என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகன் இறந்த துக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை
- பைக் மெக்கானிக். இவரது மனைவி கலைவாணி (வயது 52). இவர்களது மகன் சுபாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
- மகன் இறந்த துக்கத்தில் கலைவாணி மனம் உடைந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். பைக் மெக்கானிக். இவரது மனைவி கலைவாணி (வயது 52). இவர்களது மகன் சுபாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதன் காரணமாக மகன் இறந்த துக்கத்தில் கலைவாணி மனம் உடைந்து, உடல்நிலை பாதிக்கப்–பட்டார். இதனால் அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கலைவாணி வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து விட்டார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல்நிலை மிகவும் மோசமானதால் மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் கலைவாணியை அவரது உறவினர்கள் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே கலைவாணி உயிரிழந்தார்.
இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கலைவாணி–யின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






