என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in attacks on the downtrodden and tribals in Tamil Nadu"

    • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை பொருளாதார ரீதியாக உயா்த்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
    • தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல மக்களவை குழு உறுப்பினா்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் ஊட்டியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு குழுவின் தலைவா் கிரித் பிரேம்பாய் சோலங்கி தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் இருந்து ஆ.ராசா உள்பட 23 எம்.பி.க்கள் கலந்து கொண்டனா்.

    கூட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மற்றும் ஐ.டி.பி.ஐ. வங்கியில் பணியாற்றும் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் பிரிவினருக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தமிழக அரசு சாா்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை பொருளாதார ரீதியாக உயா்த்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதைத் தொடா்ந்து அவா்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளா் ஜவஹா், வேளாண் துறை சிறப்பு செயலாளா் ஆபிரகாம், தமிழக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அன்வா்தீன், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் ஆசிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

    முன்னதாக எம்.பி.க்கள் குழு தலைவரிடம் பழங்குடியின அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் குறவன் மற்றும் மலைக்குறவன் உள்பட பல்வேறு பழங்குடி மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் பல்வேறு இடையூறுகள் இருப்பதாகவும், பஞ்சமி நிலங்கள் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் காவல் துறையினரால் பழங்குடியின மக்கள் மீது போடப்படும் பொய் வழக்குகள் உள்பட பல்வேறு அம்சங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின அமைப்புகள் சாா்பில் மனு கொடுக்கப்பட்டது.

    ×