என் மலர்
நாமக்கல்
- இன்று காலை திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
- தகுதி சான்று புதுப்பிக்காத 3 வாகனங்களை சிறைப்பிடித்து. தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் தகுதி சான்று புதுப்பிக்காத 3 வாகனங்களை சிறைப்பிடித்து. தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.
நாமக்கல் மோகனூர் சாலையில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் இன்று காலை திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டன. அப்போது தகுதிசான்று புதுப்பிக்காமல் சென்ற 2 சரக்கு வாகனங்கள் சிறைபிடித்தார். அந்த வாகனங்களுக்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன. இதே போல நேற்று இரவு தகுதிசான்று புதுப்பிக்கா மல் சென்ற ஒரு வாகன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த தினவிழா பேரணி நடைபெற்றது.
- வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல்:
ஜெனீவா ஒப்பந்த தினத்தையொட்டி நாமக்கல்லில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த தினவிழா பேரணி நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவிச்சந்திரன், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் கணேசன், கண்காணிப்பாளர் விவேக், தொடக்க பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரணியம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கி டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, மணிக்கூண்டு, மோகனூர் சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தன.
இப்பேரணியில் ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஷ்கண்ணன், மாவட்ட அமைப்பாளர் சர்தார பாஷா, இணை அமைப்பாளர் சதீஸ்குமார், மற்றும் மாவட்டத்தில் பள்ளியில் உள்ள ஜுனியர் ரெட்கிராஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- காளியண்ணன் வேலைக்கு சென்று விட்டு மதியம் 3.45 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர்.
- இதையடுத்து தப்பிச் சென்ற இருவரும் அந்த புல்லட்டில் ஏறினர். பின்னர் புல்லட்டை ஸ்டார்ட் செய்தபோது அது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் 3 பேரும் புல்லட்டை தள்ளிக்கொண்டு ஓடினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சாலப்பாளையம் வி.ஐ.பி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணி (59). இவர் ரிக் வண்டி தொழில் செய்து வருகிறார்.
100 நாள் வேலை
இவரது தந்தை காளி யண்ணன், தாயார் நல்லம்மாள் ஆகியோர் பரமத்திவேலூர் அருகே கோதூர் பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் வசித்து வருகின்றனர். காளியண்ணன் 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று மணியின் தாயார் நல்லம்மாள் அருகிலுள்ள தோட்டத்திற்கு வீட்டை பூட்டாமல் வெளி தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டார்.
2 மர்மநபர்கள்
காளியண்ணன் வேலைக்கு சென்று விட்டு மதியம் 3.45 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதைப் பார்த்த காளியண்ணன் சத்தம் போட்டுள்ளார்.
புல்லட்
இதை பார்த் இருவரும் சுற்றுச்சுவரை ஏறி குதித்தனர். அங்கு மற்றொருவர் பதி வெண் இல்லாத புல்லட்டுடன் தயாராக இருந்தார்.
இதையடுத்து தப்பிச் சென்ற இருவரும் அந்த புல்லட்டில் ஏறினர். பின்னர் புல்லட்டை ஸ்டார்ட் செய்தபோது அது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் 3 பேரும் புல்லட்டை தள்ளிக்கொண்டு ஓடினர்.
இவர்களுக்கு பின்னால் காளியண்ணனும் துரத்திச் சென்றார். இதனிடையே மூட்டு அறுவை சிகிச்சை செய்திருந்ததால் காளியண்ணனால் வேகமாக ஓட முடியவில்லை. இத னால் சிறிது தூரம் ஓடிய காளியண்ணன், திருடன் திருடன் என்று சத்தம் போட்டு உள்ளார்.
தப்பியோட்டம்
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த 3 வாலிபர்களும் புல்லட்டை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். மர்மநபர்களை பொதுமக்களும் துரத்தி சென்றனர். ஆனால் அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர்.
5 பவுன் நகை
இதை தொடர்ந்து காளியண்ணனும், அவரது மனைவி நல்லம்மாளும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் டேபிள் டிராயரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம், 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து காளியண்ணன் அவரது மகன் மணிக்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணி இதுகுறித்து நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நல்லூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு புல்லட்டை விட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்திஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்
நிலக்கடலை காய் 41.76 1/2 குவிண்டால் எடை கொண்ட 120-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.67.67-க்கும், சராசரி விலையாக ரூ.78.04-க்கும் என ரூ 3 லட்சத்து 16ஆயிரத்து 855-க்கு விற்பனையானது.
- தமிழ்நாடுஅரசு சார்பில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி ,கல்லூரி சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம்:
தமிழ்நாடுஅரசு சார்பில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி ,கல்லூரி சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் சரவணன் முன்னிலையில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி அதிகாரிகள், அன்பு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பெருமாள், கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம், தலைவர் சீனிவாசன், துணை முதல்வர் மஞ்சுளா மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கரும்பு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பற்றிய பயிற்சி பட்லூர் பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
- வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் வரவேற்புரை வழங்கி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், வேளாண் துறையின் மானியத் திட்டங்கள் பற்றியும் கூறினார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வட்டாரம் பட்லூர் கிராம கரும்பு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பற்றிய பயிற்சி பட்லூர் பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் வரவேற்புரை வழங்கி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், வேளாண் துறையின் மானியத் திட்டங்கள் பற்றியும் கூறினார். பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு மேலாளர் கோபிநாத் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், கட்டைப்பயிர் பராமரிப்பு, நாற்றங்காலில் தரமான நாற்று உற்பத்தி, சொட்டு நீரில் கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், இயந்திர அறுவடை செய்வதற்குரிய தொழில்நுட்பங்கள், கரும்பு எண்ணிக்கை பராமரித்தல் பற்றி கூறினார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணசாமி உழவன் செயலி பற்றி பற்றியும், ஆத்மா திட்டம் பற்றியும் கூறினார். பட்லூர் கோட்ட கரும்பு மேலாளர் அருள் முருகன் கரும்பில் பூச்சி நோய் கட்டுப்பாடு பற்றி கூறினார். இப்ப பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல், கரும்பு அபிவிருத்தி அலுவலர் அர்ஜுனன், மற்றும் பட்லூர் கரும்பு அலுவலர்கள் உட்பட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- தீ விபத்தில் பொன்னுசாமி என்பவரது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம் பாளையம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென இந்த பகுதியில் இருந்த ராஜவேல், பொன்னுசாமி ஆகியோர் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.
இதைப்பார்த்த அனைவரும் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். கொழுந்து விட்டு எரிந்த தீ அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியதால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் வரிசையாக இருந்த 5 குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமானது. தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி நள்ளிரவு 12 மணிக்குத்தான் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பொன்னுசாமி என்பவரது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் 5 குடிசை வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. டி.வி., பிரிட்ஜ், ஆடைகள், கட்டில், மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
தீ விபத்து பற்றி தெரியவந்ததும் முன்னாள்அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் தீ விபத்தில் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்த பொதுமக்களை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அருகில் உள்ள பள்ளியில் இரவு தங்க வைத்தனர்.
இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா, அல்லது சமையல் செய்த போது எதிர்பாராத வகையில் தீ விபத்து நடந்ததா என்றும் வெப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தற்கொலை செய்த மாணவியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ராசிபாளையம் ஊராட்சி மாமரத்துப்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். லாரி டிரைவர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு மோகன்ராஜ் (26) என்ற மகனும், சந்தியா (21) என்ற மகளும் உள்ளனர்.
சந்தியா நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுப்பற்றி தெரியவந்ததம் மோகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) முட்டை விலையை அறிவித்து வருகிறது.
- கறி கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 6-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.35 ஆக இருந்த நிலையில் இன்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ.4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் மேலான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி பல்லடத்தில் இன்று நடந்த கூட்டத்தில் கறி கோழி விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.103 ஆக இருந்த ஒரு கிலோ ரூ.105 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக உள்ளது.
- ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்:
ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளி கவசம்
நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ், துள்ளு மாவு உள்ளிட்டவற்றை படைத்து வழிபட்டனர்.
இதேபோல், செல்லாண்டியம்மன், வண்டிக்காரன்தெரு பகவதியம்மன், அன்புநகர் சுய வேம்பு மாரியம்மன், கொண்டிசெட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இதேபோல் புதுப்பட்டி துலக்க சூடாமணி அம்மன், அழியா இலங்கை அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு நடந்தது.
அபிஷேகம்
பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு கேழ்வரகு கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்திவேலூர் பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதிஅம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் கருமாரியம்மன் கோவிலில் சாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் முத்து காப்பட்டி மாரியம்மன், பச்சுடையாம்பட்டி காளியம்மன், சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன், கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள வேங்கமரத்து நாச்சியம்மன், காளப்பநாயக்கன்பட்டி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
- முதலைப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
- பணத்தை எடுத்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல்லை அடுத்த சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் நல்லதம்பி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர் முதலைப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
தக்காளி
சாலையில் சென்ற போது சாலையோரம் தக்காளி விற்பனை செய்ததை பார்த்த வர், தக்காளி வாங்க இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்தின் சீட்டின் பின்புறம் வைத்திருந்த பர்ஸை எடுத்து தக்காளி வாங்க சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது வாக னத்தில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி திருடன்... திருடன்... என சத்தம் போட்டு உள்ளார். ஆனால் பணத்தை எடுத்த மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார்.
இது குறித்து நல்லிபாளை யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் கொள்ளையனை தேடி வருகின்றனர். பட்ட பகலில் பெண்ணி டம் பணம் கொள்ளை யடித்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் உள்ளது.
- அரியூர்நாடு பஞ்சாயத்தில் உள்ள மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் உள்ளது. இங்கு அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிகை அம்மன் கோவில், மாசி பெரியண்ணன் சாமி கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, வாசலூர்பட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் உள்ளது. விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இந்த நிலையில் அரியூர்நாடு பஞ்சாயத்தில் உள்ள மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். அருவிக்கு செல்லும் பாதை மற்றும் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.






