என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயாரிக்கும் அலகை"

    • தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் குழுவுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வட்டாரங்களில் செயல்படுத்தபட உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராம அளவில் இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் குழுவுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வட்டாரங்களில் செயல்படுத்தபட உள்ளது. இத்திட்டத்திற்கு கபிலர்மலை வட்டாரம் தேர்வாகி உள்ள நிலையில் இதற்காக குழுவாக செயல்படும் விவசாயிகள் தங்கள் குழு மூலம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மண்புழு உரம், அமிர்த கரைசல் மற்றும் மீன் அமிலம் போன்ற இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் அலகை நிறுவி உற்பத்தி செய்யும் பட்சத்தில் அக்குழுவுக்கு வேளாண்மைத்துறை மூலம் ரூபாய் ஒரு லட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் அலகை நிறுவ ஆர்வமுள்ள விவசாயக்குழுக்கள் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறுமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×