என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • மோகனூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு 2022-2023 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
    • மோகனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயபாலா தலைமை வைத்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு 2022-2023 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களான சின்ன பெத்தாம்பட்டி ,ஒருவந்தூர், அரூர், ஆண்டாபுரம், மாடகாசம்பட்டி, நன்செய் இடையார் , காளிபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பண்ணை கருவிகள் கிட்டுகளான கடப்பாரை, மண்வெட்டி-1, களைக்கொத்து-1, கதிர்அறிவாள்-1, மற்றும் காரைச்செட்டி-1 ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது .

    விழாவிற்கு மோகனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயபாலா தலைமை வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மோகனூர் வட்டார அட்மா குழு தலைவர் நவலடி, வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பண்ணை கருவிகள் தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் சுரேஷ் ,துணை வேளாண்மை அலுவலர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்த னர்.

    • தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் சுகாதார துறை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு‌‌ நாமக்கல் எம்.பி. சின்ராஜ் தலைமை வகித்து பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்ட–கங்களை‌ வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்தில் சுகாதார துறை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்.பி. சின்ராஜ் தலைமை வகித்து பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நல்லூர் வட்டார மருத்துவர் மேகலா முன்னிலை வகித்தார். ஜல்லிகட்டு பேரவை தலைவர் மதுராசெந்தில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு கண்ணாடிகளை வழங்கினார்.

    மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன் விழாவில் கலந்து கொண்டு பொது சுகாதாரத் துறையின் கீழ் நடைபெறும் திட்டங்கள் பற்றியும், மருத்துவ முகாம்களில் நடைபெறும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் குறித்தும் விளக்க உரையாற்றினார்.

    முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேர்ந்தெ–டுக்கப்பட்ட நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 2 குழந்தைகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    விழாவில் பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், சரவணன், அட்மா திட்ட தலைவர் தன்ராஜ், பேரூர் பேரூராட்சி தலைவர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பரமத்தி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 23.73 குவிண்டால் எடை கொண்ட 8,012 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.55-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.15-க்கும், சராசரி விலையாக ரூ.25.15-க்கும் என மொத்தம் ரூ.58ஆயிரத்து 121-க்கு விற்பனையானது.

    228.02 குவிண்டால் எடை கொண்ட 467-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.78.76-க்கும், சராசரி விலையாக ரூ.83.19-க்கும் விற்பனை ஆனது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.99-க்கும், சராசரி விலையாக ரூ.76.91-க்கும் என மொத்தம் ரூ.17லட்சத்து 73ஆயிரத்து 500-க்கு விற்பனையானது.

    36.35 குவிண்டால் எடை கொண்ட 50-மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.165.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.144.10-க்கும், சராசரி விலையாக ரூ.158.10-க்கும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்து 218-க்கு விற்பனையானது.

    194.25 குவிண்டால் எடை கொண்ட 592-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.30-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் என மொத்தம் ரூ.14 லட்சத்து 6ஆயிரத்து 875-க்கு விற்பனையானது.சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.38 லட்சத்து 3 ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.

    • பொத்தனூர் பேரூராட்சியில் சிறப்பு ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 7 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடைபெற்றது.
    • முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் சிறப்பு ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 7 மற்றும் 8-வது வார்டு பகுதிகளில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர் துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம்,வார்டு உறுப்பினர்,தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    இதையொட்டி பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வாறுதல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.

    • பைக் மெக்கானிக். இவரது மனைவி கலைவாணி (வயது 52). இவர்களது மகன் சுபாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
    • மகன் இறந்த துக்கத்தில் கலைவாணி மனம் உடைந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். பைக் மெக்கானிக். இவரது மனைவி கலைவாணி (வயது 52). இவர்களது மகன் சுபாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதன் காரணமாக மகன் இறந்த துக்கத்தில் கலைவாணி மனம் உடைந்து, உடல்நிலை பாதிக்கப்–பட்டார். இதனால் அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கலைவாணி வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து விட்டார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல்நிலை மிகவும் மோசமானதால் மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் கலைவாணியை அவரது உறவினர்கள் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே கலைவாணி உயிரிழந்தார்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கலைவாணி–யின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி நடந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.

    வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலை வகித்தார். விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.

    அட்மா திட்டத்தின் செயல்பாடுகள், திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    கூட்டத்தில், நாமக்கல் வட்டார கால்நடை உதவி மருத்துவர் வெள்ளைசாமி, பட்டு உதவி ஆய்வாளர் சாந்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் கங்காதரன், உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த மானியத்திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

    முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் நன்றி கூறினர். 

    • சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி, அங்கன்வாடி மையங்கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • சோழசிராமணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.29 லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்து கால்வாய் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சிக்கு உட்பட சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி, அங்கன்வாடி மையங்கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சோழசிராமணி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து புத்தகங்களை வாசிக்க செய்து கலெக்டர் பார்வை யிட்டார். அதனை தொடர்ந்து சோழசிராமணி ஊராட்சி அங்கன்வாடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகளின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை, குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்ட றிந்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    பின்னர் சோழசிராமணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.29 லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்து கால்வாய் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணி யினை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அலுவ லர்களுக்கு அறிவுறுத்தி னார். இந்த ஆய்வின் போது, கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் துரைசாமி, பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே நேற்று இரவு அங்குள்ள ட்ரான்ஸ்பார்ம ரில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
    • நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள ராமநா யக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 54). மின்வாரிய ஊழி யரான இவர், நேற்று இரவு அங்குள்ள ட்ரான்ஸ்பார்ம ரில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர், புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், விஸ்வ நாதனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதற்கி டையே அங்கு வந்த விஸ்வநாதன் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். போலீ சார் நடத்திய விசா ரணையில், விஸ்வநாதன் மின்சார வாரிய ஆய்வாள ராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மின்வாரிய ஊழியர் விடுமுறையில் சென்ற நிலையில், இவர் டிரான்ஸ்பார்மரில் ஏறி பணி செய்தபோது, எதிர்பா ராத விதமாக மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பரமத்தி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுதிறன் கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இதில் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுதிறன் கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கான பயிற்சி முகாம் நடை பெற்றது. பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுபா, மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ராமேஷ், ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கருத்தாளர்களாக கிராம சுகாதார செவிலியர் சிந்தாமணி, அங்கன்வாடி பணியாளர் விஜயலட்சுமி, இயன்முறை மருத்துவர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டு சரியான உடல் சமநிலை மற்றும் குழந்தைகளை தூக்கி செல்லும் முறைகள், ஆரம்பகால குறைபாடுகள் அடையாளம் கண்டு கொள்ளுதல், மருத்துவம் உள்ளடக்கிய கல்வி மையங்களில் வழங்கப்படும் சேவைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

    சிறப்பு பயிற்றுநர்கள் கவிதா, மகேஷ்வரி மற்றும் பெரியசாமி ஆகியோர் குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் மாற்றி அமைப்பதன் முக்கியத்துவம் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் உதவி உபகரணங்கள் மற்றும் அதன் பராமரிப்பு பற்றி பேசினர்.

    இதில் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

    • குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
    • இருப்பினும் குப்பை எடுப்பதில்லை, வடிகால் அடைப்பை நீக்குவது இல்லை என நாளுக்கு நாள் புகார் அதிகரித்து வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை, 60 ஆயிரத்திற்கும் மேலான வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். குப்பைகள் வீடு, வீடாக சேகரிப்பது, சாலையில் கொட்டப்பட்ட குப்பைகளை சேகரிப்பது, ஓட்டல் கடைகளில் கழிவுகள் சேகரிப்பது, வடிகால் அடைப்பை நீக்கி, கழிவுநீர் எளிதில் செல்லும்படி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

    இருப்பினும் குப்பை எடுப்பதில்லை, வடிகால் அடைப்பை நீக்குவது இல்லை என நாளுக்கு நாள் புகார் அதிகரித்து வருகிறது. கடந்த மாத நகரமன்ற கூட்டத்தில் இது குறித்து அனைத்து வார்டு கவுன்சிலர்கள் புகார் கூறினார்கள். அதனால் தூய்மை பணியா ளர்களின் மேஸ்திரிகளை கூட்ட அரங்கில் வரவழைத்து புகார் வராத வகையில் பணியாற்ற வேண்டும் என சேர்மன் கமலக்கண்ணன் தூய்மை பணியாளர்களிடம் கூறினார்.

    • 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, வட்டமலை அருகே உள்ள தையல் பயிற்சி பள்ளியில், தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.
    • நேற்று முன்தினம் மொபட்டில் தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல்(வயது 47). விசைத்தறி தொழிலாளி. இவரது 16 வயது மகள் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, வட்டமலை அருகே உள்ள தையல் பயிற்சி பள்ளியில், தையல் பயிற்சிக்கு சென்று வந்தார்.

    நேற்று முன்தினம் மொபட்டில் தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணாததால் இதுகுறித்து கதிர்வேல், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • 3 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
    • இன்று பரமத்தி வட்டாரத்தில் அர்த்தநாரிபாளையம் கிராமத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இன்று பரமத்தி வட்டாரத்தில் அர்த்தநாரிபாளையம் கிராமத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது.

    நாளை எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள தூசூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், கொல்லிமலை வட்டாரத்தில் செம்மேடு வல்வில் ஓரி அரங்கிலும் சுகாதார திருவிழா நடைபெற உள்ளது.

    இம்முகாமில் ஆண், பெண் தனித்தனி மருத்துவ நிபுணர்கள் மூலம் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளனர். இதில் அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    கர்ப்பிணிகளுக்கான முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு பிணி உதவி திட்டத்திற்கான ஆலோசனை வழங்கப்படும். மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×