என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "There are 165 seats available for female students"

    • கவிஞர் ராமலிங்கம் கல்லூரியில் காலியாக உள்ள பாடப் பிரிவில் மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தெரிவித்துள்ளார்.
    • 2023-24 மாணவர்கள் சேர்க்கையில் இது வரை 910 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் கல்லூரியில் காலியாக உள்ள பாடப் பிரிவில் மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது : நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 3200 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    2023-24 மாணவர்கள் சேர்க்கையில் இது வரை 910 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வரலாறு ஆகிய பாடப் பிரிவில் மாணவிகள் சேர 165 இடங்கள் உள்ளன. காலியாக உள்ளதால் மாணவிகள் கல்லூரியில் செப்டம்பர் 5- ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

    ×