் இரண்டு மூன்று மருத்துவமனைகள் பள்ளிக்கூடங்கள் முக்கிய அலுவலகங்கள் வங்கிகள் என்று அனைத்து நிறுவனங்களும் செயல்ப ட்டு வருகிறது. இதனால் எப்போது வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படு கிறது.கோடைகா லங்களில் அதிகளவில் காணப்படும்.

    கோடை காலங்கள் மட்டுமல்லாமல், சாதாரண நாட்களிலும் கூட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இதனால் எப்போதும் இந்த சாலை மிகுந்த பரபரப்பாகவே காணப்படும்.

    இந்த நிலையில் இந்த சாலையில் கடந்தசில நாட்களாக கழிவுநீர் வழிந்ேதாடுகிறது. மேலும் சாலை மிகவும் மோசம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுவதும் தொடர் கதை யாகி வருகிறது. எனவே இந்த சாலையினை உடனடி யாக சீரமைத்து தர வேண்டும் . அதற்கு தகுந்த நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே ஊட்டி நகர மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது

    • செப்டம்பா் மாதத்திலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தற்போது பணியாற்றியது போல சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
    • மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் அரசின் நலத் திட்டங்கள் குறித்து தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.ந

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தி ல் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில், நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.என்.வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.என்.வெங்கடேஷ் கூறியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் தென்மேற்குப் பருவ மழை காலத்தில் ஆற்றிய பணி சிறப்பானது.

    செப்டம்பா் மாதத்திலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தற்போது பணியாற்றியது போல சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை வேகப்படுத்த வேண்டும்.ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.பள்ளிக் கல்வித் துறையின் மூலம் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற அரசின் சிறப்பான திட்டங்கள் குறித்தும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் அரசின் நலத் திட்டங்கள் குறித்து தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, அவா் ஊட்டி நகராட்சிக்குள்பட்ட காந்தல் பகுதியில், நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலகம் அமைக்கும் பணியியையும், கோடப்பமந்து பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நிலச்சரிவு தடுப்புச் சுவரையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    இதில், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நிவாஸ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • போதைபொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே குஞ்சப்பனையில் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் போதைபொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வினுதாஸ் அனைவரையும் வரவேற்றார்.

    கோத்தகிரி இன்ஸ்பெக்டர் சண்முகவேல், போக்சோ மற்றும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதில் போலீஸ்காரர்கள் ரமேஷ் ஜேக்கப், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் காஞ்சனா நன்றி கூறினார்.

    ×