என் மலர்
நாமக்கல்
- ரோஜா நகரை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 59). ரிக் வண்டியில் டிரில்லராக வேலை பார்த்து வந்தார்.
- சீரங்கனுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எர்ணாபுரம், அத்தியப்பம்பாளையம், ரோஜா நகரை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 59). ரிக் வண்டியில் டிரில்லராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செல்வி (49).
சீரங்கனுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி தனது மனைவியிடம் நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் சீரங்கன் தனது மருமகன் அருண்பாண்டியனுக்கு போன் செய்து, வீட்டிற்கு அருகில் உள்ள ஊஞ்சகாட்டில் விஷம் குடித்து உயிருக்கு போராடுவதாக கூறி
யுள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற அருண்பாண்டியன், சீரங்கனை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சீரங்கன் உயிரிழந்தார். இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமசாமி என்பவரின் மனைவி பாவாயி (வயது 60) ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கடந்தார்.
- தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள முருங்கைக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவரது கரும்பு தோட்டத்தில் நேற்று ஓடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி பாவாயி (வயது 60) ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கடந்தார்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பாவாயிக்கு அவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
கணவரும், மகனும் இறந்துவிட்ட நிலையில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் இவர் வேலை செய்து வந்ததும், ஞாயிற்றுக்கிழமைகளில் அடுப்புக்கு தேவையான தென்னை மட்டைகள் விறகுகளை சேகரித்து வருவதற்காக கரும்பு தோட்டங்கள் நிறைந்த மூக்கு பாறை பகுதிக்கு இவர் சென்று வருவது வழக்கம் என்பதும் தெரியவந்தது.
இதே போல் நேற்று விறகு சேகரித்து வருவதற்காக வீட்டில் இருந்து சென்ற போது மர்ம நபர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தப்பி ஓடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவரது கையில் தங்க வளையல் இருந்தபோதிலும் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் மர்ம நபர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கழுத்தில் கலந்த செயலை பரிசு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சந்தேகத்தின் பேரில் 3பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் பேருந்துகள் பல, பெரும்பாலும் பல்லக்காபாளையம் ஊருக்குள் செல்லாமல், சேலம் கோவை புறவழிச்சாலை வழியாக சென்று விடுகிறது.
- இதனால் இந்த கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பல முக்கிய வேலையாக செல்லும் பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கிராமம் உள்ளது. குமாரபாளையம் நகரில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்துகள் பல, பெரும்பாலும் பல்லக்காபாளையம் ஊருக்குள் செல்லாமல், சேலம் கோவை புறவழிச்சாலை வழியாக சென்று விடுகிறது.
இதனால் இந்த கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பல முக்கிய வேலையாக செல்லும் பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பகலில் சேலம் செல்வதற்காக பவானியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பல்லக்காபாளையம் புறவழிச்சாலை வழியாக சேலம் சென்றது. உடனே பொதுமக்கள் சாலையின் குறுக்கே நின்று, பேருந்தை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர்.
நடத்துனர், ஓட்டுனரிடம் இது குறித்து வாக்குவாதம் செய்து முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தவழியாக போக்கு வரத்து பாதித்தது. சாலையில் செல்ல முடியாமல் பல வாகனங்கள் வரிசையாக நின்றன.
இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார், மறியல் நடந்த பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இனி பேருந்து ஊருக்குள் வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி கூறினர். இதையடுத்து, பொதுமக்கள் பேருந்தை விடுவித்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
- நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
- தினசரி காலை 9 மணிக்கு ஸ்ரீ 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.
நாமக்கல்:
நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்ச நேயர் சுவாமி, சாந்த சொரூ பியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நாள்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் திரளான பக்தர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, தினசரி காலை 9 மணிக்கு ஸ்ரீ 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.
தொடர்ந்து 10 மணிக்கு வடை மாலை கழற்றப்பட்டு, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதனையடுத்து சுவாமிக்கு மலர் அங்கி, வெள்ளிக்க வசம், தங்கக்கவசம், முத்தங்கி போன்ற சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கும், கட்டளைதாரர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், சுவாமிக்கு தேர்த்திருவிழா நடைபெறும்.
பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமைய முன்னிட்டு, காலை 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சா மிர்தம் போன்ற பொருட்க ளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கனகாபி சேகத்துடன் அபிசேகங்கள் நிறைவு பெற்றது.
தொடர்ந்து, திரையிடப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடை பெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை நடை பெற்றது. பின்னர் பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோயில் உதவி கமிஷ னர் இளையராஜா நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை செய்திருந்தார். நாமக்கல் கோட்டை பகுதியில் பக்தர்கள் நெரிசல் அதிகமாக இருந்ததால், போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
- நாமக்கலில் 8 கோடிக்கு மேலான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
- இதன் மூலம் தினசரி 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கலில் 8 கோடிக்கு மேலான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடம் வகிக்கிறது. ஆனால் போதுமான விலை கிடைக்காததால் முட்டை உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடைவதாக கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் நோ மைனஸ் நெக் ரேட் வேண்டும் என்பதே பெரும்பான்மையான பண்ணையாளர்களின் கருத்தாக இருந்தது.
அதேபோல் முட்டை விலை நிர்ணயம் தற்போதுள்ள நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்பது பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தாக இருந்தபோதிலும் நோ மைனஸ் நெக்ரேட் என்று வைக்கும் பொழுது அதனை சிறப்பாக மற்றும் சரிவர நடைமுறைப்படுத்த தினசரி விலை இருந்தால் தான் முடியும்.
இதனால் தினசரி விலையும் நாமக்கல்லில் அமூல்படுத்தப்பட உள்ளது. இதே போல வரும் காலங்களில் என்.இ.சி.சி மட்டுமே விலை அறிவிப்பு செய்ய வேண்டும் என்பது பெரும்பான்மையான பண்ணையாளர்களின் கருத்தாக இருப்பதால் மற்ற அமைப்புகள் விலை அறிவிப்பு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் லயன் மார்ஜின் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி என்.இ.சி.சி விலை மற்றும் தினசரி விலை என்பது மே 1-ந்தேதி முதல் அமுல்படுத்தப்படும். என்.இ.சி.சி விலை மற்றும் தினசரி விலையை அமல்படுத்த 50 லட்சம் கோழிகளுக்கு ஒரு குழு என்ற வகையில் நாமக்கல் மண்டலத்தில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தக் குழுக்களின் அறிவுரையின் படி வரும் காலங்களில் முட்டை விலை மற்றும் கோழி விலை நிர்ணயம் செய்வது மட்டுமல்லாமல் என்.இ.சி.சி விலை, அதாவது நோ மைனஸ் நெக்ரேட் மற்றும் தினசரி விலை கண்டிப்பாக நடைமுறைப் படுத்தப்படும்.
பண்ணையாளர்கள் அனைவரும் நோ மைனஸ் நெக் ரேட் அமுல்படுத்தப்படும் பொழுது அதற்கான ஒத்துழைப்பை நல்கினால் மட்டுமே நோ மைனஸ் நெக்ரேட் என்பதை நடைமுறைப்படுத்த முடியும். எனவே என்.இ.சி.சி அமைப்பு பண்ணையாளர்களின் நலன் கருதி எடுக்கும் முடிவுகளை ஆதரித்து அனைவரும் இணைந்து பலனடைவோம் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
- சரவணன் (வயது 37) விவசாயி குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
- இந்நிலையில் நேற்று இரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே மாணிக்கநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 37) விவசாயி.
இவர் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்த மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க தொடங்கினர்.
மேலும் இது குறித்து நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் குடிசை வீட்டில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பீரோ, மின்விசிறி, கிரைண்டர், மிக்சி மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், ரொக்கம் ரூ.25 ஆயிரம், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமானது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. தீ விபத்து குறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரேயா சிங் தலைமையில் அடுத்த மாதம் 12-ந்தேதி மோடமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.
- பொதுமக்களிடமிருந்து முன் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் நடைபெற்றது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் அடுத்த மாதம் 12-ந்தேதி மோடமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற வுள்ளது. அதனையொட்டி மோடமங்கலம் ஈ.சேவை மையத்தில் தங்கள் குறைகள் கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து முன் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் நடைபெற்றது.
இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை, ஒரே பட்டாவாக மாற்றுதல், இலவச வீட்டுமனை பட்டா, உட்பிரிவு பட்டா, புதிய ரேசன் கார்டுகள் பெற என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான 144 மனுக்களை கொடுத்தனர். இதில் வட்டாட்சியர் சண்முக வேலு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கம், வருவாய் ஆய்வாளர் கார்த்திகா, கிராம நிர்வாக அலுவலர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த மனுக்களுக்கு 12-ந்தேதி நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் தீர்வு காணப்பட்டு நல உதவிகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பழைய பை-பாஸ் சாலையில் அரிமா சங்கம் சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முக்கோண பூங்கா கட்டப்பட்டது.
- அதில் உயரமான மின்கம்பங்கள் அமைத்து 4 புறமும் வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூருக்குள் நுழையும் இடத்தில் பழைய பை-பாஸ் சாலையில் அரிமா சங்கம் சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு முக்கோண பூங்கா கட்டப்பட்டது.
அதில் உயரமான மின்கம்பங்கள் அமைத்து 4 புறமும் வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பூச்செடிகளை வைத்து பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்களால் இந்த முக்கோண பூங்கா உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அதில் இருந்த ஒரு பகுதி இரும்பு கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பூங்காவின் சுவற்றை இடித்து, அதில் இருந்த இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
சுவற்றை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த சுவற்றை பரமத்திவேலூர் அரிமா சங்க நிர்வாகிகள் கட்டித்தர முன் வரவேண்டும் என்றனர்.
இது குறித்து வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில் சேதப்படுத்தப்பட்ட முக்கோண பூங்கா பற்றிய தகவல் கிடைத்தவுடன் பார்த்து வந்தோம். இரும்பு கம்பியை திருடிய மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் செய்யப்படும் என்றனர்.
- தனக்கு சொந்தமான எருமை மாடுகளை காவிரி ஆற்று பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டிருந்தார்.
- அப்போது அப்பகுதியில் உள்ள சேற்றில் எருமை மாடு சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தனக்கு சொந்தமான எருமை மாடுகளை காவிரி ஆற்று பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள சேற்றில் எருமை மாடு சிக்கிக் கொண்டு வெளியில் வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதைபார்த்த கண்ணன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் எருமை மாட்டை மீட்க முயற்சி செய்தார். ஆனால் மாட்டை மீட்க முடியவில்லை.
இதுகுறித்து கண்ணன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, சேற்றில் சிக்கிக்கொண்ட எருமை மாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- சிவபெருமானுக்கும், நந்தி பெருமானுக்கும் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமான், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமான், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்,
எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூரில் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர் பாளையம் சிவன் கோவில்,
பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்தி பெருமானுக்கும் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- வரும் 27-ந் தேதி மாலை தீமிதி விழா நடைபெறுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை எடுத்து சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று மறுக்காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து குழந்தை வேண்டுதல் வைத்த பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்தவுடன் குடும்ப சகிதமாக கரும்பில் தொட்டி கட்டி குழந்தையை படுக்க வைத்து கோவிலை சுற்றி வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோவிலை அங்க பிரதட்சணம் செய்தனர்.
வரும் 27-ந் தேதி மாலை தீமிதி விழா நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் எட்டுப்பட்டி ஊர் தர்மகத்தா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- திருச்செங்கோடு சாலையில் ஒரு பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு குடோன் உள்ளது.
- இந்த குடோனில் நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
பள்ளிப்பாளையம்:
பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் ஒரு பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு குடோன் உள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த ராஜகணபதி என்பவர் நடத்தி வருகிறார். இங்கு பள்ளிப்பாளையம் சுற்று பகுதியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பழைய இரும்பு பொருட்கள், தொழிற்சாலை கழிவு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த குடோனில் நள்ளிரவு ஒரு மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. இதுபற்றி வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர். நள்ளிரவு தொடங்கிய தீயணைக்கும் பணி அதிகாலை 3 மணிவரை நடந்தது. இந்த விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் வரை பிளாஸ்டிக் பொருட்கள் சேதமடைந்தி ருக்கலாம் என தெரிகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக நள்ளிரவில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.






