என் மலர்
நீங்கள் தேடியது "துணி தேக்கம்"
- பள்ளி பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாளாக உள்ளது.
- இங்கு சர்ட், வேட்டி, சேலை, லுங்கி, துண்டு உள்ளிட்ட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாளாக உள்ளது. இங்கு சர்ட், வேட்டி, சேலை, லுங்கி, துண்டு உள்ளிட்ட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. பொங்கல், தீபாவளி மற்றும் வடமாநில பண்டிகை காலத்தில் விற்பனை அதிகளவு இருக்கும். அந்தளவுக்கு உற்பத்தியும் இரவு, பகலாக நடக்கும்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் விற்பனையின்றி தேக்க மடைந்துள்ளதால் உற்பத்தி யாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து பள்ளி பாளையம் வட்டார ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:-
பள்ளிபாளையம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்லும். கேரளாவில் ஓணம் பண்டிகை, கர்நாடாகவில் தசரா பண்டிகையின் போது எதிர்பார்த்தளவு விற்பனை இல்லை. இதனால் பல கோடி மதிப்பிலான துணிகள் விற்பனையின்றி தேக்க மடைந்துள்ளது. இதனால் உற்பத்தியா ளர்களுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விரைவில் தீபாவளி வரவுள்ளதால் உற்பத்தியை நிறுத்தினால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழி லாளர்களுக்கு தீபாவளி போன்ஸ் மற்றும் சம்பளம் உள்ளிட்ட இதர செலவுகள் போன்றவை சமாளிப்பதே கடினமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






