என் மலர்
நீலகிரி
- மாணவியை கற்பழித்து கொன்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
- சம்பவத்தில் ரஜ்னேஷ் குட்டன் மட்டுமல்லாமல் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி பைக்காரா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் ஊட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது மாணவிக்கு இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவி மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை மாணவி வழக்கம் போல பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பெற்றோரும் வேலைக்கு சென்று விட்டனர்.
மாலையில் மாணவியின் பெற்றோர் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் மாணவி இல்லை. எப்போதும் மாணவி பெற்றோர் வருவதற்கு முன்பே வீட்டிற்கு வந்து விடுவார்.
ஆனால் நேற்று மாலை வெகுநேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து பெற்றோர் அக்கம்பக்கத்தில் உள்ள தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று மகளை தேடி பார்த்தனர்.
ஆனால் அங்கு அவர் செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அச்சம் அடைந்தனர். மகளை காணாமல் தவித்தனர்.
பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து, அக்கம்பக்கம் உள்ள பகுதிகளிலும் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் அங்கர்போர்டு அருகே உள்ள புதருக்குள் மாணவி ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் வந்தது. இதை கேட்டதும் மாணவியின் பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தங்கள் மகளாக இருக்குமோ என்ற அச்சத்தில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடினர். அங்கு இறந்த நிலையில் கிடந்த மாணவியை பார்த்தனர். மாணவி பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் கிடந்தார். அது மாயமான தங்கள் மகள் என்பதை அறிந்ததும் மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து பொதுமக்கள் பைக்காரா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் மாணவியின் உடலை பார்வையிட்டு விசாரித்தனர். அந்த இடத்தில் ஏதாவது தடயங்கள் இருக்கிறதா? என தேடிப் பார்த்தனர்.
அப்போது, மாணவி உடல் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. விசாரணையில் பள்ளிக்கு சென்ற மாணவியை சிலர் காரில் கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் மாணவியை கற்பழித்து கொன்ற நபர்களை கைது செய்யும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என தெரிவித்து மாணவியின் உறவினர்களும், பொதுமக்களும் ஊட்டி-கூடலூர் சாலையில் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் காணப்பட்டது.
உடனடியாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நீண்ட நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவியை கற்பழித்து கொன்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்தே பொதுமக்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதித்தனர்.
இதையடுத்து போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
சம்பவம் குறித்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்து கொன்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணையில் இறங்கினர். முதற்கட்ட விசாரணையில் மாணவியை கடத்திச் சென்ற கார், கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவர் தான் மாணவியை காரில் கடத்தி சென்று கற்பழித்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவர் மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ரஜ்னேஷ் குட்டன் மட்டுமல்லாமல் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். ரஜ்னேஷ் குட்டன் பிடிபட்டால் மாணவி கொலையில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற விவரம் தெரியவரும்.
ரஜ்னேஷ் குட்டனுக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரது நண்பர்கள் குறித்த தகவல்களை சேகரித்து அவர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ரஜ்னேஷ் குட்டன் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் வனத்துறையினருடன் இணைந்து போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற 9-ம் வகுப்பு மாணவியை கும்பல் ஒன்று காரில் கடத்தி கற்பழித்து கொன்ற சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாலையை சீரமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
- ரூ.36 லட்சம் மதிப்பில் சாலை சரி செய்யும் பணி நடந்தது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி 10-வது வார்டு காந்தல் சுல்தான் பேட்டை பகுதியில் கனகராக வாகனங்களால் சாலை பழுதடைந்தது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால், ரூ.36 லட்சம் மதிப்பில் சாலை சரி செய்யும் பணி கவுன்சிலர் அபுதாஹிர் முன்னிலையில் தொடங்கியது. இந்த பணிக்கு நிதி ஒதுக்கி தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர மன்ற தலைவர், நகராட்சி கமிஷனர், நகராட்சி பொறியாளர், நகர மன்ற உறுப்பினர் அபுதாஹிர் ஒப்பந்ததாரர் தாஸ் எட்டாவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.32.20 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
- மனுநீதி நாள் முகாமில், தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபா ன்மையினர் நலத்துறையின் சார்பில், இதுவரை 529 பயனாளிகளுக்கு கிராமப்புற பெண் கல்வி ஊக்க த்தொ கையாக ரூ.3.26 லட்சமும், 540 பயனாளி களுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ.32.20 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர 431 பயனாளி களுக்கு முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலும், 129 பயனாளிகளுக்கு கிறுஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ரூ.22 லட்சம் மதிப்பிலும், 4,898 பயனாளி களுக்கு ரூ.152.28 லட்சம் மதிப்பில், கல்வி உதவி த்தொ கை வழங்கப்பட்டுள்ளது.
2021-2022-ம் கல்வியாண்டில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் 1,294 மாணவி யர்களுக்கு சார்ந்த 1,082 மாணவர்களுக்கு மற்றும் என மொத்தம் ரூ.121 லட்சம் மதிப்பில் 2,376 மிதிவண்டி களும், மிக பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் இனத்தைச் சார்ந்த ஏழை, எளிய 68 மகளிருக்கு ரூ.3.76 லட்சம் மதிப்பில், தையல் எந்திரம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தையல் எந்திரம் பெற்று பயனடைந்த பயனாளி மேக்லின் சத்யபிரியா கூறியதாவது:-
நான் எனது கணவருடன் குன்னூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நான் குன்னுார் உப்பாசி எம்.பி.ஏ பாலிடெக்னிக்கில் தையல் பயிற்சி பெற்றேன். எனது ஊரில் நடந்த முகாமில் தையல் எந்திரம் வேண்டி விண்ணப்பித்தேன்.
அதனைதொடர்ந்து, எனக்கு பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் சார்பில், அதிகரட்டி பேரூராட்சி காட்டேரி கிராமத்தில், நடந்த மனுநீதி நாள் முகாமில், தையல் எந்திரம் வழங்கப்பட்டது. இதன் மூலம் தையல் தொழில் செய்து வருகிறேன். இதில் வரும் வருமானம் எனக்கும், எனது குடும்பத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னைப் போன்றவர்கள் சுய தொழில் செய்து வாழ்க்கையில், முன்னேற உதவிய முதல்-அமைச்ச ருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
தையல் இயந்திரம் பெற்ற ஹரிப்ரியா கூறுகையில், நான் கோத்தகிரியில், உள்ள காஸ்ட்லி எஸ்டேட்டில் வசிக்கிறேன். எனது கணவர் சிவா லாரி டிரைவராக உள்ளார். எங்கள் குடும்பம் எளிமையான குடும்பம். முதல்-அமைச்சரின் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் செயல்படுத்தப்படுவதை உறவினர்கள் மூலம் தெரிந்து கொண்ட நான், அதற்காக விண்ணப்பம் செய்திருந்தேன். இதனை பரிசீலனை செய்த அதிகாரிகள், எனக்கு விலையில்லா தையல் எந்திரத்தினை வழங்கினர். இதன் மூலம் நான் துணியாலான பைகளை தைத்து, வாழ்வாதாரத்தில் முன்னேறி வருகிறேன். எங்களின் இந்த முன்னேற்றத்திற்கு உதவிய முதல்-அமைச்சருக்கு நன்றி என்றார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழக அரசு, பிற்படு த்தப்பட்ட, மிகப்பிற்படு த்தப்பட்ட/ சீரமரபினர் மற்றும் சிறுபா ன்மையின சமூகத்தினர் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, வாழ்வாதராம் பொருளா தாரம் முன்னேற்றம் அடைந்த நீலகிரி மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
குன்னூர்,
குன்னூரில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து குன்னூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் வி.பி.தெருவில் நகர காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஆனந்த் குமார் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், ராகுல் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் போராட்டம்நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
- 19 வகை பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் விற்க அரசு தடை விதித்தது.
- குடிநீர் ஏ.டி.எம்.களை முறையாக பராமரிக்க பராமரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஊட்டி,
நீலகிரி சுற்றுசூழலை பாதுகாக்க 19 வகை பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர், குளிர்பானம் விற்க அரசு தடை விதித்தது.
இதைதொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டி தொட்டபெட்டா, படகு இல்லம், பைக்காரா, தாவரவியல், ரோஜா, சிம்ஸ், காட்டேரி பூங்கா உட்பட 70 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டன.
இந்த வாட்டர் ஏ.டிஎம்களில் பல இடங்களில் குடிநீர் வருவதில்லை. சில ஏடிஎம்களில் எந்த காயின் போட்டாலும் காற்று தான் வருகிறது.
குறிப்பாக சுற்றுலா தலங்கள் முன்பு உள்ள குடிநீர் ஏ.டி.எம்.கள் பல மாதங்களாக செயல்படாமல் கிடக்கிறது.நாணயம் செலுத்தும் பகுதி இயங்காமல் இருக்கிறது. பகலில் வெயில் அதிகமாக உள்ளது.
இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் எந்திரங்களில் குடிநீர் கிடைக்காததால் அவதி அடைந்து உள்ளனர்.
பைன் பாரஸ்ட் பகுதியில் ஒரு பெண்மணி மிளகாய் தொட்டு மாங்காய் சாப்பிட்டு காரம் தலைக்கு ஏறியதால் தண்ணீருக்கு அலைந்ந காட்சி பரிதாபமாக இருந்தது
பிளாஸ்டிக் பயன்பா ட்டை குறைக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்று என்பது முறையானதாக அனைவருக்கும் எப்போதும் உபயோக படுத்துவதாக இருக்க வேண்டும் அவைகளை முறையாக பராமரிக்க பராமரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் பெரும் அதிருப்தி தெரிவித்தனர்
- ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் பார்வையிட்டு, செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
- சுற்றுலா பயணிகள் நீலகிரியில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஊட்டி:
தற்போது தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.
மேலும் பூங்காவில் உள்ள பெரிய புல்தரையில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தனர். அங்குள்ள மலர் செடிகள் முன்பு புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இதேபோல ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் பார்வையிட்டு, செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இந்த சுற்றுலா தலம் மட்டுமின்றி தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், அவலாஞ்சி, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, கொடநாடு காட்சிமுனை, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
இதேபோல், ஊட்டியில் உள்ள பைன் மரக்காடுகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் உயர்ந்து நிற்கும் பைன்கள், மூச்சடைக்கக் கூடிய அழகு காட்சிகள் மற்றும் இனிமையான சூழ்நிலை ஆகியவற்றை கண்டு ரசித்தனர். மேலும் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் அவர்களை நம்பி வியாபாரம் நடத்தி வரும் சாலையோர வியாபாரிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கேரட், பீட்ரூட், மக்காச்சோளம், கோஸ் மற்றும் அவிச்ச வேர்கடலை, மாங்காய் என சாலை ஓரங்களில் வியாபாரம் நடத்தி வருபர்களுக்கு வியாபாரம் களைகட்டி உள்ளது.
சுற்றுலா பயணிகள் நீலகிரியில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி குன்னூர் சாலைகளில் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
- சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
- விதிகளை மீறும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறை அபராதம் விதிக்க வேண்டும்.
ஊட்டி
ஊட்டி கூடலூர் சாலையில் தலைகுந்தா பகுதியில் அமைந்துள்ள பைன் மரக் காடு, பலநூறு ஆண்டுகள் பழமையான பைன் மரங்களின் தோப்பாகும்
இந்த இடம் திரைப்படங்கள் மூலம் பிரபலமான சுற்றுலா தலம் ஆகும். இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
மேலும் காமராஜர் அணை உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் விதியை மீறிய செயலில் ஈடுபட்டு வருகின்றனர் ஆபத்தை உணராமல் புகைப்படங்களை எடுப்பது அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள பாறையின் மேல் அமர்ந்து புகைப்படம் எடுப்பது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
உயிர் சேதத்தை தவிர்க்கும் வகையில் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க வனதுறை தடை விதிக்கும் அறிவிப்பு பலகைகளை வைப்பதோடு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
- முதுமலை புலிகள் காப்பக கோப்பையில், 1,200 மீ., துாரம் இலக்கை நோக்கி, 8 குதிரைகள் ஓடின.
- கோடை மழையால், 5 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு குதிரை பந்தயம் ஏப்., 1 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
நேற்றைய குதிரை பந்தயத்தில், முதுமலை புலிகள் காப்பக கோப்பையில், 1,200 மீ., துாரம் இலக்கை நோக்கி, 8 குதிரைகள் ஓடின. 'கிங் சன்' என்ற குதிரை, 1.22 நிமிடத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர், ஜாக்கிக்கு முதுமலை புலிகள் காப்பக கோப்பையை, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா பங்கேற்று வழங்கினார். ஊட்டியில் திடீரென பெய்த கோடை மழையால், 5 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
- மாநில அளவிலான மூத்தோர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடந்தது.
- அந்த அணிகளுக்கு இடையேயான போட்டி நிறுத்தப்பட்டது.
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், மாநில அளவிலான மூத்தோர்களுக்கான கூடைப்பந்து போட்டி ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 38-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு உள்ளன. இந்தநிலையில் நேற்று கோவை-மதுரை அணிகள் மோதியது. மதுரை அணி வீரர் நேரு (வயது 60) விளையாடி கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதனால் வீரர்கள் சோகம் அடைந்தனர். மேலும் அந்த அணிகளுக்கு இடையேயான போட்டி நிறுத்தப்பட்டது.
- கோடை விடுமுறை மற்றும் நீலகிரியில் நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
- குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அரிய வகைத் தாவரங்கள் உள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் குன்னூர் சிம்ஸ் பூங்கா முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் கோடை விழா நாட்களில் இங்கு பழக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
சீசன் நாட்களை தவிர, சாதாரண நாட்களில் நாளொன்றுக்கு 500 முதல் 3,500 சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கான அரிய வகை மரங்கள், மலர்ச்செடிகள் சிம்ஸ் பூங்காவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில், பல வண்ணங்களிலான ரோஜா மலர்களும் அடங்கும்.
இந்நிலையில், கோடை சீசனை முன்னிட்டு நடைபெறும் பழ கண்காட்சியை ஒட்டி சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா நடவு செய்யப்பட்டது. தற்போது பச்சை ரோஜாக்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன. இவற்றை காணும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அரிய வகைத் தாவரங்கள் உள்ளன. குறிப்பாக, செலோசியா, ஜிப்சோபிலா, அன்ட்ரோனியா, பிகோனியா, பிளாக்ஸ், பேன்சி, பெட்டோனியா, ரோஜா உள்ளிட்ட மலர் நாற்றுக்கள் இங்குள்ள நர்சரியில் உருவாக்கப்பட்டுஉள்ளன.
இவற்றைக் கண்டுகளிப்பதற்காக ஆண்டுதோறும், இங்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதிலும் சிறப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையே கோடை விடுமுறை மற்றும் நீலகிரியில் நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறை தினம் ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு துறை உள்ளிட்ட இடங்களில் அதிக சுற்றுலா பயணிகள் கூட்டத்தை காண முடிந்தது. இதன் காரணமாக ஊட்டியில் இன்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வரிசையாக சென்றன.
- அந்த பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்தன.
- ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் பகுதி உள்ளது.
இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியத்திற்கு குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த இடி, மின்னல் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.
தொடர்ந்து, இடி, மின்னலின் சத்தம் அதிகமாகவே இருந்தது. அப்போது, தனியாருக்கு சொந்தமான அந்த எஸ்டேட்டில் பயங்கர வெடி சத்தத்துடன் மின்னல் தாக்கியது.
சிறிது நேரத்தில் அந்த பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்தன.
தீ வேகமாக அந்த பகுதி முழுவதும் பரவி பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியை புகைமூட்டமாக காணப்பட்டது.
இதை பார்த்து அச்சம் அடைந்த பொதுமக்கள், தோட்டத்தில் இந்து மோட்டார் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
- 78-வது ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை கேரள சேவா சங்கத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.
குன்னூர்,
குன்னூரில் தந்தி மாரியம்மன் கோயில் 78-வது ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது.
குன்னூா் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை தோ்த்திருவிழாவை ஒட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது. குன்னூா் வி.பி. தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பஞ்ச வாத்தியம், சிங்காரி மேளம் முழங்க, பூ காவடி, பால் காவடி, தேவி ரக்ஷா மற்றும் முத்துக் காளைகளுடன் அபிஷேக பொருள்கள் ஊா்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு மாரியம்மனுக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமானோா் அம்மனை வழிபட்டனா். முத்துபல்லக்கு ஊர்வலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கேரள சேவா சங்கத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.






