அரசு மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு கூட்டம்

கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் மாணவிகள் சங்க பொருளாளர், உதவி பேராசிரியை செல்வி வரவேற்றார்.
அரசு மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு கூட்டம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்து பேசினார். முன்னாள் மாணவிகள் சங்க பொருளாளர், உதவி பேராசிரியை செல்வி வரவேற்றார். சங்க செயலாளர் காஞ்சனா ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 50 முன்னாள் பேராசிரியைகள், 750 முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களது கல்லூரி கால பழைய நினைவுகள் குறித்து பேசி மகிழ்ந்தனர். மேலும், கல்லூரியில் முதல் முறை பட்டம் பெற்ற 3 முன்னாள் மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் பேராசிரியைகள், முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டு பேசினர். உதவி பேராசிரியை சுகன்யா நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com