search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த தனிகுழு-கலெக்டர் அம்ரித் பேச்சு
    X

    நீலகிரியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த தனிகுழு-கலெக்டர் அம்ரித் பேச்சு

    • முதல்-அமைச்சரின் காலை உணவு, திட்டமானது 2 கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
    • முதற்கட்டமாக 01.06.2023 அன்று குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 2 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சி கள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் (ஆதிதிராவிடர் பள்ளிகள் உட்பட) 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு, திட்டமானது 2 கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.

    இந்த திட்டமானது நமது மாவட்டத்தில் முதற்கட்டமாக 01.06.2023 அன்று குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 2 வட்டாரங்களிலும், இரண்டாம் கட்டமாக 15.07.2023 அன்று ஊட்டி வட்டாரத்திலும் செயல்படுத்தப்படும்.

    இந்த திட்டத்திற்கு என ஊராட்சி, பேரூராட்சி அளவில் முதன்மை குழு ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் ஒரு பிரதிநிதி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பின் அலுவலக நிர்வாகிகளில் ஒருவரை கொண்டு அமைக்கப்படும்.

    மேலும், மகளிர் சுய உதவிக் குழு, ஊராட்சி, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களை தேர்வு செய்திடும் போது குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள உறுப்பினராகவும், அதே பகுதியை சேர்ந்தவராகவும், குறைந்த பட்சம் கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு வரை படித்தவராகவும், சமையல் திறன் கொண்டவராகவும் உறுப்பினர் பெயரில் ஆன்ராயிடு மொபைல்போன் வைத்திருப்பவராகவும், அவரது குழந்தைகள் அதே பள்ளியில் படிப்பவராகவும் இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்று நர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு துறை மூலம் கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தினை நமது மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட அனை வரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) பாலகணேஷ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமரன், கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), முகம்மது குதுர துல்லா(கூடலூர்), வருவாய் உதவி இயக்குநர்கள் சாம்சாந்த குமார்(ஊராட்சிகள்), இப்ராகிம் ஷா(பேரூ ராட்சிகள்), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோல்டிசாராள்(சத்துணவு), மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், உதவி திட்ட அலுவலர்கள் ஜெயராணி, சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×