என் மலர்
நீங்கள் தேடியது "மீன் வளர்ப்பு பயிற்சி"
- பயிற்சி முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பயிற்சி ஏற்பாடுகளை சுமிதா செய்திருந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், கடத்தூர்,மொரப்பூர் உள் வட்டார அளவில் தாதனூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டதின் கீழ் பண்ணைக் குட்டைகளில் களப்பின மீன் வகைகள் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஆதிமூலம், வேளாண் உதவி இயக்குனர் பழனிவேல், மாவட்ட மீன் வளர்ப்பு துறை மீன்வள ஆய்வாளர்ஜெயஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பண்ணை குட்டைகளின் கலப்பின மீன் வளர்ப்பின் பயன்பாடுகள் மேலாண்மை தொழில்நுட்பம் திட்டத்தின் நடைமுறைகள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மானிய திட்டங்கள் பற்றி வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமால் எடுத்துக் கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை சுமிதா செய்திருந்தார். இந்த பயிற்சி முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- மீன்கள் வளர்ப்பது குறித்த மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி நடை பெற்றது.
- லாபம் ஈட்டும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக மோளையானூர் விவசாயிகளுக்கு பண்ணை குட்டைகளில் கூட்டின மீன்கள் வளர்ப்பது குறித்த மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி நடை பெற்றது.
இப் பயிற்சியை ஊராட்சி மன்ற தலைவர் துரை பாண்டியன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரம்மாள் ஆகியோர்தொடங்கி வைத்தனர்.
மேலும் பயிற்சியில் மீன்வளத் துறையின் சார்பாக ஆய்வாளர் ஜெய் ஸ்ரீ கலந்து கொண்டு பண்ணை குட்டைகள் அமைப்பதனால் ஏற்படும் நன்மைகள், பண்ணை குட்டைகளின் அளவு, மீன்களின் வகைப்பாடு, கூட்டின மீன்கள் வளர்ப்பதினால் ஏற்படும் பயன்கள் ஊட்டச்சத்து மேலாண்மை, நீர் மேலாண்மை, மீன் வளத்துறையில் உள்ள மானியத் திட்டங்கள் குறித்து விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் பயிற்சியில் முன்னோடி மீன் வளர்ப்பாளர் சத்தியம் கலந்து கொண்டு பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு முறைகள் அதன் பராமரிப்பு, அதிக லாபம் ஈட்டும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் கலந்து கொண்டு உழவன் செயலி பயன்படுத்துவதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் அதனை பதிவிறக்கம் செய்வது குறித்தும் விளக்கமாக எடுத்து வைத்தார்,
பயிற்சியில் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சண்முகம், மனோஜ் குமார் உட்பட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- நாளை காலை 10 மணிக்கு, கோடை கால மீன் வளர்ப்பில் பண்ணை மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
- நவீன தொழில்நுட்ப முறையில் மீன்வளர்ப்பு, மேலும் மாநில, மத்திய அரசுகளின் மீன் வளர்ப்புக்கான மானிய உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்ப டும்.
நாமக்கல்:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மோகனூர் ரோட்டில், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை காலை 10 மணிக்கு, கோடை கால மீன் வளர்ப்பில் பண்ணை மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில், மீன் பண்ணைகளில் கோடைக் காலத்திற்கேற்ப தண்ணீர் பராமரிப்பு முறைகள், தாய் மீன் மற்றும் மீன் குஞ்சுகளுக்கு உணவு மேலாண்மை, தண்ணீரில் வெப்பநிலையை குறைப்பதற்கான ஆலோசனை, மீன் பிடித்த குளங்களை காயவிட்டு மேல் மண்ணை அகற்றி செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள், குறுகிய கால மீன் வளர்ப்பு முறைகள், இயற்கை உணவு உற்பத்தி முறைகள், நவீன தொழில்நுட்ப முறையில் மீன்வளர்ப்பு, மேலும் மாநில, மத்திய அரசுகளின் மீன் வளர்ப்புக்கான மானிய உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்ப டும்.
இப்பயிற்சி கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் பயிற்சிக்கு வருபவர்கள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- “ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு” என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
- பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 21-ந்தேதி ( திங்கட்கிழமை) "ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு" என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இதில் மீன் பண்ணை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், உற்பத்தி திறனை அதிகரிக்க வழிமுறைகள் பற்றியும், புதிய தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு பற்றியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசாங்கத்தின் மீன் வளர்ப்புக்கான மானியம் பற்றியும் எடுத்துரைபடும்.இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் ெதரிவித்துள்ளது.






