search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே  பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    கோத்தகிரி அருகே பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பச்சை தேயிலைக்கு குறைந்த பட்சம் 30 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்

    அரவேணு

    கோத்தகிரி அருகே கடைகம்பட்டி கிராமத்தில் நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி னார். ஊர் நாட்டா மை கண்ணப்பன், ஊர் நிர்வாகிகள் காரியதரிசி ரமேஷ் , போஜ ராஜன், செவன வாத்தியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பச்சை தேயிலைக்கு குறைந்த பட்சம் 30 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும், படுகர் இன மக்களை ஆதிவாசி பட்டியலில் சேர்க்க வேண்டும், கடந்த சில மாதங்களாக, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 8 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது.

    இது கூலி, தோட்டங்களை பராமரிக்கவே போதுமானது இல்லை. பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால், விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக தேயிலை விவசாயிகளுக்கு மானியத் தொகை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னூரில் உள்ள தேயிலை வாரியம் முன்பு வருகிற செப்டம்பர் 14-ந் தேதி மலை மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டத்திற்கு கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. கண்ணப்பன் வரவேற்றார். சாலி நன்றி கூறினார்.

    Next Story
    ×