என் மலர்
நாமக்கல்
- கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.12 ஆயி ரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.
- முகூர்த்தங்கள் இருப்ப தாலும் விலை உயர்வ டைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்த னூர், வேலூர், அனிச்சம்பா ளையம், குப்புச்சிப்பா ளையம், நன்செய்இடை யாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வெற்றி லைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.12 ஆயி ரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.14 ஆயி ரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயி ரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.
வெற்றிலை வரத்து குறைந்ததாலும், அதிக அள வில் முகூர்த்தங்கள் இருப்ப தாலும் விலை உயர்வ டைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அருகே பொக்லைன் ஆபரேட்ட ராக வேலை பார்த்து வந்த தனசேகரன், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார்.
- சுண்டக்காம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள செட்டுக்காரன் குட்டை அருகே விஷம் குடித்த நிலையில் சாலையோரமாக இறந்து கிடந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அருகே அப்பி நா யக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் தனசேகரன் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகவில்லை.
பொக்லைன் ஆபரேட்ட ராக வேலை பார்த்து வந்த தனசேகரன், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் அவரது பெற்றோர் தனசேகரனை திட்டினர்.
இதனால் மனம் உடைந்த அவர், தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள தனியார் நூல் மில்லில் இருந்து சுண்டக்காம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள செட்டுக்காரன் குட்டை அருகே விஷம் குடித்த நிலையில் சாலையோரமாக இறந்து கிடந்தார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, தனசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடந்து வருகிறது. இங்கு பணிபு ரியும் வடமாநில தொழிலாளர்கள், ஆலை வளாகத்தி லேயே குடிசை அமைத்து அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
- நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசை களுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதேபோல் ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 70) என்பவர் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இங்கு பணிபு ரியும் வடமாநில தொழிலாளர்கள், ஆலை வளாகத்தி லேயே குடிசை அமைத்து அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசை களுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதேபோல் ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் , பரமத்தி வேலூர் டி.எஸ்.பி கலை யரசன் மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீ சார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து காரில் வந்த, கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசே கரன்(28), தமிழரசன்(26), சுதன்(25), பிரபு(37), சண்மு கசுந்தரம்(43), பிரகாஷ்(29) ஆகிய 6 பேரை ஜேடர்பா ளையம் போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக அப்பகு தியில் மேலும் அசம்பாவி தங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, 350-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜேடர்பாளையம் பகுதி யில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் நித்யாவின் உறவினர்க ளுக்கு இந்த தீ வைப்பு சம்ப வத்தில் தொடர்பு இருக்க லாம் என்று கூறப்படும் நிலையில், அவர்களை அழைத்து போலீசார் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். வன்முறை களுக்கு தீர்வு காண வேண்டும். பதட்டமான சூழ்நிலை தொடர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நாமக்கல் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமையும் சிறப்பு முகாம் மூலம் வரி செலுத்தும் வசதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த முன் வரவில்லை.
- நாள் ஒன்றுக்கு 50 வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு களை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வரு வதாக நகராட்சி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இனி வரும் நாட்களில் இந்த நடவ டிக்கை மேலும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்ற னர். இதில் 20,300 குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 130 லிட்டர் வீதம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், சாக்கடை கட்டணம் உள்ளிட்ட நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி களை செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நாமக்கல் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமையும் சிறப்பு முகாம் மூலம் வரி செலுத்தும் வசதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த முன் வரவில்லை.
இதனால் வரி செலுத்த முன்வராதவர்களின் வீடு களில் குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் அதிரடி காட்டி வருகிறது. நாள் ஒன்றுக்கு 50 வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு களை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வரு வதாக நகராட்சி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இனி வரும் நாட்களில் இந்த நடவ டிக்கை மேலும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.
- கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- விவசாய தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை கேரளா அரசை போல் 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பல்லக்காபாளையம், தட்டான்குட்டை, கொக்கா ராயண்பேட்டை பகுதியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீடுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம்:
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயலா ளர் குருசாமி தலைமை வகித்தார்.
விவசாய தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை கேரளா அரசை போல் 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பல்லக்காபாளையம், தட்டான்குட்டை, கொக்கா ராயண்பேட்டை பகுதியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீடுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில நிர்வாகிகள் செல்வராஜ், துரைசாமி, சங்க கிளை நிர்வாகிகள் சம்பூர்ணம், சின்னத்தாயி, குமார், சக்திவேல், முருகே சன், ஆறுமுகம், குமார் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் முடிந்து தங்கள் கோரிக்கை கள் அடங்கிய மனுவினை விவ சாயிகள் தாசில்தார் சண்முகவேலிடம் வழங்கி விட்டு சென்றனர்.
- காந்திநகர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு 4 பேர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவர்களி டமிருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள், பணம் ரூ.1200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே காந்திநகர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு 4 பேர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் பவானியை சேர்ந்த சுரேஷ்(வயது 38,), ஈரோட்டை சேர்ந்த பாஸ்கரன்( 48,) கனகராஜ்( 28,) குப்பாண்டபாளை யத்தை சேர்ந்த சவுந்தர்( 27,) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களி டமிருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள், பணம் ரூ.1200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டி பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவர் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாதாரம் செய்ததாக கூறப்படுகிறது.
- அதன் பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரங்கனை கைது செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டி பட்டியை சேர்ந்தவர் ரங்கன் (வயது 50), கூலி தொழிலாளி.
இவர் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாதாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரங்கனை கைது செய்தனர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு ரங்கன் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர்த் திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- ஏப்ரல் 1-ந் தேதி கருட வாகனம், 2-ந் தேதி சேச வாகனம், 3-ந் தேதி யானை வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகின்றன.
நாமக்கல்:
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேர்த் திருவிழா நடைபெறும்.
அதன்படி நடப்பாண்டில் பங்குனி தேர்த் திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 30-ந் தேதி பல்லக்கு புறப்பாடு, சிம்ம வாகனத்தில் சாமி வீதியுலா, 31-ந் தேதி அனுமந்த வாகனம், ஏப்ரல் 1-ந் தேதி கருட வாகனம், 2-ந் தேதி சேச வாகனம், 3-ந் தேதி யானை வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெறுகின்றன.
4-ந் தேதி 10 மணிக்கு நரசிம்மர் நாமகிரி தாயார் திருக்கல்யாணம், 5-ந் தேதி குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு, திருவேடு பரி உற்சவம் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. பிற்பகல் 4.30 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.
7-ந் தேதி சப்த வர்ணம் கஜலட்சுமி வாகனம் வீதி உலா, 8-ந் தேதி வசந்த உற்சவம், 9-ந் தேதி விடையாட்சி உற்சவம், 10-ம் தேதி புஷ்ப பல்லக்கு, 11-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் 12-ந் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
- வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 70) என்பவர் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், ஆலை வளாகத்திலேயே குடிசை அமைத்து அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசைகளுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதேபோல் ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் , பரமத்தி வேலூர் டி.எஸ்.பி கலை யரசன் மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து காரில் வந்த, கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன்(28), தமிழரசன்(26), சுதன்(25), பிரபு(37), சண்மு கசுந்தரம்(43), பிரகாஷ்(29) ஆகிய 6 பேரை ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக அப்பகுதியில் மேலும் அசம்பாவி தங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, 350-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜேடர்பாளையம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் நித்யாவின் உறவினர்களுக்கு இந்த தீ வைப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அவர்களை அழைத்து போலீசார் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். வன்முறைகளுக்கு தீர்வு காண வேண்டும். பதட்டமான சூழ்நிலை தொடர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆணையர் (பொ) ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்தினர் வாடகையை செலுத்த சொல்லி நேரில் பலமுறை அறிவுறித்தினர்.
- மேலும் குறிப்பிட்ட காலத்தில் வாடகை செலுத்தாத கடைகள் சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், வார சந்தை வளாகம், பாலக்கரை உள்ளிட்ட பல இடங்களில் நகராட்சி கடைகள் உள்ளன. இதில் பலரும் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.
வருட கடைசி என்பதால் வாடகை நிலுவை உள்ள கடையினரிடம், ஆணையர் (பொ) ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்தினர் வாடகையை செலுத்த சொல்லி நேரில் பலமுறை அறிவுறித்தினர்.
அதையும் மீறி வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உத்தரவின் பேரில் பாலக்கரை, பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் உள்ள 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட காலத்தில் வாடகை செலுத்தாத கடைகள் சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.
- காவல் துறையினருக்கான தடகள விளை யாட்டுப் போட்டிகள் திருச்சியில் 3 நாட்கள் நடைபெற்றது.
- இந்த போட்டியில் கோவை மேற்கு மண்டல காவல்துறை சார்பில், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிகு மார், 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
நாமக்கல்:
தமிழ்நாடு காவல்துறை சார்பில், 62-வது மாநில அளவிலான காவல் துறையினருக்கான தடகள விளை யாட்டுப் போட்டிகள் திருச்சியில் 3 நாட்கள் நடைபெற்றது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் போலீஸ் துறையில் பணி புரியும் தடகள வீரர்கள், வீராங்கனைகள் போட்டி யில் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியில் கோவை மேற்கு மண்டல காவல்துறை சார்பில், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிகு மார், 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலைய பெண் போலீஸ் ஏட்டு அமுதா, குண்டு எறி தல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
எருமப்பட்டி போலீஸ் நிலைய ஏட்டு ரமேஷ், நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்ப தக்கம் வென்றார். ராசிபுரம் போக்குவரத்து போலீஸ் நிலைய பெண் போலீஸ் ஏட்டு அருள்மொழி நீளம் தாண்டுதலில் தங்கப்ப தக்கமும், 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும் பெற்றார்.
திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலைய ஏட்டு ராதாகிருஷ்ணன் நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். மாநில தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்த நாமக்கல் மாவட்ட போலீசாரை, எஸ்.பி., கலைச்செல்வன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
- குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கழிவு நீர் செல்லும் கோம்பு பள்ளம் கால்வாய் உள்ளது.
- கோம்பு பள்ளம் கால்வாய் கான்கிரீட் தளம் அமைத்து சீரமைக்கப்பட்டு, பள்ளத்தின் மையப் பகுதியில் கழிவுநீர் செல்லும்படி பாதை அமைக்கப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கழிவு நீர் செல்லும் கோம்பு பள்ளம் கால்வாய் உள்ளது. இது கத்தேரி பகுதியில் தொடங்கி காவிரி ஆற்றங்கரையோரம் மணிமேகலை வீதி வரை செல்கிறது. சமீபத்தில் இந்த கோம்பு பள்ளம் கால்வாய் கான்கிரீட் தளம் அமைத்து சீரமைக்கப்பட்டு, பள்ளத்தின் மையப் பகுதியில் கழிவுநீர் செல்லும்படி பாதை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்க ளின் இன்னல்களைப் போக்கும் வகையில், கோம்பு பள்ளத்தை தூய்மை படுத்தி, பள்ளத்தின் மையப்பகுதியில் கழிவுநீர் எளிதில் செல்லும்படி, அடைப்பு களை நீக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, பொக்லின் மூலம் கோம்பு பள்ளம் தூர் வாரப்பட்டது. மேலும் கோம்பு பள்ளத்தில் குப்பைகள் கொட்டுவோர் குறித்து சி.சி.டி.வி. கேமரா வைத்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






