என் மலர்
நீங்கள் தேடியது "மேஸ்திரி மாயம்"
- வாழ்நாயக்கன் பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் காளிதாஸ் (32). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார்.
- காளிதாஸ் வழக்கம்போல் கட்டிட வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் காளிதாஸ் வீட்டிற்கு வரவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் அருகே வாழ்நாயக்கன் பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் காளிதாஸ் (32). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதா (30). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் காளிதாஸ் வழக்கம்போல் கட்டிட வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் காளிதாஸ் வீட்டிற்கு வரவில்லை. ரஞ்சிதா காளிதாஸ் செல்போனுக்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா உறவினர் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடிப் பார்த்தார்.
ஆனால் காளிதாஸை கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து ரஞ்சிதா நல்லூர் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து காளிதாஸ் தானாக எங்காவது சென்று விட்டாரா அல்லது அவரை எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.






