என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேவர்சோலை அருகே கார் மோதி விபத்து
- தினமும் சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வருகின்றனர்.
- காரில் இருந்த வாலிபர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
கூடலூர்,
கோடை சீசன் தொடங்கி விட்டதால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பல மணி நேரம் தாமதமாக தங்களது ஊர்களுக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் வயநாடுக்கு சுற்றுலா பயணிகள் கார் சென்று கொண்டிருந்தது. பாடந்தொரை பஜார் அருகே வந்தபோது சாலையோர தடுப்பில் கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த வாலிபர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தேவர்சோலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story