என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் கொங்கலம்மன்
கொங்கலம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
- கொங்கலம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 13-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.
- விழாவில் பக்தர்கள் கோவிலில் இருந்து பால்குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கொங்கலம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 13-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் கோவிலில் இருந்து பால்குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். பின்னர் பால் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் கொங்கலம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






