என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாதனூர் பகுதியில் பண்ணை குட்டையில் கலப்பின மீன்வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பண்ணை குட்டையில் கலப்பின மீன் வளர்ப்பு பயிற்சி
- பயிற்சி முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- பயிற்சி ஏற்பாடுகளை சுமிதா செய்திருந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், கடத்தூர்,மொரப்பூர் உள் வட்டார அளவில் தாதனூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டதின் கீழ் பண்ணைக் குட்டைகளில் களப்பின மீன் வகைகள் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஆதிமூலம், வேளாண் உதவி இயக்குனர் பழனிவேல், மாவட்ட மீன் வளர்ப்பு துறை மீன்வள ஆய்வாளர்ஜெயஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பண்ணை குட்டைகளின் கலப்பின மீன் வளர்ப்பின் பயன்பாடுகள் மேலாண்மை தொழில்நுட்பம் திட்டத்தின் நடைமுறைகள் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மானிய திட்டங்கள் பற்றி வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமால் எடுத்துக் கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை சுமிதா செய்திருந்தார். இந்த பயிற்சி முகாமில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.






