என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன.
    • பல இடங்களில், முழுமையாக கட்டணம் வசூலித்து காலாவதியான சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூடாமல் வைத்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகின்றன. இதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வட மாநிலங்களுக்கு சென்று வருகின்றன.

    சுங்க கட்டணம் மற்றும் டீசல் உயர்வு, இன்சூரன்ஸ் கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுங்க கட்டணம் உயர்வு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் பல ஆண்டுகளாக அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

    பல இடங்களில், முழுமையாக கட்டணம் வசூலித்து காலாவதியான சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூடாமல் வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சுங்கச்சாவடிகளில் வருமானம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் சுங்கக் கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு ஆண்டும், சுங்க கட்டணத்தை, தனியார் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் உயர்த்தி வருகின்றனர். இதைக்கண்டித்து, வரும் ஏப்ரல் 1-ந் தேதி 11 மணிக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி, அனைத்து உறுப்பு சங்க நிர்வாகிகளும், தங்களுடைய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்களுடன், தங்களது பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் திரளாக கலந்துகொண்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, சம்மேளனத்தின் ஒற்றுமையையும், லாரி உரிமையாளர்களின் பலத்தையும் நிரூபித்து, ஆர்ப்பாட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மின்னக்கல் பிள்ளை–யார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 54). இவர் ராசிபுரத்தில் கடந்த 29 ஆண்டுகளாக வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
    • வக்கீல் ரகுபதி வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் ரத்தினவேல் மனைவி கல்பனாவுக்கும் (40) இடையே அடிதடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள மின்னக்கல் பிள்ளை–யார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 54). இவர் ராசிபுரத்தில் கடந்த 29 ஆண்டுகளாக வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் மின்னக்கல் பகுதியைச் சேர்ந்த பூபதி (30), இவரது மனைவி காயத்ரி ஆகியோருக்கும், வக்கீல் ரகுபதி வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் ரத்தினவேல் மனைவி கல்பனாவுக்கும் (40) இடையே அடிதடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் பூபதி மற்றும் அவரது மனைவி காயத்ரிக்கு ஆதரவாக வக்கீல் ரகுபதி செயல்–பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் வக்கீல் ரகுபதி மீது ஆத்திரம் அடைந்த கல்பனா, வக்கீலின் வீட்டிற்கு சென்று வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லை–யென்றால் உன்னையும், உன் குடும்பத்தாரையும் கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டல் விடுத்தனர்.

    இதுபற்றி ரகுபதி வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்பனாவை கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    • 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இந்த கோழிகள் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை குறைந்துள்ளதால் கடும் நஷ்டம் ஏற்படுவதாக முட்டை உற்பத்தியாளர்கள் கூறி வருகிறார்கள். மேலும் அதிக அளவில் மைனஸ் விலை கேட்பதால் தொழில் நடத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினமும் மைனஸ் விலையையும் அறிவித்து வருகிறது.

    தற்போது முட்டை விலை 460 காசுகளாக உள்ளது. அதன்படி, இன்று இந்த மைனஸ் விலை 30 என்ற அளவிற்கு மிகாமல் விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எவரேனும் 30 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள் அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

    • குமாரபாளையம் பகுதியில் சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
    • இந்நிலையில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அடிக்கடி ஏற்படும் மின்தடையால், கோடை வெப்பம் தாங்காமல் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பெய்த மழையால், கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு, குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் ஸ்டாண்ட் கடைகளின் வழியாக ஓடியது.

    • முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் வேட்டாம்பாடி கிராமத்தில் மானிய விலையில் வேளாண் இடுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.
    • விவசாயிகளை வரவேற்று, திட்டத்தின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் வேட்டாம்பாடி கிராமத்தில் மானிய விலையில் வேளாண் இடுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

    வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து விவசாயிகளை வரவேற்று, திட்டத்தின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

    அட்மா குழு தலைவர் பழனிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் மற்றும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    முகாமுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் மோகன், உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கிராம ஊராட்சியில் நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சியின் கணக்கு தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
    • கடந்த 19-ந் தேதி இரவு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. கடந்த 19-ந் தேதி இரவு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    காப்பு கட்டும் விழா

    அதனை தொடர்ந்து செல்லாண்டி அம்மன், கொங்கலம்மன் கோவில்களி லும் காப்பு கட்டும் விழா நடைபெற்றது. நேற்று முதல் வருகிற 25-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்கார மும் நடைபெறுகிறது.

    அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

    26-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், கிராம சாந்தியும் நடைபெறுகிறது. 27-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை தினந்தோறும் கட்டளை தாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

    ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், பரிவட்டம் சூட்டுதலும் நடைபெறுகிறது.

    4-ந் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. 5-ந் தேதி இரவு பொங்கல், மாவிளக்கு பூஜையும், 6-ந் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், 7-ந் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

    • சின்னாக்கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் லோகேஷ் (வயது 29). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
    • ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலுக்கு குளிக்க சென்றார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சின்னாக்கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் லோகேஷ் (வயது 29). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, அங்கு குளித்துக் கொண்டிருந்த லோகேஷை காணவில்லை. அவர் வீட்டிற்கு சென்று விட்டதாக நினைத்து அவரது நண்பர்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு லோகேஷ் வராததை அறிந்த நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்கள், மீண்டும் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதிக்கு சென்றனர்.

    அங்குள்ள ராஜா வாய்க்காலில் மீனவர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் லோகேஷை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் மீண்டும் நேற்று காலை நாமக்கல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் லோகேஷை தேடினர்.

    அப்போது, லோகேஷ் உடல் ஜேடர்பாளையம் பரிசல்துறை அருகே உள்ள ராஜா வாய்க்காலில் கரை ஒதுங்கி இருந்தது. இதையடுத்து லோகஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் விழா தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடைபெற்றது.
    • 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறப்புகளை பள்ளியின் இடைநிலை ஆசிரியை சத்யா விளக்கி கூறினார்கள்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் விழா தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடைபெற்றது.

    1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறப்புகளை பள்ளியின் இடைநிலை ஆசிரியை சத்யா விளக்கி கூறினார்கள். அரும்பு, மொட்டு, மலர் என்ற மூன்று பிரிவுகளில் செயல்வழி கற்றல், ஆடல், பாடல், கதை சொல்லுதல், உள்பட மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எளிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி ரவி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கனகராஜ், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் கணேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • உளுந்து பயிரில் விளைச்சலை அதிகப்படுத்த புதிதாக வம்பன்-11 ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
    • இந்த ரக விதைகள் மூலம் விதைப்பண்ணைகளை அமைத்தால் மகசூல் அதிகரிக்கும். கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

    பரமத்திவேலூர்:

    விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-உளுந்து பயிரில் விளைச்சலை அதிகப்படுத்த புதிதாக வம்பன்-11 ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த ரக விதைகள் மூலம் விதைப்பண்ணைகளை அமைத்தால் மகசூல் அதிகரிக்கும். கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

    மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலை சுருங்கும் வைரஸ் நோய்கள் தாக்காத வண்ணம் எதிர்ப்பு சக்தி வம்பன்-11 ரக விதைகளுக்கு உள்ளது. மேலும் அதிக காய் பிடிக்கும் திறன் கொண்டது.

    ஒரே மாதிரியான முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது. ஏக்கருக்கு சராசரியாக 380 கிலோ மகசூல் தர கூடியது.

    இது வம்பன் 8 ரகத்தை விட 12 சதம் கூடுதலாகும். ஆடி, புரட்டாசி, சித்திரை என அனைத்து மாதங்களிலும் இந்த விதைகளை பயன்படுத்தி பயிர்சாகுபடி செய்யலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் உளுந்து விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விதைப்பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்து கூடுதல் லாபம் பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ஜேடர்பாளையம் பகுதியில் இருந்து கைதான 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
    • ஜேடர்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று குறித்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேட்டை பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை, அங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு கடந்த 16-ந் மாலை மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இதேபோல் வடகரையாத்தூர் ஊராட்சி வி.புதுப்பாளையத்தில் இருந்த வெல்லம் தயாரிக்கும் ஆலை, வடமாநிலத் தொழிலாளர்களின் குடிசைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த ஜேடர்பாளையம் போலீசார், அதே பகுதியை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். அவர்களை பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதற்காக, 6 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பிரபு (வயது 27), பிரகாஷ் (29) ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதையடுத்து, இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா மருத்துவ சிகிச்சை சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஜேடர்பாளையம் பகுதியில் இருந்து கைதான 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் ஜேடர்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று குறித்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெண்ணந்தூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அத்த னூர் பகுதியில் பிரசித்தி பெற்ற கொங்கண சித்தர் கோவில் உள்ளது.
    • அதனை அருகாமையில் உள்ள சித்தர் மலைப்பகுதியில் வீசி சென்று உள்ளனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அத்த னூர் பகுதியில் பிரசித்தி பெற்ற கொங்கண சித்தர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த போகர் சிலை, அகத்தியர் சிலை, பாம்பாட்டி சிலை களை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அதனை அருகாமையில் உள்ள சித்தர் மலைப்பகுதியில் வீசி சென்று உள்ளனர்.

    கோவில் சிலைகளை சேதப்படுத்தி மலைப் பகுதியில் வீசிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை. இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×