என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குன்னூா் அருகே மின்னல் தாக்கியதில் தீ பிடித்து எரிந்த மரங்கள்
  X

  குன்னூா் அருகே மின்னல் தாக்கியதில் தீ பிடித்து எரிந்த மரங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அந்த பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்தன.
  • ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

  குன்னூர்,

  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் பகுதி உள்ளது.

  இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

  இந்த நிலையில் நேற்று மதியத்திற்கு குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த இடி, மின்னல் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.

  தொடர்ந்து, இடி, மின்னலின் சத்தம் அதிகமாகவே இருந்தது. அப்போது, தனியாருக்கு சொந்தமான அந்த எஸ்டேட்டில் பயங்கர வெடி சத்தத்துடன் மின்னல் தாக்கியது.

  சிறிது நேரத்தில் அந்த பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்தன.

  தீ வேகமாக அந்த பகுதி முழுவதும் பரவி பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அந்த பகுதியை புகைமூட்டமாக காணப்பட்டது.

  இதை பார்த்து அச்சம் அடைந்த பொதுமக்கள், தோட்டத்தில் இந்து மோட்டார் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

  Next Story
  ×