என் மலர்
நீங்கள் தேடியது "Counting Writing Project"
- செப்டம்பா் மாதத்திலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தற்போது பணியாற்றியது போல சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
- மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் அரசின் நலத் திட்டங்கள் குறித்து தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.ந
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தி ல் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில், நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.என்.வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.என்.வெங்கடேஷ் கூறியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் தென்மேற்குப் பருவ மழை காலத்தில் ஆற்றிய பணி சிறப்பானது.
செப்டம்பா் மாதத்திலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தற்போது பணியாற்றியது போல சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை வேகப்படுத்த வேண்டும்.ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.பள்ளிக் கல்வித் துறையின் மூலம் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற அரசின் சிறப்பான திட்டங்கள் குறித்தும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் அரசின் நலத் திட்டங்கள் குறித்து தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, அவா் ஊட்டி நகராட்சிக்குள்பட்ட காந்தல் பகுதியில், நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலகம் அமைக்கும் பணியியையும், கோடப்பமந்து பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நிலச்சரிவு தடுப்புச் சுவரையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நிவாஸ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.






