என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • டாக்டர் மதன்குமார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • டாக்டர் மதன்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத படியே அஞ்சலி செலுத்தினர்.

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன், காண்டிராக்டர். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் மதன்குமார் (29).

    எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுவியல் மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் திடீரென மதன்குமார் மாயமானார். சகமாணவர்கள் அவரை தேடிய போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது உடலை தீ வைத்து எரித்ததாகவும், பின்னர் பாதி எரிந்த நிலையில் உடலை தூக்கி கீழே போட்டதில் அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் விழுந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே டாக்டர் மதன்குமார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதன்குமார் உடல் விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டியை அடுத்த புதூரில் உள்ள சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் அவரது உடல் இன்று காலை கொண்டு வரப்பட்டது.

    இதையொட்டி அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் டாக்டர் மதன்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத படியே அஞ்சலி செலுத்தினர்.

    அமைச்சர் அஞ்சலி

    தொடர்ந்து அவரது உடல் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா உள்பட பலர் மதன்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் நாமக்கல் மின் மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே மகன் சாவுக்கான காரணத்தை கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. பேரவை நிர்வாகிகள் கைகளில் அகல் விளக்குகள் ஏந்தியவா
    • திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. பேரவை நிர்வாகிகள் கைகளில் அகல் விளக்குகள் ஏந்தியவாறு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பேரவை நிர்வாகிகளுக்கு முதல்வர், பேராசிரியர்கள் ரகுபதி, சரவணா தேவி, ரமேஷ்குமார் மற்றும் மாணவ, மாணவியர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பிளஸ்-2 படித்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில வழிகாட்டுதல் களப்பயணம் என்ற அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேர் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர். கல்லூரி முதல்வர் ரேணுகா அனைவருக்கும் மலர்கள் கொடுத்து வரவேற்றார்.

    அவர்களுக்கு வகுப்பறையில் பாடங்கள் நடத்தும் முறை, நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை நேரில் அழைத்து சென்று காட்டினர். இது குறித்து முதல்வர் ரேணுகா கூறுகையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அரசு கல்லூரியில் உள்ள வசதிகள், கற்றுக்கொடுக்கும் தன்மைகள் குறித்து அறியச்செய்து அவர்களை அரசு கல்லூரியில் உயர்கல்வி பயில வைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு அரசு உத்திரவின்படி நடத்தப்பட்டது என்றார்.

    • ராஜேஷ் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ராஜேஷ்(24). இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பொட்டிரெட்டிப்பட்டி வார சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை கை மற்றும் வாய்ப்பகுதியில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ராஜேஷை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்து, அதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி பறிமுதல் செய்தனர்.
    • காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் பொறுப்பு சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்து, அதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுபோல் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்தார்.

    அதேபோல் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தங்கள் கைகளில் தங்களது ஓட்டுநர் உரிமத்தையும் நடத்துனர் உரிமத்தையும் வைத்திருக்க வேண்டும் எனவும் பெயர் பேட்ச் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாமல் இருந்தால் நோட்டீஸ் கொடுத்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    • பதவி வகித்த காலக் கட்டத்தில் ஒருவந்தூர் வளாகத்தில் இருந்த 16 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் இந்த மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவராகவும், விவசாய முன்னேற்ற கழக தலைவராகவும் இருப்பவர் செல்ல.ராசாமணி.

    இவர் ஒருவந்தூர் நீரேற்று பாசன சங்க தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை பதவி வகித்த காலக் கட்டத்தில் ஒருவந்தூர் வளாகத்தில் இருந்த 16 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.

    இது தொடர்பாக கூட்டுறவு துறை சார்பாக அளித்த தகவலின்பேரில் வருவாய்துறை, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் இந்த மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அப்போது பதவி வகித்து வந்த சங்க செயலாளர் பொன்னுசாமி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என சங்க உறுப்பினர் நாச்சிமுத்து என்பவர் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தேக்கு மரங்களை வெட்டுவதற்கு சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை எனவும், முறையாக அனுமதி பெறாமல் வெட்டப்பட்டதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அதிரடியாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணியை கைது செய்தனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா, போக்குவரத்து செயலாக்கம் அலுவலர் சரவணன் மற்றும் அலுவலர்கள் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் மற்றும் பம்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா, போக்குவரத்து செயலாக்கம் அலுவலர் சரவணன் மற்றும் அலுவலர்கள் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தடையை மீறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் மற்றும் பம்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய கார்களை வாடகைக்கு பயன்படுத்தியதாக 4 கார்களை பிடித்து விசாரணை நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் 2 கார்களுக்கு அபராதம் விதித்தனர். கண்ணை கூசும் ஒளிபட்டைகள் பொருத்தியது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.83 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார். 

    • கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
    • குறிப்பாக பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலம் மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நி லை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிக பட்சமாக பெத்தநாயக்கன் பாளையத்தில் 13 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 5, தலைவாசல் 5, ஏற்காடு 1.4, ஆனைமடுவு 1, சேலம் 0.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.7 மி.மீ. மழை பெய்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் மங்களபுரம், நாமக்கல், பரமத்திவேலூர், கொல்லி மலை ஆகிய பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, ஒத்தக்கடை, நல்லூர் , கந்தம்பாளையம், பொத்தனூர் ,பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து. இதன் காரணமாக சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து சென்றபொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர் .அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் கனமழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதில் அதிக பட்சமாக மங்களபுரத்தில் 11.6 மி.மீ. மழை பெய்துள்ளது. நாமக்கல் 7, பரமத்தி 4, கொல்லி மலை 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 25.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று தல விருட்ச மரக்கன்றை நட்டு வைத்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று தல விருட்ச மரக்கன்றை நட்டு வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இன்று(நேற்று) ஒரே நாளில் 12 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. சட்டப்பேரவை அறிவிப்பின்படி ஆஞ்சநேயர் கோவில் திருப்பணி நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 1,131 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. கடந்த 28 மாதங்களில் 8,006 கோவில்களுக்கு திருப்பணிகள் நடத்த மாநில தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. தி.மு.க.வினர் கோவில் திருப்பணிக்கு தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

    ஈரோடு மணடலத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ரூ.69.09 கோடிமதிப்பீட்டில் 345 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 1 லட்சம் தல விருட்ச மரங்கள் நடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2,000 கிராம கோவில்களுக்கு ஒரு கால பூஜை செய்வதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2022-2023-ம் ஆண்டில் 2,500 கோவில்கள், 2023-2024-ம் ஆண்டு 2,500 கோவில்கள் என 5,000 கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள் முடிவுறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 5,436 கோடி ரூபாய் மதிப்புள்ள 5,480 ஏக்கர் இந்து சமய அறநிலையத் துறை நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மேலும் தொடரும்.

    திருச்செங்கோடு அர்த்தநா ரீஸ்வரர் கோவில் ரோப்கார் திட்டம் ஆய்வில் உள்ளது. மலைசார்ந்த கோவில்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 28 கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாம் என்ற அடிப்படையில் அர்ச்சகர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதுபோல் 8 பெண்கள் ஓதுவார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் 36 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளன. 5 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ளனர். அவர்களுக்கும் நீதிமன்ற வழக்கு முடிந்தபின் அர்ச்சர்களாகும் சூழல் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியின்போது கலெக்டர் உமா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர் அமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில், அறங்காவல் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் ராம.சீனிவாசன், மல்லிகா குழந்தைவேலு, செல்வசீராளன், ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

    • வாழ்நாயக்கன் பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் காளிதாஸ் (32). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார்.
    • காளிதாஸ் வழக்கம்போல் கட்டிட வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் காளிதாஸ் வீட்டிற்கு வரவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் அருகே வாழ்நாயக்கன் பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் காளிதாஸ் (32). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதா (30). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

    இந்நிலையில் காளிதாஸ் வழக்கம்போல் கட்டிட வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் காளிதாஸ் வீட்டிற்கு வரவில்லை. ரஞ்சிதா காளிதாஸ் செல்போனுக்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா உறவினர் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடிப் பார்த்தார்.

    ஆனால் காளிதாஸை கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து ரஞ்சிதா நல்லூர் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து காளிதாஸ் தானாக எங்காவது சென்று விட்டாரா அல்லது அவரை எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
    • இந்த 18 வார்டுகளிலும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த 18 வார்டுகளிலும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக 71 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து 3 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    முற்றுகை

    இதைதொடர்ந்து இன்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 71 பேரும் பணிக்கு செல்லாமல் நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க கோரி நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் வாழ்வாதாரமே இந்த சம்பளத்தை நம்பி உள்ளது. வீட்டு வாடகை, மளிகை சாமான்கள், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது தீபாவளி வருவதால் எங்களுக்கு நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என முறையிட்டனர்.

    இதையடுத்து நகராட்சி ஆணையாளர், நகரமன்ற தலைவர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்தால் நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதியிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளாமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரமத்தி வேலூரில் நேற்று இரவு "என் மண் என் மக்கள்" நடைபயணம் மேற்கொண்டார்.
    • பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டனர்.

     பரமத்தி வேலூர்:

    தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரமத்தி வேலூரில் நேற்று இரவு "என் மண் என் மக்கள்" நடைபயணம் மேற்கொண்டார். அவருடன், பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டனர்.

    அப்போது பரமத்திவேலூர் பகுதியில் பழைய புறவழிச் சாலை முக்கோண பூங்கா பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கி அங்கிருந்து நாமக்கல் சாலை, சுல்தான்பேட்டை- மோகனூர் பிரிவு சாலை, பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக நடந்து சென்று பொதுமக்களை அண்ணாமலை சந்தித்தார்.

    தொடர்ந்து பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதியின் "என் மண் என் மக்கள்" நடைபயணத்தின் நிறைவாக பரமத்திவேலூர் நான்கு சாலை பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் 91 சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் முடித்து பரமத்தி வேலூரில் 92-வது சட்டமன்ற தொகுதி நடைபயணம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு இந்த பாதயாத்திரை நடைபயணம் சென்று வருகிறோம். விவசாய தொழில் நிறைந்த பரமத்தி வேலூரில் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஆளும் தி.மு.க. அரசு நிறைவேற்ற வில்லை.

    சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு உரிய தொகையினை கூட்டுறவு ஆலைகள் வழங்கவில்லை., பரமத்திவேலூர் பகுதியில் உள்ள வெல்லம், கரும்பு போன்றவற்றை அரசுதுறை நிறுவனங்கள் கொள்முதல் செய்யவில்லை. ரேசன் கடைகளில் நாட்டுச்சர்க்கரை வழங்கவில்லை. கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 4,000 ரூபாயாக இதுவரை உயர்த்தி தரவில்லை.

    பரமத்திவேலூரில் இருந்த வெற்றிலை ஆராய்ச்சி நிலையத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். அதனை மீண்டும் பரமத்தி வேலூரிலேயே அமைக்க வேண்டும்.

    கவுரவ நிதி

    ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்காக பிரதமர் பயிர் காப்பீடு, மண் வள அட்டை, விவசாயிகள் கடன் அட்டை, விவசாயிகள் கவுரவ நிதி, பாசன வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி அரசு விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தி.மு.க. அரசு தமது சுய லாபத்திற்காக கொண்டு வந்த சட்ட மசோதாக்களுக்கு தான் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லையே தவிர, அவர் வேண்டுமென்ரே எந்த கோப்புகளையும் கிடப்பில் போடவில்லை என்பதை முதல்- அமைச்சர், அமைச்சர்கள் உணர வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ற இலக்கை நிர்ணயித்து இதுவரை 8.50 லட்சம் மேற்பட்டோருக்கு, ரோஜ்கார் மேளாக்கள் நடத்தப்பட்டு மத்திய அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் வேலை வழங்கும் இலக்கு எய்தப்படும்.

    எனவே வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலிலும் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பங்கேற்றவர்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி.துரைசாமி, மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார், என் மண் என் மக்கள் யாத்திரை நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் காந்தி, மாவட்ட பொதுச் செயலாளர் சுபாஷ் , மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன்,மாவட்ட துணைத் தலைவர்கள் வடிவேல், பழனியப்பன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் பூபதி, மாவட்ட பிறமொழி பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் செல்வராஜ் , பரமத்தி ஒன்றிய தலைவர் அருண், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்ம ராஜா,பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மாவட்ட ,ஒன்றிய, பேரூர், கிளை பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • பள்ளி பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாளாக உள்ளது.
    • இங்கு சர்ட், வேட்டி, சேலை, லுங்கி, துண்டு உள்ளிட்ட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாளாக உள்ளது. இங்கு சர்ட், வேட்டி, சேலை, லுங்கி, துண்டு உள்ளிட்ட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. பொங்கல், தீபாவளி மற்றும் வடமாநில பண்டிகை காலத்தில் விற்பனை அதிகளவு இருக்கும். அந்தளவுக்கு உற்பத்தியும் இரவு, பகலாக நடக்கும்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனையின்றி தேக்க மடைந்துள்ளதால் உற்பத்தி யாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து பள்ளி பாளையம் வட்டார ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:-

    பள்ளிபாளையம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்லும். கேரளாவில் ஓணம் பண்டிகை, கர்நாடாகவில் தசரா பண்டிகையின் போது எதிர்பார்த்தளவு விற்பனை இல்லை. இதனால் பல கோடி மதிப்பிலான துணிகள் விற்பனையின்றி தேக்க மடைந்துள்ளது. இதனால் உற்பத்தியா ளர்களுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    விரைவில் தீபாவளி வரவுள்ளதால் உற்பத்தியை நிறுத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழி லாளர்களுக்கு தீபாவளி போன்ஸ் மற்றும் சம்பளம் உள்ளிட்ட இதர செலவுகள் போன்றவை சமாளிப்பதே கடினமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×