என் மலர்
நாமக்கல்
- தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் குழுவுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வட்டாரங்களில் செயல்படுத்தபட உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராம அளவில் இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் குழுவுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வட்டாரங்களில் செயல்படுத்தபட உள்ளது. இத்திட்டத்திற்கு கபிலர்மலை வட்டாரம் தேர்வாகி உள்ள நிலையில் இதற்காக குழுவாக செயல்படும் விவசாயிகள் தங்கள் குழு மூலம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மண்புழு உரம், அமிர்த கரைசல் மற்றும் மீன் அமிலம் போன்ற இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் அலகை நிறுவி உற்பத்தி செய்யும் பட்சத்தில் அக்குழுவுக்கு வேளாண்மைத்துறை மூலம் ரூபாய் ஒரு லட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் அலகை நிறுவ ஆர்வமுள்ள விவசாயக்குழுக்கள் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறுமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
- பருவமழை தவறாது பெய்ய வேண்டும், தொழில் கல்வி வளம் பெறுக வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் செவ்வாடை அணிந்து கஞ்சி கலயங்கள், முளைப்பாரி, தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
- ஊர்வலத்தில் ஆதிபராசக்தி உருவப்படம் எடுத்துச் செல்லப்பட்டது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பருவமழை தவறாது பெய்ய வேண்டும், தொழில் கல்வி வளம் பெறுக வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் செவ்வாடை அணிந்து கஞ்சி கலயங்கள், முளைப்பாரி, தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம்
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசித்து விட்டு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கவரை தெரு, கடைவீதி வழியாக மேட்டு தெருவில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மகளிர் மன்றத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் ஆதிபராசக்தி உருவப்படம் எடுத்துச் செல்லப்பட்டது.
ஊர்வலத்துக்கு நாமக்கல் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வேள்விக்குழு பிரச்சாரக் குழு இளைஞர் அணியினர் செவ்வாடை அணிந்த பெண்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
- கணவனை மனைவியே இரும்பு சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கந்தநகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (40). இவர் பரமத்திவேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு டீ கடையில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கலா (36).
விஜயகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கலா கணவர் விஜயகுமாரை வீட்டில் இருந்த இரும்பு சுத்தியலால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் விஜயகுமார் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரின் தலையில் இரும்பு சுத்தியலால் தாக்கி கொலை செய்த மனைவி கலாவை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் பெண்கள் சிறையில் கலாவை அடைத்தனர்.
கணவனை மனைவியே இரும்பு சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அய்யமுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும், அவரது மனைவி அய்யம்மாள் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும் இறந்தனர்.
- அய்யமுத்து, அவரது மனைவி அய்யம்மாளுக்கு முழு உருவச்சிலை வைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் அத்திமரத்து குட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யமுத்து. இவரது மனைவி அய்யம்மாள். அய்யமுத்து ராமாயிபட்டியில் உள்ள இருசாயி கோவில் பூசாரியாக பல ஆண்டுகள் இருந்து வந்து மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார். இந்தநிலையில் அய்யமுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும், அவரது மனைவி அய்யம்மாள் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும் இறந்தனர்.
அய்யமுத்து உயிருடன் இருக்கும்போதே தான் இறந்த பிறகு தனக்கு சொந்தமான நிலத்தில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என கூறி வந்ததாக தெரிகிறது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் அய்யமுத்துவை அடக்கம் செய்தனர்.
இந்தநிலையில் தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற அவரது பேரன்கள், பூசாரி அய்யமுத்து உயிருடன் இருக்கும்போது எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினாரோ, அதே இடத்தில் அவருக்கு கோவில் கட்டி உள்ளனர். மேலும் அய்யமுத்து, அவரது மனைவி அய்யம்மாளுக்கு முழு உருவச்சிலை வைத்தனர். அய்யமுத்துவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று முன்தினம் அவர்களது சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து பூஜைகள் செய்து வழிபட்டனர். தாத்தா-பாட்டிக்கு சிலை வைத்து வழிபட்ட பேரன்கள், பேத்திகள், உறவினர்களின் செயல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
- கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு உற்பதத்தி செய்யப்படும் முட்டைகள் சத்துணவு மற்றும் உள்மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. வடமாநிலங்களில் உற்பத்தி குறைவால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை அதிகளவில் செல்கின்றன.
இது மட்டுமின்றி துபாய், மஸ்கட், இலங்கை உள்பட பல்வேறு வெளிநா டுகளுக்கு முட்டைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணை யாள ர்கள் சங்க தலைவர் சிங்க ராஜ் கூறியதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் வடமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது. மழைகாரணமாக நுகர்வு அதிகம் உள்ளதால் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் 2 ஏக்கர் நிலத்தை பரமத்தி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க தானமாக வழங்கினர்.
- போலி பத்திரம் பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், மேலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டி மனு அளித்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் கடந்த 1998 இல் அசோகன், சண்முகம், தியாகராஜன், நவக்குமார், ரத்தினகுமார், துரைசாமி, மூர்த்தி, பாலசுப்பிரமணி, பழனியாண்டி கோபால், நரசிம்மன், பாப்பாயி ஆகிய 12 பேர் தங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை பரமத்தி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க தானமாக வழங்கினர்.
அப்போது பரமத்தியை சேர்ந்த 4 நபர்கள் தனக்கு இந்த இடத்தில் உரிமை உள்ளது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 24 ஆண்டு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.
கடந்த ஜூலை 24 -ந்தேதி பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் தாமாக கொடுத்த நிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான என தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட பதிவாளரிடம் பரமத்தி சேர்ந்த கார்த்தி கேயன் என்பவர் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் அரசு பள்ளிக்கு தானமாக கொடுத்த இடத்தில் தனக்கு சொந்தமென போலி பத்திரம் பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், மேலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டி மனு அளித்தார்.
இந்த மனுவை நாமக்கல் மாவட்ட பதிவாளர் சந்தானம் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் தவறான சந்ததிகளை தெரிவித்து பதிவு செய்யப்பட்ட மேற்படி நான்கு பத்திர பதிவுகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் ரத்து செய்யப்பட்ட மேற்கண்ட ஆவணங்களை கொண்டு ஆவணங்கள் ஏதேனும் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால் பதிவுக்கு அனுமதிக்காமல் ஆவணத்தை மறுத்தலிப்பு செய்ய சார் பதிவாளருக்கு ஆணை இடப்படுகிறது.
மேலும் புகாருக்கு உண்டான ஆவணத்தில் சம்பந்தப்பட்ட நபர்களில் மீது பதிவுச் சட்டம் 63 கீழ் நடவடிக்கை எடுத்து காவல்துறையினிடம் புகார் செய்து குற்ற வழக்கு தொடர பரமத்தி சார்பதிவாளருக்கு ஆணை இடப்படுகிறது இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கவிஞர் ராமலிங்கம் கல்லூரியில் காலியாக உள்ள பாடப் பிரிவில் மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தெரிவித்துள்ளார்.
- 2023-24 மாணவர்கள் சேர்க்கையில் இது வரை 910 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் கல்லூரியில் காலியாக உள்ள பாடப் பிரிவில் மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் கோவிந்தராஜு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது : நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 3200 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
2023-24 மாணவர்கள் சேர்க்கையில் இது வரை 910 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், வரலாறு ஆகிய பாடப் பிரிவில் மாணவிகள் சேர 165 இடங்கள் உள்ளன. காலியாக உள்ளதால் மாணவிகள் கல்லூரியில் செப்டம்பர் 5- ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
- காளியண்ணன்(79), இவரது மனைவி நல்லம்மாள் (70) . நல்லம்மாள் அருகிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு வீட்டை பூட்டாமல் வெளி தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டார்.
- வேலை முடிந்து மதியம் அளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டுக்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதைப் பார்த்த காளியண்ணன் சத்தம் போட்டுள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோதூர் பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் குடியிருந்து வருபவர் காளியண்ணன்(79), இவரது மனைவி நல்லம்மாள் (70) . நல்லம்மாள் அருகிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு வீட்டை பூட்டாமல் வெளி தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டார்.காளியண்ணன் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வேலை முடிந்து மதியம் அளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டுக்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதைப் பார்த்த காளியண்ணன் சத்தம் போட்டுள்ளார்.
இருவரும் சுற்றுச்சுவரை ஏறி குதித்து வெளியே தயாராக புல்லட் மோட்டார் பைக்குடன் ஒருவர் இருந்துள்ளார். அந்த புல்லட் மோட்டார் பைக்கில் ஏறினார்கள் . பின்னர் மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்த போது மோட்டார் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் 3 பேர் புல்லட் மோட்டார் பைக்கை சிறிது தூரம் தள்ளிக்கொண்டு சென்றனர். அவருக்கு பின்னால் சென்ற காளியண்ணன் வேகமாக நடக்க முடியவில்லை . அதனால் சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஓடி வருவதை பார்த்த மூன்று வாலிபர்களும் புல்லட் மோட்டார் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் காளியண்ணனும் அவரது மனைவி நல்லம்மாளும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த டேபிள் டிராயரில் வைத்திருந்த பணம் ரூ.50 ஆயிரமும், 5 பவுன் தங்க நகையும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து காளியண்ணனின் மகன் மணி நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நல்லூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு புல்லட் மோட்டார் பைக்கை விட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் திருடர்கள் விட்டு சென்ற மோட்டார் பைக் திருடி வந்துள்ளது தெரிய வருகிறது. மேலும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தப்பியோடிய மூன்று திருடர்களையும் தொடர்ந்து தேடி வந்தனர். அப்போது தப்பியோடிய மூன்று நபரில் ஒருவரான ராஜ்குமார் என்பவர் கோதூரிலிருந்து செருக்கலை செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோழி பண்ணைக்குள் புகுந்து மறைந்து இருப்பது தெரியவந்தது. அவனை சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து நல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் தொடர்ந்து அந்த சுற்றுவட்டார பகுதிகளில் திருடர்களை தேடிய நிலையில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் தொட்டியம் தோட்டம் பகுதியில் விக்னேஷ் என்பவன் மறைந்து இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற பொதுமக்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் ராஜ்குமார் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.
அதனை தொடர்ந்து இருவரும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்பியோடிய மற்றொரு திருடனை நல்லூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பரமத்திவேலூர் வட்டத்தில் பல பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
- கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.
பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங் களாக (மூட்டைகளாக) கட்டி, பிலக்கல்பாளை யத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது.
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,500 வரையிலும் ஏலம் போனது. நாட்டுச் சர்க்கரை சிப்பம் ஒன்று கடந்த வாரம் ரூ.1,300-க்கும், நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாட்டு சர்க்கரை சிப்பம் ஒன்று ரூ.1,350- க்கும் ஏலம் போனது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்க உள்ள நிலையில் வெல்லம் விலை உயர்ந்திரு ப்பதாக வியாபாரி கள் தெரிவித்தனர்.வெல்லம் விலை உயர்ந்திருப்பதால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்று வட்டாரத்தில் தெருநாய் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையத்தில் கும்பலாக சுற்றித்திரிந்த தெருநாய்கள் அவ்வழியாக வருவோர், செல்வோரை எல்லாம் கடித்து குதறியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.
இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், வெறிநாய் பொதுமக்களை கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்களை அனுப்பி வைத்து நாய்கள் பிடிக்கப்பட்டன. நகரில் உள்ள நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றார்.
- கணேசன் (60). லாரி அதிபர். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வெளியே சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பினார்.
- வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சித்தா ளந்தூர் பழைய புளியம்பட்டி குன்னங்கல்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (60). லாரி அதிபர். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தா ருடன் வெளியே சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் உள்ளே சென்று பார்த்துள்ளார். வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 24 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செங்கோடு புற காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
- இன்று முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ. 4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 10-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ. 4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கோழிவிலை பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.






