என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோகனூர் அருகே இன்று காலை பரபரப்பு டீ கடையில் சிலிண்டர் மாற்றிய போது தீ விபத்து
    X

    மோகனூர் அருகே இன்று காலை பரபரப்பு டீ கடையில் சிலிண்டர் மாற்றிய போது தீ விபத்து

    • சப்பானி (54). இவரது மகன் சந்துரு (35). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
    • இன்று காலை சப்பானி கியாஸ் சிலிண்டரை மாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென சிலிண்டரில் தீப்பிடித்து.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சப்பானி (54). இவரது மகன் சந்துரு (35). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். மகனுக்கு உதவியாக சப்பானியும் டீக்கடையில் வேலை செய்து வருகிறார்.

    தீ விபத்து

    இந்த நிலையில் இன்று காலை சப்பானி கியாஸ் சிலிண்டரை மாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென சிலிண்டரில் தீப்பிடித்து.

    இதில் சப்பானி, கடையில் டீக்குடிக்க வந்த அதே பகுதியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளியான கணேசன் (55) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    2 பேர் காயம்

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து, வலியால் துடித்த இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சப்பானிக்கு அதிக தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×