திராவிட மாடல் பயிற்சி பாசறை ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வருகிற 27-ந் தேதி திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடக்கிறது.ஆர்வமுள்ள இளைஞர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கினர்.
திராவிட மாடல் பயிற்சி பாசறை ஆலோசனை கூட்டம்
Published on

ஊட்டி

தி.மு.க. இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதிஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் வருகிற 27-ந் தேதி நடக்கவிருக்கும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம், குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதிமுக இளைஞர் அணி சார்பில் குன்னூர் நகர செயலாள ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

குன்னூர் நகரசபை துணை தலைவர் வாசிம் ராஜா, நகர கழக துணைசெயலாளர் வினோத்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், தலைமை கழக பேச்சாளர் ஜாஹிர் ஹீசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் குன்னூர் நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரவீன் , செலின் ராஜா மற்றும் நகர, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். பயிற்சி பாசறையில் பங்கேற்க ஆர்வமுள்ள இளைஞர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குன்னூர் நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபனிடம் வழங்கினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com