என் மலர்tooltip icon

    நீலகிரி

    • வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
    • இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

    ஊட்டி,

    சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதாலும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவ்வாறு வருகை தரும் அவர்கள் ஊட்டி, குன்னூரில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்து அறை எடுத்து தங்குகின்றனர்.

    பின்னர் பூங்காக்கள், காட்சி முனைகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். கூட்டம் அலைமோதுவதால் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அறை கிடைக்காதவர்கள் காட்டேஜ்களில் தங்கி வருகிறார்கள்.

    இந்தநிலையில் குன்னூர் நகராட்சியில் வீடு கட்டுவதற்கு என அனுமதி பெற்று விட்டு விதிமீறி தங்கும் விடுதியாக மாற்றி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி, குன்னூர் தாசில்தார் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் தீபக் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் குன்னூர் நகரம், கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் அனுமதியின்றி 2 தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் வருவாய்த்துறையினர் 2 விடுதிகளை பூட்டி சீல் வைத்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வீட்டிற்கு என அனுமதி பெற்று விட்டு அனுமதியின்றி தங்கும் விடுதிகளாக மாற்றக்கூடாது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருமானம் குறைகிறது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • மே 21-ந் தேதி தேயிலை விற்பனையாளர் மற்றும் வாங்குபவர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • சிறப்பு தேயிலை வகைகளை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலக கூட்டரங்கில் கோடை விழாவை முன்னிட்டு தேயிலை சுற்றுலா திருவிழா 2023 தொடர்பான ஆலோசனை கூட்டம், தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் தலைமையில், மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்தில், தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக உள்ள காரணத்தினால் ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

    இவ்வாண்டு நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தேநீர் குறித்து பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச தேயிலை தினத்தின் ஒரு பகுதியாக அடுத்த மாதம் 21-ந் தேதி தேயிலை விற்பனையாளர் மற்றும் வாங்குபவர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், தேயிலை கலப்படத்தை தடுக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேநீர் காய்ச்சும் போட்டி நடத்தவும், உதகை தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் பிற இடங்களில் நீலகிரி மாவட்ட சிறுதேயிலை விவசாயிகள் தயாரிக்கும் சிறப்பு தேயிலை வகைகளை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

    மேலும், சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்கும் வகையில் அடுத்த மாதம் 22-ந் தேதி குன்னூர் சிம்ஸ்பூங்காவில் தேநீர் கண்காட்சி நடத்தவும், சுற்றுலா பயணிகளிடையே தேயிலை உற்பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தேயிலை தொழிற்சாலைகளை அவர்கள் நேரில் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே, தேயிலை சுற்றுலா திருவிழா 2023 மிகச் சிறப்பான முறையில் நடத்திட, மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் டாக்டர்.மோனிக்காரானா, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) துரைசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷிபிலாமேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தேயிலை வாரிய உதவி இயக்குநர் செல்வம், குன்னூர் தேயிலை வாரியத்தின் வளர்ச்சி டாக்டர் உமாமகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிபித்தா, அலுவலர் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருகின்றன.
    • குடியிருப்பு பகுதியையொட்டிய பகுதிகளில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    அரவேணு,

    காடுகளும் மலைகளும் சூழ்ந்து வனவிலங்கு கூடாரமாக விளங்குவது தான் நீலகிரி மாவட்டம். மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருகின்றன.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக கரடி, காட்டு யானைகள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியையொட்டிய பகுதிகளில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    தற்போது விடுமுறை காலம் என்பதால் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. அவ்வாறு வரும் வாகனங்களை சில நேரங்களில் காட்டு யானைகள் வழிமறித்து வருகின்றன. அப்போது வாகனங்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

    இந்த நிலையில் கோத்தகிரி பகுதிகளில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காட்டு மாடுகள் சாலையோரம் மேயந்து கொண்டிருக்கின்றன.

    சில நேரங்களில் சாலைகளிலும் ஒய்வெடுக்கின்றன.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள்.

    எனவே வனத்துறையினர் காட்டு மாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    • மாா்லிமந்து சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை குறுகலாகிவிட்டது.
    • ஊட்டியில் நீா்த்தேக்கங்கள் தூா்வாரப்படவில்லை.

    ஊட்டி,

    ஊட்டி நகரசபை சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சித் தலைவா் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:-

    தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால், குடிநீா் வினியோகம், பாதாளச் சாக்கடை பராமரிப்புப் பணிகளுக்கு கூடுதலாக தற்காலிகப் பணியாளா்களை பணியமா்த்த வேண்டும். பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை நிா்ணயம் செய்ய தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதா எனத் தெரியவில்லை. மாா்லிமந்து சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை குறுகலாகிவிட்டது. இதனை சீரமைக்க வேண்டும்.

    காந்தலில் நகராட்சி குடியிருப்புகளில் வேறு நபா்கள் இருப்பதைக் கண்டறிந்து காலி செய்ய நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அந்த குடியிருப்புகளை தூய்மைப் பணியாளா்களுக்கு முறையாக ஒதுக்க வேண்டும்.

    நகரில் வாகன நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது. வாகன நிறுத்துமிடங்களை முறைப்படுத்த வேண்டும். ஓல்டு ஊட்டி பகுதியில் தண்ணீா் இருப்பு உள்ளது. ஆனால், தொட்டியிலிருந்து வரும் இணைப்புக் குழாயின் அளவு சிறியதாக உள்ளதால், முறையாக தண்ணீா் விநியோகிக்க முடிவதில்லை. எனவே, அந்த குழாய்களை மாற்றியமைக்க வேண்டும்.

    ஊட்டியில் நீா்த்தேக்கங்கள் தூா்வாரப்படவில்லை. கழிவுநீா்ப் பிரச்சினையை சரி செய்ய ஊழியா்கள், உபகரணங்கள் இல்லை. கோடப்பமந்து கால்வாய் பணியில் பல கோடி ரூபாய் விரயமாகி வருகிறது என உறுப்பினா்கள் பேசினா்.

    முன்னதாக கூட்டம் தொடங்கியதும் அதிகாரிகள் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை எனக்கூறி பெண் கவுன்சிலா்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட னா்.

    விவாதத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் ஜெ.ரவிகுமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜாா்ஜ், அபுதாஹுா், தம்பி இஸ்மாயில், அன்புச்செல்வன், குமாா், முஸ்தபா ஆகியோா் பேசினா்.

    ஊட்டி,

    ஊட்டி நகரசபை சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சித் தலைவா் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியதாவது:-

    தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால், குடிநீா் வினியோகம், பாதாளச் சாக்கடை பராமரிப்புப் பணிகளுக்கு கூடுதலாக தற்காலிகப் பணியாளா்களை பணியமா்த்த வேண்டும். பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை நிா்ணயம் செய்ய தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதா எனத் தெரியவில்லை. மாா்லிமந்து சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, சாலை குறுகலாகிவிட்டது. இதனை சீரமைக்க வேண்டும்.

    காந்தலில் நகராட்சி குடியிருப்புகளில் வேறு நபா்கள் இருப்பதைக் கண்டறிந்து காலி செய்ய நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அந்த குடியிருப்புகளை தூய்மைப் பணியாளா்களுக்கு முறையாக ஒதுக்க வேண்டும்.

    நகரில் வாகன நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது. வாகன நிறுத்துமிடங்களை முறைப்படுத்த வேண்டும். ஓல்டு ஊட்டி பகுதியில் தண்ணீா் இருப்பு உள்ளது. ஆனால், தொட்டியிலிருந்து வரும் இணைப்புக் குழாயின் அளவு சிறியதாக உள்ளதால், முறையாக தண்ணீா் விநியோகிக்க முடிவதில்லை. எனவே, அந்த குழாய்களை மாற்றியமைக்க வேண்டும்.

    ஊட்டியில் நீா்த்தேக்கங்கள் தூா்வாரப்படவில்லை. கழிவுநீா்ப் பிரச்சினையை சரி செய்ய ஊழியா்கள், உபகரணங்கள் இல்லை. கோடப்பமந்து கால்வாய் பணியில் பல கோடி ரூபாய் விரயமாகி வருகிறது என உறுப்பினா்கள் பேசினா்.

    முன்னதாக கூட்டம் தொடங்கியதும் அதிகாரிகள் நாங்கள் சொல்வதை கேட்பதில்லை எனக்கூறி பெண் கவுன்சிலா்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட னா்.

    விவாதத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் ஜெ.ரவிகுமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜாா்ஜ், அபுதாஹுா், தம்பி இஸ்மாயில், அன்புச்செல்வன், குமாா், முஸ்தபா ஆகியோா் பேசினா்.

    • விவசாயப் பெருங்குடி மக்களுக்கு விவசாய பயிர் செய்வதற்கு ஒரு வருட காலத்திற்குள் வட்டியில்லாமல் கடன்வசதி
    • கடந்த நிதியாண்டை விட அதிக கடனுதவி நடப்பு நிதியாண்டில் தரப்படுவதாக கூறினார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 3 பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் பிரதான நோக்கம் மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருங்குடி மக்களுக்கு விவசாய பயிர் செய்வதற்கு ஒரு வருட காலத்திற்குள் வட்டியில்லாமல் திருப்பி செலுத்தும் வகையில் விவசாய பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கீழ்க்கண்ட கடன்கள் விவசாயிகள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    விவசாய பயிர்க்கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23-ம் நிதியாண்டில் கூடுதலாக 8,673 உறுப்பினர்களுக்கு ரூ.51.66 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    விவசாய கூட்டு பொறுப்பு குழு கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 410 குழுக்களுக்கு ரூ.12.98 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கால்நடை பராமரிப்புக் கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 946 உறுப்பினர்களுக்கு ரூ.4.43 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மகளிர் சுய உதவிக்குழு கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 1,373 குழுக்களுக்கு ரூ.101 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நகைக்கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 26,136 உறுப்பினர்களுக்கு ரூ.135.14 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் கடன் முந்தைய நிதியாண்டை காட்டிலும் 2022-23 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 60 உறுப்பினர்களுக்கு ரூ.0.24 கோடி கடன் வழங்கப்ப ட்டுள்ளது.ஆலட்டி, ஜெடையலிங்கா, கடநாடு, கெந்தொரை, வீரபத்திரா மற்றும் தெங்குமரஹாடா ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முதன் முறையாக 2022-23 நிதியாண்டில் ரூ.2.11 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டு ள்ளது.கோத்தகிரி மற்றும் பந்தலூர் பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் முதன் முறையாக 2022-23 நிதியாண்டில் ரூ.0.43 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    13 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முதன் முறையாக 2022-23 நிதியாண்டில் ரூ.4.04 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மற்றொரு இடத்தில் மோட்டார் சைக்கிளையும் தாக்க முயன்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
    • டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கினார்

    அரவேணு,

    கோத்தகிரி மலைப்பாதை யில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் மலைப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அவ்வப்போது மலைப்பா ைதயில் வந்து நின்று கொண்டு, அந்த வழியாக வரும் வாகனங்களையும் மறித்து வருவது வாடிக்கை யாகி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை கோத்தகிரி சாலையில் தட்டப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை மலைப்பாதைக்கு வந்தது.அப்போது அந்த வழியாக ஜீப் ஒன்று வந்தது. யானை வருவதை பார்த்த ஜீப் டிரைவர் வாகனத்தை சாலையோரமாக நிறுத்த முயன்றார்.அப்போது ஒற்றை யானை ஜீப்பை நோக்கி வேகமாக வந்தது. வந்த வேகத்தில் யானை ஜீப்பை தாக்கியது. இதனால் வாகனத்தில் இருந்தவர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

    பின்னர் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கினார். சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து சென்று விட்டது.

    இதன் பின்னரே ஜீப்பில் இருந்தவர்களும், பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர்.இதையடுத்து ஜீப்பை டிரைவர் அங்கிருந்து வாகனத்தை எடுத்து சென்றார்.கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள காட்சி முனை பகுதியில் நீண்ட நேரமாக ஒற்றைக் காட்டு யானை மேய்ச்சலில் ஈடுபட்டது.

    இதனால் அந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சாலையை கடக்க முயன்றனர்.அப்போது, யானை ஆக்ரோஷம் அடைந்து அவர்களை நோக்கி வந்தது. இதனால் பயந்து போன மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவர் இறங்கி ஓடி விட்டார்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் சாதுர்யமாக வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பியோடி விட்டார். தற்போது இந்த வீடியோக காட்சிகள் சமூக வலைத ளங்களில் வைரலாகி வருகிறது.

    கோத்தகிரி-மேட்டுப்பா ளையம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் வனத்துறையினர் யானை களை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவது அதிகமாக காணப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

    ஊட்டி,

    முதுமலை புலிகள் காப்ப கத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், வறட்சி ஏற்பட்டதாலும் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவது அதிகமாக காணப்பட்டது. மேலும் வனவிலங்குகள் வேறு பகுதிக்கும் இடம் பெயர்ந்தும் வந்தன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமானது முதல் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது.இதன் காரணமாக தற்போது முதுமலை பகுதிகளில் வனவி லங்குகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் முதுமலை. புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் புலி ஒன்று புல்லில் படுத்து இருந்தது. இதை அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வீடியோ எடுத்தனர்.

    நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து வீடியோவுக்கு போஸ் கொடுத்த புலி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனை சுற்றுலா பயணிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது மழை பெய்துள்ளதால் வனவிலங்குகள் சாலையை யொட்டி வருகின்றனர். எனவே கோடை சீசனை அனுபவிக்க நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், முதுமலை சாலைகளில் தங்களது வாகனங்களை அதிவேகமாக இயக்கக்கூடாது. வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. வனவிலங்குகளை தொந்தரவு செய்ய கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
    • ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும், கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடமும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

    சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார் கொடநாடு வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடம், அங்கு பணிபுரிபவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விபத்தில் இறந்த கனகராஜ் இறப்பதற்கு முன்பு எடப்பாடியில் உள்ள தனது ஆஸ்தான ஜோதிடரை சந்தித்தாக தகவல் வெளியானது.

    இதையடுத்து அவரையும் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும், கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடமும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணன், வழக்கினை ஜூன் மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட ஜித்தின்ஜாய், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

    • பாகன் பாலன் மசினி யானைக்கு உணவு கொடுப்பதற்காக உணவு தயாரித்தார்.
    • வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.

    தெப்பக்காடு, அபயராண்யம் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த யானைகளை அங்கு வசித்து வரக்கூடிய பாகன்கள் பராமரித்து வருகின்றன. காலை, மாலை என இரு வேளைகளிலும் யானைக்கு ராகி, ஊட்டச்சத்து தானியங்கள் நிறைந்த உணவினை உருண்டையாக உருட்டி கொடுத்து வருகின்றனர்.

    இதுமட்டுமின்றி யானைகளை நடைபயிற்சி அழைத்து செல்வது, மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது என பல்வேறு பணிகளில் பாகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற வளர்ப்பு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை பாகன் பாலன் (வயது54). என்பவர் பராமரித்து வந்தார். இவர் கடந்த பல வருடங்களாக இந்த யானையை பராமரித்தார்.

    இவர் தினமும் காலையில் அந்த யானைக்கு, ராகி, ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களை உணவாக கொடுப்பார். பின்னர் அந்த யானையை அங்குள்ள பகுதியில் சிறிது நேரம் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வார். பின்னர் மீண்டும் முகாமுக்கு அழைத்து வருவது வழக்கம்.

    அதன்படி இன்று காலை பாகன் பாலன் மசினி யானைக்கு உணவு கொடுப்பதற்காக உணவு தயாரித்தார். பின்னர் அந்த உணவினை எடுத்து கொண்டு மசினி யானையின் அருகே சென்றார்.

    பின்னர் அந்த யானைக்கு உணவை கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மசினி யானை பாகனை தாக்கி விட்டது. இதில் பாகன் பாலன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதை பார்த்த சக பாகன்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து காயம் அடைந்த பாலனை தூக்கி கொண்டு வனத்துறை வாகனத்தில் கூடலூர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே பாகன் பாலன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

    வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மகா சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
    • நாட்டுப்புற கலைஞர்கள் புலி வேஷ நடனம் ஆடியவாறு சென்றனர்.

    கோத்தகிரி கடைவீதியில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில், திருவீதி உலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் திருவிழாவின் 15-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு டானிங்டன் மகா சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பெண்கள் பால்குடங்களை தலையில் ஏந்தியவாறு கடைவீதி மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் பொய்க்கால் நடனம், புலி வேஷ நடனம் ஆடியவாறும், அம்மன் வேடமணிந்தும் ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், பஸ் நிலையம் வழியாக மாரியம்மன் கோவில் முக்கிய சாலைகள் வழியாக சென்றடைந்தனர்.

    மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. மாலை 3 மணிக்கு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஓதுவார் மூர்த்தி, தேவார இசைமணி ஞானசம்பந்தன் ஓதுவார் கலந்துகொண்டு தேவார திருப்புகழ் பண்ணிசை நிகழ்ச்சியை நடத்தினர். மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தாமரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர் 

    • பலத்த மழையால் சாலையில் மண் திட்டுகள் சரிந்தது.
    • வாகனங்கள் மரம் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்ததால், அணிவகுத்து நின்றது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர், முள்ளி, வெள்ளியங்காடு மார்க்கமான கோவை மூன்றாவது மாற்று பாதை உள்ளது.

    இவ்வழித்தடத்தில் கெத்தை ஏழாவது கொண்டை ஊசி வளைவில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலையில் மண் திட்டுகள் சரிந்தது. மேலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் மஞ்சூரில் இருந்து கோவை சென்ற பேருந்தும் கோவையிலிருந்து மஞ்சூர் நோக்கி வந்த பேருந்துகளும் பள்ளி பேருந்து தனியார் வாகனங்கள் சுற்றுலா வாகனங்கள் என பல வாகனங்கள் மரம் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்ததால், அணிவகுத்து நின்றது.

    நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் மண் திட்டுகளையும் மரத்தையும் அப்புறப்படுத்தினார்கள் பின்பு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

    • கர்நாடகா மாநில முன்னாள் காவல்துறை டி.ஐ.ஜி சங்கர் பிகாரியும் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
    • கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் பிரதிநிகளாக பங்கேற்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுகல் ஜே.எஸ்.எஸ் பள்ளி அரங்கில் மைசூர் சுத்தூர் மடம் சார்பில் கோடைகால ஆன்மீக கலாச்சார பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மைசூர் சுத்தூர் மடம் தலைவர் ஜகத்கு ரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகா ஸ்வாமிகள் பங்கேற்று சிறப்புரை யாற்றினார்.

    இதில் கர்நாடகா மாநில முன்னாள் காவல்துறை டி.ஐ.ஜி சங்கர் பிகாரியும் பங்கேற்று சிறப்புரையா ற்றினார்.இந்த கோடைகால ஆன்மீக பயிற்சி முகாம் 6 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்மீக சிறப்பு பயிற்சி பெற்ற பேச்சாளர்கள் ஆன்மீக சொற்பொழிவு, நல்ல ஆலோசனைகளை வழங்கினர். இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் பிரதிநிகளாக பங்கேற்றனர். பக்தி சொற்பொழிவுகள், பிரார்த்தனை, தியானம், யோகா, பாரம்பரிய விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.ஆன்மீக பயிற்சி நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜே.எஸ்.எஸ்.கல்லூரி முதன்மை அலுவலர் பசவன்னா, மோகன், ஜே.எஸ்.எஸ். பள்ளி பொறுப்பாளர் சிவகுமார், ஜே.எஸ்.எஸ் கல்லூரி பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×