என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு தீ வைத்த 6 பேர் கைது
    X

    வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு தீ வைத்த 6 பேர் கைது

    • காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 70) என்பவர் வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், ஆலை வளாகத்திலேயே குடிசை அமைத்து அங்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மாலை வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த இந்த குடிசைகளுக்கு மர்மநபர்கள் சிலர் தீ வைத்தனர். இதேபோல் ஜேடர்பாளையம் அருகே வி.புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம்( 50) என்பவரின் ஆலையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் தங்கி உள்ள குடிசைகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் , பரமத்தி வேலூர் டி.எஸ்.பி கலை யரசன் மற்றும் போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காரில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து காரில் வந்த, கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன்(28), தமிழரசன்(26), சுதன்(25), பிரபு(37), சண்மு கசுந்தரம்(43), பிரகாஷ்(29) ஆகிய 6 பேரை ஜேடர்பாளையம் போலீசார் கைது செய்தனர். காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக அப்பகுதியில் மேலும் அசம்பாவி தங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, 350-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜேடர்பாளையம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் நித்யாவின் உறவினர்களுக்கு இந்த தீ வைப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அவர்களை அழைத்து போலீசார் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். வன்முறைகளுக்கு தீர்வு காண வேண்டும். பதட்டமான சூழ்நிலை தொடர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×