search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி முதுமலை புலிகள் காப்பக புல்வெளியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த புலி
    X

    நீலகிரி முதுமலை புலிகள் காப்பக புல்வெளியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த புலி

    • வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவது அதிகமாக காணப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

    ஊட்டி,

    முதுமலை புலிகள் காப்ப கத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், வறட்சி ஏற்பட்டதாலும் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவது அதிகமாக காணப்பட்டது. மேலும் வனவிலங்குகள் வேறு பகுதிக்கும் இடம் பெயர்ந்தும் வந்தன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமானது முதல் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது.இதன் காரணமாக தற்போது முதுமலை பகுதிகளில் வனவி லங்குகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் முதுமலை. புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் புலி ஒன்று புல்லில் படுத்து இருந்தது. இதை அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வீடியோ எடுத்தனர்.

    நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து வீடியோவுக்கு போஸ் கொடுத்த புலி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனை சுற்றுலா பயணிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது மழை பெய்துள்ளதால் வனவிலங்குகள் சாலையை யொட்டி வருகின்றனர். எனவே கோடை சீசனை அனுபவிக்க நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், முதுமலை சாலைகளில் தங்களது வாகனங்களை அதிவேகமாக இயக்கக்கூடாது. வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. வனவிலங்குகளை தொந்தரவு செய்ய கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×