என் மலர்tooltip icon

    நீலகிரி

    • அழுகிய நிலையில் இருந்த சுமார் 12 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
    • 5 பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் செயற்கையாக கார்பைடு கற்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றனவா என்பதை கண்டறிந்து, இயற்கையான முறையில் பழுத்த பழங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன என்பதை அதிகாரிகள் உறுதி செய்யுமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், உணவுப் பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஊட்டி பழ மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் அழுகிய நிலையில் இருந்த சுமார் 12 கிலோ மாம்பழங்கள், 5 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் 5 பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டது.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறும்போது, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் இதர பழங்களை உண்ணும்போது வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளால் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    எனவே செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யும் பழ வியாபாரிகள் மீது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு, திட்டமானது 2 கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
    • முதற்கட்டமாக 01.06.2023 அன்று குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 2 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சி கள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் (ஆதிதிராவிடர் பள்ளிகள் உட்பட) 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு, திட்டமானது 2 கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.

    இந்த திட்டமானது நமது மாவட்டத்தில் முதற்கட்டமாக 01.06.2023 அன்று குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 2 வட்டாரங்களிலும், இரண்டாம் கட்டமாக 15.07.2023 அன்று ஊட்டி வட்டாரத்திலும் செயல்படுத்தப்படும்.

    இந்த திட்டத்திற்கு என ஊராட்சி, பேரூராட்சி அளவில் முதன்மை குழு ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் ஒரு பிரதிநிதி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பின் அலுவலக நிர்வாகிகளில் ஒருவரை கொண்டு அமைக்கப்படும்.

    மேலும், மகளிர் சுய உதவிக் குழு, ஊராட்சி, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களை தேர்வு செய்திடும் போது குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள உறுப்பினராகவும், அதே பகுதியை சேர்ந்தவராகவும், குறைந்த பட்சம் கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு வரை படித்தவராகவும், சமையல் திறன் கொண்டவராகவும் உறுப்பினர் பெயரில் ஆன்ராயிடு மொபைல்போன் வைத்திருப்பவராகவும், அவரது குழந்தைகள் அதே பள்ளியில் படிப்பவராகவும் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்று நர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தினை நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட அனை வரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) பாலகணேஷ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமரன், கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), முகம்மது குதுர துல்லா(கூடலூர்), வருவாய் உதவி இயக்குநர்கள் சாம்சாந்த குமார்(ஊராட்சிகள்), இப்ராகிம் ஷா(பேரூ ராட்சிகள்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோல்டிசாராள்(சத்துணவு), மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், உதவி திட்ட அலுவலர்கள் ஜெயராணி, சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கூடலூர்,

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நீலகிரி கிழக்கு சரிவு சரகம் தெங்குமரஹடா கல்லாம்பாளையம் வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் காட்டு யானை இறந்து கிடந்தது.

    இதைத்தொடர்ந்து புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் மணி வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த யானைக்கு 50 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மசினகுடி சரகத்துக்கு உட்பட்ட அவரல்லா பிரிவு மாவனல்லா பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை இறந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் பாலாஜி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

    பின்னர் வயது முதிர்வு காரணமாக காட்டு யானை இறந்தது என தெரிய வந்தது. பின்னர் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து பிற வன உயிரினங்களுக்கு இரையாகும் வகையில் யானையின் உடல் அப்பகுதியில் விடப்பட்டது. இதுகுறித்து மசினகுடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை தொடர்ந்து உயிரிழந்து வருவது வன ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    • நல்லதம்பி டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • ரூ.2 லட்சம் நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் திருட்டு போனது.

    ஊட்டி,

    ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 30). இவர் அங்கு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். தனது பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் நல்லதம்பியின் சகோதரி விபத்தில் சிக்கியதால், அவரை பார்ப்பதற்காக பெற்றோருடன் உடுமலைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நல்லதம்பி உள்ளே சென்று பார்த்தார். அப்போது ரூ.2 லட்சம் நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் திருட்டு போனது. இதுகுறித்து அவர் புதுமந்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஊட்டி தலைகுந்தாவை சேர்ந்த டிரைவர் சாகுல் ஹமீது என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்லட்டி கிராம சாலையினை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தினையும் திறந்து வைத்தார்.

    கோவை,

    நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுஹட்டி ஊராட்சி பகுதியில், ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்லட்டி கிராம சாலையினையும், கெங்கரை ஊராட்சி பிக்கட்டி கிராமத்தில், ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தினையும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    குறிப்பாக, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், நடுஹட்டி ஊராட்சிப்பகுதியில் 2021-2022 -ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பாண்டியன் நகர் மற்றும் குண்டுபெட் காலனி பகுதியில் ரூ.26.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடமும், 2022-2023-ம் ஆண்டில் ரூ.12 லட்சம் மதிப்பில் கல்லட்டி சாலை பணிகள், ரூ.5 லட்சம் மதிப்பில் பையங்கியில் சமையற் கூடத்தினையும், கட்டபெட்டு பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் கலர்செட், பெப்பேனில் ரூ.5 லட்சம் மதிப்பில் சமையற்கூடத்தினையும் மற்றும் இதர திட்டங்களாக 39 பணிகள் ரூ.1.13 கோடி மதிப்பிலும், 2022-2023 ஆம் ஆண்டிற்கு 16 பணிகள் ரூ.59 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் இரண்டு ஆண்டுகளில் இவ்வூராட்சி பகுதியில் ரூ.1.72 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.

    மேலும், கோத்தகிரி பேரூராட்சி பகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த ஆண்டு ரூ.46 லட்சமும், நடப்பு ஆண்டில் ரூ50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், நடுஹட்டி ஊராட்சியில் 14 -வது மத்திய மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி அருகில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு சுவர், கோத்தகிரி பேரூராட்சி பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ், குரூஸ்லி முதல் குண்டுபெட் பிரிவு வரை ரூ.96.20 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்படவுள்ள சாலை பணியினையும், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராஹிம்சா கோத்தகிரி வட்டாட்சியர் காயத்ரி, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தன், அனிதா, கோத்தகிரி பேரூராட்சி (செயல் அலுவலர்) மணிகண்டன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, ஊராட்சித்தலைவர்கள் கிருஷ்ணன் (நடுஹட்டி), முருகன்(கெங்கரை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தலைமறைவாக இருந்த ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசீலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
    • மாணவி கொலையில் ரஜ்னேஷ் குட்டனை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பைக்காரா அருகே உள்ள தோடர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் ஊட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது மாணவிக்கு இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார்.

    ஆனால் மாலை வெகுநேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் அங்கர்போர்டு அருகே உள்ள புதருக்குள் மாயமான மாணவி பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்தார்.

    பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாணவி உடல் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரில் மாணவி கடத்தப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    மாணவியை கற்பழித்து கொன்றது யார்? இதில் ஒரு நபர் ஈடுபட்டரா? அல்லது கும்பலாக ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், மாணவியை கடத்திச் சென்ற கார், கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் தான் மாணவியை காரில் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார்.

    தலைமறைவாக இருந்த ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசீலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வாலிபரை தேடி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியில் பதுங்கி இருந்த ரஜ்னேஷ் குட்டனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மாணவி கொலையில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமறைவாக இருந்த ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசீலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
    • நஞ்சநாடு கிராம நிர்வாக அதிகாரி பிரியா முன்னிலையில் ரஜ்னேஷ் குட்டன் சரண் அடைந்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பைக்காரா அருகே உள்ள தோடர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் ஊட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது மாணவிக்கு இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார்.

    ஆனால் மாலை வெகுநேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் அங்கர்போர்டு அருகே உள்ள புதருக்குள் மாயமான மாணவி பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்தார்.

    பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாணவி உடல் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரில் மாணவி கடத்தப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    மாணவியை கற்பழித்து கொன்றது யார்? இதில் ஒரு நபர் ஈடுபட்டரா? அல்லது கும்பலாக ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், மாணவியை கடத்திச் சென்ற கார், கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் தான் மாணவியை காரில் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார்.

    தலைமறைவாக இருந்த ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசீலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வாலிபரை தேடி வந்தனர். இந்தநிலையில் நஞ்சநாடு கிராம நிர்வாக அதிகாரி பிரியா முன்னிலையில் ரஜ்னேஷ் குட்டன் சரண் அடைந்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மாணவி கொலையில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
    • கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுக்கடங்காத சுற்றுலாபயணிகள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஊட்டி:

    கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. விடுமுறை தினங்களில் ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுக்கடங்காத சுற்றுலாபயணிகள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் வரிசையில் காத்து நின்று சென்றன. இதனால் சுற்றுலாபயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது. இதுகுறிதது நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    ஊட்டியில் இருந்து கோவை- மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்லவும், சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டி நோக்கி வரும் வாகனங்கள் பர்லியாறு- குன்னூர் சாலை வழியாக ஊட்டிக்கு வரும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் அரசு பஸ்களை தவிர கனரக வாகனங்களான தண்ணீர் லாரி, கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நகருக்குள் இயங்க அனுமதியில்லை. ஆட்டோக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை தவிர வேறு இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றினால் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினமும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வருகின்றனர்.
    • காரில் இருந்த வாலிபர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    கூடலூர்,

    கோடை சீசன் தொடங்கி விட்டதால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பல மணி நேரம் தாமதமாக தங்களது ஊர்களுக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் வயநாடுக்கு சுற்றுலா பயணிகள் கார் சென்று கொண்டிருந்தது. பாடந்தொரை பஜார் அருகே வந்தபோது சாலையோர தடுப்பில் கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த வாலிபர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தேவர்சோலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது.
    • குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சிறுத்தை நாயை வேட்டையாடியதால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இந்தநிலையில் ஊட்டி மிஷ்னரி ஹில் புதிய ரேஷன் கடை பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை சுற்றித்திரிந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. ஊட்டியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரது வீட்டில் சங்கிலியால் கட்டி போடப்பட்டு இருந்த நாயை வேட்டையாடி விட்டு சென்றது.

    இந்தநிலையில் நேற்று காலையில் அப்பகுதி மக்கள் பார்த்தபோது, சங்கிலியால் கட்டி போட்ட நாய் வேட்டையாடப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அருகில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருந்தது. இதை அவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சிறுத்தை நாயை வேட்டையாடி உள்ளதால், அப் பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்து, வீட்டு முன்பு வராண்டா பகுதியில் படுத்து கிடந்த வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்வி சென்றது குறிப்பிடத்தக்கது.

    • பஸ் பழுதாகி நின்றதால், பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
    • கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

     கூடலூர்,

    கேரளா-கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் கேரள மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக கர்நாடகாவுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில வாகனங்கள் கூடலூர்-முதுமலை புலிகள் காப்பகம் வழியாக கர்நாடகாவுக்கு சென்று திரும்புகிறது. இந்தநிலையில் நேற்று திருச்சூரில் இருந்து 65 பயணிகளுடன் மைசூருவுக்கு கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழக-கர்நாடகா எல்லையான கக்கநல்லா செல்லும் சாலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் பஸ் திடீரென பழுதடைந்து நடுக்காட்டில் நின்றது.

    இதனால் பழுதை சரிசெய்யும் பணியில் டிரைவர், கண்டக்டர் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதனால் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் மற்றும் பெண்கள் கைக்குழந்தைகளுடன் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் பயணிகளை வேறு பஸ்களில் அனுப்புவதற்கான நடவடிக்கையில் டிரைவர், கண்டக்டர் ஈடுபட்டனர். மேலும் நடுவழியில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

    அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வர வாய்ப்பு இருந்ததால், கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்கள், பயணிகள் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவதால் பஸ் தாமதமானது. தற்போது முதுமலை வனப்பகுதிக்குள் பழுதாகி நின்று விட்டதால் குழந்தைகளுடன் பரிதவிக்க வேண்டிய நிலை உள்ளது என்றனர். இந்தநிலையில் கர்நாடகா மற்றும் கேரள பஸ்களில் பயணிகள் மைசூருவுக்கு மிக தாமதமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • சிறுமியை பெற்றோர் சிறுமியின் பெரியம்மா வீட்டில் விட்டு வெளியூருக்கு சென்றனர்.
    • போலீசார் சாமிநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி.

    சிறுமியை சம்பவத்தன்று அவரது பெற்றோர் சிறுமியின் பெரியம்மா வீட்டில் விட்டு வெளியூருக்கு சென்றனர். இதையடுத்து சிறுமி, தனது பெரியம்மாவுடன், அவரது வீட்டில் இருந்தார்.

    சிறுமியின் பெரியம்மா வீட்டின் அருகே சாமிநாதன்(வயது68) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி தனது பெரியம்மா வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சாமிநாதன், சிறுமியிடம் நைசாக பேசி, தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சாமிநாதன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியான சிறுமி, அவரிடம் இருந்து தப்பி பெரியம்மா வீட்டிற்கு வந்து, நடந்த சம்பவங்களை கூறி அழுதார்.

    இதை கேட்டு அதிர்ச்சியான சிறுமியின் பெரியம்மா சம்பவம் குறித்து கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சாமிநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×