வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலி

வரதராஜன் (53). ஆட்டோ டிரைவர். தற்போது கரூர் - நாமக்கல் பைபாஸ் சாலையில் உள்ள என்.கே நகரில் வசித்து வந்தார்.நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பலி
Published on

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள பில்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன் (53). ஆட்டோ டிரைவர். தற்போது கரூர் - நாமக்கல் பைபாஸ் சாலையில் உள்ள என்.கே நகரில் வசித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு செல்ல கரூர்- நாமக்கல் பைபாஸ் சாலையில் வந்தார். அப்போது பரமத்தியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வரதராஜன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com