என் மலர்
நாமக்கல்
- சிகிச்சை பலனின்றி இளங்கோவன் உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராசிபுரம்:
சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணியளவில் நாமக்கல் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த இளங்கோவன் (49) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் மற்றொரு டிரைவராக சிவக்குமார் என்பவரும் இருந்தார்.
விழுப்புரம் வரை இளங்கோவன் பஸ்சை ஓட்டி வந்த நிலையில் சோர்வாக இருந்ததால் பஸ்சின் பின் சீட்டில் உறங்க சென்று விட்டார். இதையடுத்து சிவக்குமார் பஸ்சை ஓட்டி சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு அருகே பஸ் வந்தபோது, இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மீட்டு ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் உயிரிழந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வாழவந்தி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வாழவந்தி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை)அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி,குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரிய கரசப்பாளையம், சின்ன கரசப்பாளையம் , நொச்சிபட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிப்பாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி ஆகிய இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
- வரதராஜன் (53). ஆட்டோ டிரைவர். தற்போது கரூர் - நாமக்கல் பைபாஸ் சாலையில் உள்ள என்.கே நகரில் வசித்து வந்தார்.
- நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள பில்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன் (53). ஆட்டோ டிரைவர். தற்போது கரூர் - நாமக்கல் பைபாஸ் சாலையில் உள்ள என்.கே நகரில் வசித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு செல்ல கரூர்- நாமக்கல் பைபாஸ் சாலையில் வந்தார். அப்போது பரமத்தியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வரதராஜன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பிக்கு தகவல் கிடைத்துள்ளது.
- இதில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட படமுடிபாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்த சபாபதி (26) என்பவரை கைது செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள படமுடிபாளையத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் படமுடிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட படமுடிபாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்த சபாபதி (26) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்கள், அவரது மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சப்பாணி (வயது 56). இவர் தனது வீட்டுக்கு அருகிலேயே டீக்கடை நடத்தி வருகிறார்.
- கடைக்கு டீக்குடிக்க வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் (53) என்பவர் உதவியுடன் சிலிண்டரை மாற்ற முயற்சி செய்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் சப்பாணி (வயது 56). இவர் தனது வீட்டுக்கு அருகிலேயே டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று டீக்கடையில் இருந்த சிலிண்டரில் கியாஸ் தீர்ந்து விட்டது.
இதையடுத்து கடைக்கு டீக்குடிக்க வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் (53) என்பவர் உதவியுடன் சிலிண்டரை மாற்ற முயற்சி செய்தார். அப்போது அருகில் விறகு அடுப்பில் தீ எரிந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கியாஸ் கசிந்து திடீரென தீப்பிடித்தது. இதில் சப்பாணி மற்றும் கணேசன் ஆகியோர் தீயில் கருகினர். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அக்கம், பக்கத்தினர் சேர்த்தனர்.
இதில் சப்பாணியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ேசர்க்கப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல் நிலை மோசமடைந்தது. இதனால் உறவினர்கள் அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று காலையில் சப்பாணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொங்கலம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 13-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.
- விழாவில் பக்தர்கள் கோவிலில் இருந்து பால்குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கொங்கலம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 13-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் கோவிலில் இருந்து பால்குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். பின்னர் பால் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் கொங்கலம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- முட்டை கோழி விலையை கிலோவுக்கு 5 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
- 90 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 85 ரூபாயாக சரிந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், திருப்பூர், பல்லடம், ஈரோடு உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமாக கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கறிக்கோழிக்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழியில் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 5 ருபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 114 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 119 ரூபாயாக உயர்ந்தது.
நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முட்டை கோழி விலையை கிலோவுக்கு 5 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 90 ரூபாயாக இருந்த முட்டை கோழிவிலை 85 ரூபாயாக சரிந்தது. ஆனால் முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 470 காசுளாக நீடிக்கிறது.
- கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- முன்னாள் மாணவிகள் சங்க பொருளாளர், உதவி பேராசிரியை செல்வி வரவேற்றார்.
நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்து பேசினார். முன்னாள் மாணவிகள் சங்க பொருளாளர், உதவி பேராசிரியை செல்வி வரவேற்றார். சங்க செயலாளர் காஞ்சனா ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 50 முன்னாள் பேராசிரியைகள், 750 முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களது கல்லூரி கால பழைய நினைவுகள் குறித்து பேசி மகிழ்ந்தனர். மேலும், கல்லூரியில் முதல் முறை பட்டம் பெற்ற 3 முன்னாள் மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் பேராசிரியைகள், முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டு பேசினர். உதவி பேராசிரியை சுகன்யா நன்றி கூறினார்.
- சப்பானி (54). இவரது மகன் சந்துரு (35). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
- இன்று காலை சப்பானி கியாஸ் சிலிண்டரை மாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென சிலிண்டரில் தீப்பிடித்து.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சப்பானி (54). இவரது மகன் சந்துரு (35). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். மகனுக்கு உதவியாக சப்பானியும் டீக்கடையில் வேலை செய்து வருகிறார்.
தீ விபத்து
இந்த நிலையில் இன்று காலை சப்பானி கியாஸ் சிலிண்டரை மாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென சிலிண்டரில் தீப்பிடித்து.
இதில் சப்பானி, கடையில் டீக்குடிக்க வந்த அதே பகுதியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளியான கணேசன் (55) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
2 பேர் காயம்
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து, வலியால் துடித்த இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சப்பானிக்கு அதிக தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேங்காதின்னிபட்டியை சேர்ந்தவர் அழகன் மகன் ஏழுமலை (40). லாரி லோடு மேனாக வேலை செய்து வந்தார்.
- பெரியசாமி கோவில் போகும் வழியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றார் அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நாமக்கல்:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேங்காதின்னிபட்டியை சேர்ந்தவர் அழகன் மகன் ஏழுமலை (40). லாரி லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவர் விடுமுறை தினமான நேற்று தனது நண்பர்களுடன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த நிலையில் அங்குள்ள நத்துக்குளிப்பட்டி - பெரியசாமி கோவில் போகும் வழியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றார் அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது உடலை மீட்டனர்.
தொடர்ந்து கொல்லிமலை செம்மேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் ஏழுமலை உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- “ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு” என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
- பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 21-ந்தேதி ( திங்கட்கிழமை) "ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு" என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இதில் மீன் பண்ணை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், உற்பத்தி திறனை அதிகரிக்க வழிமுறைகள் பற்றியும், புதிய தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு பற்றியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசாங்கத்தின் மீன் வளர்ப்புக்கான மானியம் பற்றியும் எடுத்துரைபடும்.இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் ெதரிவித்துள்ளது.
- அக்னிவீர் தேர்வில் கலந்து கொள்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி தேதி ஆகும்.
- இதற்கான எழுத்துத் தேர்வு 13.10.2023 முதல் நடைபெறும். பிறந்ததேதி 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் இருக்க வேண்டும்.
நாமக்கல்:
இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் தேர்வில் கலந்து கொள்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வருகிற 17-ந்தேதி கடைசி தேதி ஆகும். இதற்கான எழுத்துத் தேர்வு 13.10.2023 முதல் நடைபெறும். பிறந்ததேதி 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடப்பிரிவை பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி தாள்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் . நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் பங்குபெற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.






